கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>கல்வி துறையில் 1,000 இளநிலை உதவியாளர்கள் விரைவில் நியமனம்

கல்வித்துறையில், 1,000 இளநிலை உதவியாளர்கள் மற்றும், 120 தட்டச்சர்கள், விரைவில், ஆன்-லைன் கலந்தாய்வு வழியில், நியமிக்கப்பட உள்ளனர்.
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வில், பள்ளி கல்வித் துறைக்கு, சுருக்கெழுத்தர்கள், 35 பணியிடங்கள், இளநிலை உதவியாளர் பணியிடங்கள், 1,000 மற்றும் தட்டச்சர் பணியிடங்கள், 120 ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில், சுருக்கெழுத்தர்கள், சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டனர். தட்டச்சர் பணியிடங்கள் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வானவர்களின் பெயர் பட்டியலை, ஓரிரு நாளில், பள்ளி கல்வித் துறைக்கு, தேர்வாணையம் வழங்க உள்ளது. பட்டியல் வந்ததும், "ஆன்-லைன்" கலந்தாய்வு வழியில், இளநிலை உதவியாளர்கள் மற்றும் தட்டச்சர்களை நியமனம் செய்ய, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக, அனைத்து ஏற்பாடுகளும், தயார் நிலையில் உள்ளன. பெரும்பாலான பணியிடங்கள், மாவட்டங்களில் உள்ள கல்வி அலுவலகங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில், நிரப்பப்பட உள்ளன.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2025-2026 New Income Tax Rates

    Budget Update: 2025-2026 புதிய வருமான வரி விகிதங்கள் வரம்பு 2025-2026 New Income Tax Rates • ₹0- 4 Lakh : NIL • ₹4 Lakh - ₹8 Lakh : 5% •...