நீலம் புயல் இன்று கரையை கடக்கும் போது, கனமழை பெய்யும் என்பதால்,
அரியலூர், கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், திருவாரூர், சென்னை,
காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள
பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து விடுமுறை
அறிவிக்கப்பட்டு வருவதால், கல்வித்துறை நிர்ணயித்தபடி, நவம்பருக்குள்,
அரையாண்டு பாடத் திட்டங்களை முடிக்க வேண்டும் எனில், இனி, சனிக்கிழமைதோறும்
பள்ளிகளை நடத்தினால் தான் முடியும் என, ஆசிரியர்கள் கருத்து
தெரிவிக்கின்றனர். இம்மாதம், 2ம் தேதி, காந்தி ஜெயந்தி, 23ல் ஆயுத பூஜை, 24ல் விஜயதசமி,
27ல் பக்ரீத் என, நான்கு நாள், அரசு விடுமுறை விடப்பட்டது. கடந்த சில
தினங்களாக, தொடர்ந்து பெய்து வரும் மழையால், கடலூர், நாகை, விழுப்புரம்,
அரியலூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட, சில மாவட்டங்களில்,
பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. புயல் காரணமாக, சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட, பல்வேறு மாவட்டங்களில்,
நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. புயல், கரையை கடக்கும்
போது, கனமழை பெய்யும் என்பதால், அரியலூர், கடலூர், விழுப்புரம்,
பெரம்பலூர், திருவாரூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும்
திருவண்ணாமலை ஆகிய, ஒன்பது மாவட்டங்களுக்கு, இன்று விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி, தொடர்ந்து, பள்ளிகளுக்கு விடுமுறை
அறிவிக்கப்படுவதால், கல்வித்துறை நிர்ணயித்த காலத்திற்குள்,
பாடத்திட்டங்களை முடிக்க முடியாத நிலை, ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:
அரையாண்டு தேர்வுக்கான பாடத் திட்டங்களை, நவம்பர் இறுதிக்குள் முடிக்க
வேண்டும். அதிகபட்சமாக, டிசம்பர் முதல் வாரம் வரை, கால அவகாசம்
வழங்கப்படுகிறது. மழையால், சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில்,
பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை விடப்படுகிறது. இந்த நாட்களை, ஈடு செய்ய வேண்டும் எனில், அரையாண்டு தேர்வு வரை, அனைத்து
சனிக்கிழமைகளிலும், பள்ளிகளை நடத்துவதைத் தவிர, வேறு வழியில்லை.
சனிக்கிழமைகளில், பள்ளியை நடத்த வேண்டும் என, இதுவரை, கல்வித்துறை எவ்வித
உத்தரவையும் வழங்கவில்லை. எனினும், பாடத்திட்டங்களை முடிக்க, பள்ளி நிர்வாகங்களே, சனிக்கிழமையும்,
அரை நாள் பள்ளியை நடத்தலாம். அதன்படி, சனிக்கிழமைகளில் பள்ளியை நடத்தி,
பாடத்திட்டங்களை முடிக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல்
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 14-11-2024
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 14-11-2024 - School Morning Prayer Activities... அனைத்து குழந்தைகளுக்கும் இனிய குழந்தைகள் தின வாழ்த்...