அனைவருக்கும் கல்வி திட்டத்தில், பள்ளிகளுக்கு, விசிட் வரும்
குழுக்களுக்கான செலவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாததால், மேற்பார்வையாளர்கள்
மாதந்தோறும், 3,000 ரூபாய் வரை சொந்தப் பணத்தை செலவு செய்ய வேண்டிய
கட்டாயம் உருவாகியுள்ளது. அனைவருக்கும்
கல்வி திட்டத்தின் கீழ், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை, கல்வியின்
தரம், பள்ளியில் வசதி மேம்படுத்துதல், புதிய கல்வி முறை, ஆசிரியர்களுக்கு
பயிற்சி உள்ளிட்ட செயல்திட்டங்கள் அமல்படுத்தப்படுகிறது. இவற்றை பார்வையிட,
அவ்வப்போது மாநில அளவில் மற்றும் மத்திய மனிதவளத் துறையில் இருந்து ஆய்வு
செய்யவும், பள்ளிகளை பார்வையிடவும், பல்வேறு குழுக்கள் வருகை தருகின்றன. சேலம் மாவட்டத்தில், 21 வட்டார வளமையங்கள் அமைந்துள்ளன. இவற்றில்
மேற்பார்வையாளர்களாக உள்ளவர்களிடமே, இக்குழுவினை அழைத்து செல்லும்
செலவுகளை, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஒப்படைத்து விடுவதால்,
மேற்பார்வையாளர்கள் தங்களது சொந்தப் பணத்தை செலவு செய்ய வேண்டிய கட்டாயம்
உருவாகியுள்ளது. இதுகுறித்து சேலம் மாவட்ட வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் சிலர்
கூறியதாவது: கடந்த மாதத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் மாலதி தலைமையிலான
ஆய்வுக்கு, அனைத்து வட்டார வளமையங்களிலும் ஆய்வு நடத்தியது. நான்கு பேர் வரை அதிலும், பெண்களும் இருப்பதால், கார் மூலமாகவே
பள்ளிக்கு அழைத்து செல்ல வேண்டியுள்ளது. மேலும் அவர்களுக்கு மதிய உணவு
உள்ளிட்ட செலவுகளையும் சேர்த்து, 2,000 முதல், 3,000 ரூபாய் வரை செலவானது.
இதில் திட்ட நிதியிலும் எவ்வித ஒதுக்கீடும் செய்யப்படவில்லை. இதை செய்ய
வேண்டிய மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களோ, தங்களுக்கு சம்பந்தம் இல்லை என,
ஒதுங்கி கொள்கின்றனர். இதனால் கடந்த மாதமே, சொந்த பணத்தை செலவு செய்தோம். தற்போது அன்னை தெரஸா
பல்கலையில் இருந்து, ஆய்வுக்குழு அனைத்து வட்டார வளமையங்களிலும் ஆய்வு
நடத்தி வருகிறது. இதன் செலவையும் வழக்கம் போல, மேற்பார்வையாளர்களிடமே
ஒப்படைத்துள்ளனர். இதனால் ஒவ்வொரு மாதமும், 3,000 ரூபாய் வரை மேற்பார்வையாளர்கள் தங்களது
சொந்தப்பணத்தில் இருந்து செலவு செய்ய வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-07-2025
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-07-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: குறள் 91: இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவ...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.