கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>குரூப்-4 ‌தேர்வு முதல் கலந்தாய்வு

"ஜூலையில் நடந்த, குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, இம்மாதம், 18ம் தேதி முதல், டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில், கலந்தாய்வு நடக்கும்,'' என, தேர்வாணைய தலைவர் நடராஜ் கூறினார்.தேர்வாணையம், தட்டச்சர், சுருக்கெழுத்தர், இளநிலை உதவியாளர் உள்பட, குரூப்-4 நிலையில், 10 ஆயிரத்து 793 காலி பணியிடங்களை நிரப்ப, ஜூலை, 7ம் தேதி, போட்டித் தேர்வை நடத்தியது. 12.33 லட்சம் பேர் விண்ணப்பம் செய்ததில், 10 லட்சம் பேர், தேர்வில் பங்கேற்றனர். இதன் முடிவுகள், சமீபத்தில் வெளியிடப்பட்டன. இந்நிலையில், சென்னையில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடராஜ் கூறுகையில்,""குரூப்-4 தேர்வில், தேர்வு பெற்றவர்களுக்கு, 18ம் தேதி முதல், தேர்வாணைய அலுவலகத்தில் கலந்தாய்வு நடக்கும். குரூப்-1 முக்கியத் தேர்வின் முடிவு, விரைவில் வெளியிடப்படும்,'' என, நிருபர்களிடம் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

06-06-2025 அன்று திருச்சியில் நடைபெற்ற முப்பெரும் விழா குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் பதிவு

06-06-2025 அன்று திருச்சியில் நடைபெற்ற முப்பெரும் விழா குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு  மாண்புமிகு ம...