கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>காற்றில் பறக்கும் கட்டாயக்கல்வி சட்டம்: மாணவ, மாணவியர் அவதி

கட்டாயக் கல்விச் சட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும், சுகாதாரமான கழிப்பிட வசதி ஏற்படுத்துவது அவசியம் என, வலியுறுத்தப்பட்டிருந்தாலும், இன்னும் பெரும்பாலான அரசு பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு முழுமையான கழிப்பிட வசதி செய்து தரப்படவில்லை.
பல்வேறு நிதிவசதி இருந்தும், பள்ளி தலைமை ஆசிரியர்கள் இதற்கான நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவது, பெற்றோரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
தமிழகத்தில், 5,000க்கும் மேற்பட்ட அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும், 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நடுநிலை மற்றும் துவக்கப் பள்ளிகளும் உள்ளன. இந்நிலையில், 2010 ஆகஸ்ட் மாதத்தில் தமிழகத்தில் கட்டாயக் கல்விச் சட்டம் அமல்படுத்தப்பட்டது.
இச்சட்டத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாயமாக கல்வி வழங்கப்பட வேண்டும் என்பதோடு மட்டுமின்றி, அனைத்து குழந்தைகளுக்கும் சுகாதாரமான கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, வகுப்பறை வசதிகளையும் கட்டாயமாக உருவாக்கத் தர வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.
கழிப்பிட விசயத்தில் உச்சநீதிமன்றமும் தலையிட்டு, மிக விரைவில் அனைத்து பள்ளிகளிலும் கழிப்பிடம் கட்டப்பட வேண்டும் என, வலியுறுத்தியுள்ளது. ஆனால், தமிழகத்தில் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, கழிப்பிட வசதியை ஏற்படுத்த தலைமை ஆசிரியர்கள் முன்வந்துள்ளனர்.
அனைவருக்கும் கல்வி இயக்ககம், அனைவருக்கும் இடைநிலைக்கல்வி இயக்ககம் ஆகியவற்றிலிருந்து கழிப்பிடம் கட்டுவதற்கான நிதியும் அரசுப்பள்ளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இதனால், 80 சதவிகித அரசு பள்ளிகளில் கழிப்பிட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால், பெரும்பாலான பள்ளிகள் அதற்கு போதிய தண்ணீர் வசதி ஏற்படுத்தித்தராமல், உபயோகத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையில் வைத்துள்ளன. கட்டாயக்கல்விச்சட்டம் எந்த அளவுக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்த மனித உரிமைகள் குழு, மாவட்டந்தோறும் ஆய்வு நடத்தி வருகிறது. இதில் சேலம் மாவட்டம் தலைவாசல், ஆத்தூர் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் ஆய்வு நடத்தியது.
இங்கு பெரும்பாலான பள்ளிகளில் கழிப்பிட வசதி இல்லாமலும், கழிப்பிடம் இருந்தும் அதை உபயோகப்படுத்த முடியாத நிலையில் பராமரிப்பில் அலட்சியம் காட்டி வருவதையும் கண்டுபிடித்துள்ளது. கட்டாயக்கல்விச்சட்ட ஷரத்துகள் அமல்படுத்துவதில் பள்ளிகளில் அலட்சிய நிலையையும் சுட்டிக்காட்டி, மாவட்டக்கல்வி நிர்வாகத்தையும் கடுமையாக சாடியுள்ளது.
இதுகுறித்து கல்வித்துறை அலுவலர்கள் கூறியதாவது: அனைத்து பள்ளிகளுக்கும் குடிநீர் வசதிக்கு, தமிழ்நாடு வடிகால் வாரியத்தின் மூலம் இணைப்பு வழங்க அரசாணை உள்ளது. ஆனால், அவற்றை கழிப்பிடத்துக்கு பயன்படுத்த முடியாது. பெரும்பாலான பள்ளிகளில் கழிப்பிட வசதி இருந்தும், தண்ணீர் வசதி ஏற்படுத்தவில்லை. இதற்கு எஸ்.எஸ்.ஏ., ஆர்.எம்.எஸ்.ஏ., ஆகிய திட்டங்களில் நிதி இருந்தும், அவற்றை கொண்டு, செய்து தரத் தலைமை ஆசிரியர்கள் முன்வருவதில்லை.
இவற்றை மாவட்ட கல்வி அலுவலர்களும் கண்காணிப்பதில்லை. இதனால் தண்ணீர் இருந்தும், கழிப்பிடம் இருந்தும் பயன்படுத்த முடியாத நிலை பல பள்ளிகளில் உள்ளது. கழிப்பிடம் இல்லாமல் மாணவ, மாணவியர் படும் அவஸ்தையை நினைத்து பார்த்தாவது, பள்ளி தலைமை ஆசிரியர்களோ, பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிளோ அவற்றை சீராக்க முன்வரவேண்டும். அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை சரிய, இந்த அலட்சிய போக்கும் முக்கிய காரணம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

08-01-2025 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-01-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால்: பொருட்பால் அதிகாரம்:மருந்து குறள...