கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>டிசம்பர் 15 [December 15]....

நிகழ்வுகள்

  • 1256 - மொங்கோலியப் பேரரசன் குலாகு கான் அலாமுட் (இன்றைய ஈரானில்) என்ற இடத்தைக் கைப்பற்றி அழித்தான்.
  • 1799 - முற்றிலும் உள்ளூர் மக்களைக்கொண்ட முதலாவது ஆங்கில செமினறி கொழும்பில் அமைக்கப்பட்டது.
  • 1864 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் கூட்டமைப்புப் படைகளை டென்னசியில் முற்றாகத் தோற்கடித்தனர்.
  • 1891 - ஜேம்ஸ் நெய்ஸ்மித் கூடைப்பந்தாட்டத்தை முதன் முதலாக அறிமுகப்படுத்தினார்.
  • 1905 - அலெக்சாண்டர் புஷ்கினின் கலாசாரப் பழமைகளைப் பேணும் பொருட்டு சென் பீட்டர்ஸ்பேர்க்கில் புஷ்கின் மாளிகை அமைக்கப்பட்டது.
  • 1914 - முதலாம் உலகப் போர்: சேர்பிய இராணுவம் பெல்கிரேடை மீண்டும் கைப்பற்றியது.
  • 1914 - ஜப்பானில் மிட்சுபிஷி நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 687 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1941 - பெரும் இன அழிப்பு: உக்ரேனின் ஆர்க்கிவ் நகரில் 15,000 யூதர்கள் நாசிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
  • 1960 - மன்னர் மகேந்திரா நேபாளத்தின் அரசைக் கலைத்து நாட்டின் முழு அதிகாரத்தையும் தனதாக்கிக் கொண்டார்.
  • 1965 - த சவுண்ட் ஒஃப் மியூசிக் திரைப்படம் வெளியானது.
  • 1967 - ஒகையோவில் ஒகையோ ஆற்றிற்கு மேலே செல்லும் வெள்ளிப் பாலம் உடைந்து வீழ்ந்ததில் 46 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1970 - சோவியத் ஒன்றியத்தின் வெனேரா 7 விண்கலம் வெள்ளி கோளின் மேற்பரப்பில் மெதுவாக இறங்கிய முதலாவது கலமாகும். இதுவே வேறொரு கோளின் மீது இறங்கிய முதலாவது விண்கலமாகும்.
  • 1970 - தென் கொரியப் பயணிகள் கப்பல் கொரிய நீரிணையில் மூழ்கியதில் 308 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1978 - மக்கள் சீனக் குடியரசை அங்கீகரிப்பதாகவும் தாய்வானுடனான உறவுகளைத் துண்டிப்பதாகவும் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் அறிவித்தார்.
  • 1994 - இணைய உலாவி நெட்ஸ்கேப் நவிகேட்டர் 1.0 வெளியிடப்பட்டது.
  • 1995 - ஈழத் தமிழருக்கு ஆதரவு தெரிவித்து திருச்சியில் "அப்துல் ரவூஃப்" என்பவர் தீக்குளித்து இறந்தார்.
  • 1997 - தஜிகிஸ்தான் விமானம் ஒன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா விமானநிலையத்திற்கு அருகில் வீழ்ந்து நொருங்கியதில் 85 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1997 - தென் கிழக்கு ஆசியாவை அணுவாயுதமற்ற பகுதியாக அறிவிக்கும் உடன்படிக்கை பாங்கொக்கில் கையெழுத்திடப்பட்டது.
  • 2001 - பீசாவின் சாயும் கோபுரம் 11 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டது.
  • 2006 - கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கொழும்பில் இனம் தெரியாத ஆயுததாரிகளினால் கடத்தப்பட்டார்.

பிறப்புக்கள்

  • 37 - நீரோ மன்னன், ரோமப் பேரரசன் (இ. 68)
  • 1832 - அலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல், பிரெஞ்சுப் பொறியியலாளர் (இ. 1923)
  • 1852 - ஹென்றி பெக்கெரல், நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு இயற்பியலாளர் (இ. 1908)
  • 1936 - சோ. ந. கந்தசாமி, தமிழறிஞர்
  • 1971 - ஜீவ் மில்க்கா சிங், இந்திய கோல்ஃப் விளையாட்டு வீரர்

இறப்புகள்

  • 1675 - ஜொஹான்னெஸ் வெர்மீர், நெதர்லாந்து நாட்டு ஓவியர் ஆவார் (பி. 1632)
  • 1950 - சர்தார் வல்லபாய் பட்டேல், இந்திய அரசியல் தலைவர் (பி. 1875)
  • 1966 - வால்ட் டிஸ்னி, கார்ட்டூன் ஓவியர் (பி. 1901)

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

School students staged road blockade in support of suspended teacher

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள் School students staged road blockade in support of sus...