கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>முதன்முதலாக கணினி அடிப்படையில் டிஎன்பிஎஸ்சி தேர்வு

டிஎன்பிஎஸ்சி, முதன்முதலாக, பேப்பர் இல்லாத ஒரு தேர்வை, டிசம்பர் 9ம் தேதி நடத்தவுள்ளது. பயோமெட்ரிக் முறையில் தேர்வர்கள் அடையாளம் காணப்படுவார்கள். இத்தேர்வின் மூலம், பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணிகள் நிரப்பப்படவுள்ளன. இந்தப் புதிய முறையைப் பற்றி டிஎன்பிஎஸ்சி தலைவர் நடராஜ் கூறியதாவது: கேள்வித் தாளானது, தேர்வு ஆரம்பிப்பதற்கு 1 மணிநேரம் முன்னதாக லோட் செய்யப்படும். தேர்வெழுதுபவர் ஒரு குறிப்பிட்ட பாஸ்வேர்ட் மூலமாக டவுன்லோட் செய்துகொள்ளலாம். ஒவ்வொரு தேர்வருக்கும் ஒரு கணினி வழங்கப்படும் மற்றும் கேள்வித்தாள் திரையில் தெரியும். இதை எழுதுவதற்கு ஒரு தேர்வர், கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. Objective முறையில் இருக்கும் கேள்விக்கு, சரியான விடையை Mouse -ஐ நகர்த்தி கிளிக் செய்தால் போதும். அதேசமயம், ஒருவர் அளித்த பதிலை மாற்றவும் முடியும்.
தேர்வெழுதி முடித்தப் பின்னர் ஒருவர், பதிலளித்த கேள்வித்தாளை பிரின்ட் எடுத்துக் கொள்ளவும் முடியும். இத்தேர்வுக்கான Key answers, தேர்வு முடிந்த மறுநாள் வெளியிடப்படும். தேர்வரின் அடையாளத்தை உறுதி செய்யும் பொருட்டு, முதன்முறையாக, பயோமெட்ரிக் சிஸ்டம் பயன்படுத்தப்படுகிறது. இத்தேர்வில், சில ஆயிரம் தேர்வர்கள்(candidates) கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள். தேவைப்படும் கணினிகளை வழங்க, தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கணினியில் வரும் கேள்வித்தாளுக்கு பதிலளிக்கும் பொருட்டு, தேர்வர்களுக்கு பயிற்சியளிக்க, www.tnpsc.gov.in வலைத்தளத்தில், மாதிரி கேள்வித்தாள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஒருவர் இதுகுறித்து தெளிவுபெற, 18004251002 என்ற இலவச எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் அல்லது contacttnpsc@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். தேர்வு முடிந்தவுடன், பதிலளிக்கப்பட்ட ஆன்லைன் தாள்கள், TNPSC -க்கு மாற்றப்படும். இதன்மூலம், தேர்வு முடிந்த அதேநாளிலேயே, முடிவுகளை வெளியிட முடியும். இப்புதிய தேர்வு முறை வெளிப்படையானது மட்டுமின்றி, எளிமையானதும் கூட. இதன்மூலம் தேர்வெழுதுபவரின் நேரமும் மிச்சமாகிறது. மேலும், பிரின்ட் செய்யப்பட்ட கேள்வித்தாள்கள் மற்றும் பதிலளிக்கப்பட்ட தாள்களை இடமாற்றம் செய்கையில் ஏற்படக்கூடிய முறைகேடு அபாயங்களை முற்றிலும் தவிர்க்க இயலும். இந்த கணினி அடிப்படையிலான தேர்வில், அறிமுகத்தை ஏற்படுத்த, ஒரு மாதிரித் தேர்வை டிஎன்பிஎஸ்சி கமிஷன் நடத்தவுள்ளது. இத்தேர்வானது, தோட்டக்கலை அலுவலர், உதவி பொறியாளர், முதுநிலை ஆசிரியர் மற்றும் பள்ளி உதவியாளர் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படுகிறது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The completion of direct inspection conducted by Minister Anbil Mahesh Poiyamozhi in all 234 constituencies

234 தொகுதிகளிலும் உள்ள பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மேற்கொண்ட நேரடி ஆய்வு நிறைவு The completion of direct inspection...