கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>டிசம்பர் 25 [December 25]....

நிகழ்வுகள்

  • 800 - சார்லமேன் புனித ரோமப் பேரரசனாக முடிசூடினான்.
  • 1000 - ஹங்கேரிப் பேரரசு முதலாம் ஸ்டீபனின் கீழ் கிறிஸ்தவ நாடாக உருவாக்கப்பட்டது.
  • 1066 - முதலாம் வில்லியம் இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான்.
  • 1643 - கிறித்துமசு தீவு கண்டுபிடிக்கப்பட்டு பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் ரோயல் மேரிகப்பலின் தலைவன் வில்லியம் மைநோர்ஸ் என்பவரால் இத்தீவுக்கு கிறித்துமசுத் தீவு எனப் பெயரிடப்பட்டது.
  • 1741 - ஆண்டர்ஸ் செல்சியஸ் தனது செல்சியஸ் வெப்பமானியைக் கண்டுபிடித்தார்.
  • 1758 - ஹேலியின் வால்வெள்ளி ஜொகான் பாலிட்ச் என்னும் ஜெர்மனியரால் அவதானிக்கப்பட்டது.
  • 1868 - அமெரிக்க உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட அனைத்து கூட்டமைப்புப் படைவீரர்களுக்கும் பொது மன்னிப்பை அமெரிக்க அதிபர் அண்ட்ரூ ஜோன்சன் அறிவித்தார்.
  • 1914 - முதலாம் உலகப் போர்: ஜேர்மனிக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் கிறித்துமசு நாள் போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது.
  • 1926 - ஜப்பானின் டாயீஷோ மன்னன் இறந்தான். அவனின் மகன் ஹிரோஹிட்டோ அரசனானான்.
  • 1932 - சீனாவின் கான்சு நகரில் 7.6 நிலநடுக்கம் ஏற்பட்டதில் ~70,000 பேர் இறந்தனர்.
  • 1941 - இரண்டாம் உலகப் போர்: ஹொங்கொங் மீதான ஜப்பானின் முற்றுகை ஆரம்பமாயிற்று.
  • 1947 - சீனக் குடியரசின் அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது.
  • 1968 - கூலி அதிகம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 42 தலித் மக்கள் தமிழ்நாட்டில் கீழ்வெண்மணி கிராமத்தில் உயிருடன் தீயிட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
  • 1977 - இஸ்ரேல் பிரதமர் பெகின் எகிப்திய அதிபர் அன்வர் சதாத்தை சந்தித்தார்.
  • 1979 - சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்தானில் தனது படைகளை பெருமளவில் இறக்கியது.
  • 1989 - ருமேனியாவின் முன்னாள் கம்யூனிசத் தலைவர் நிக்கொலாய் செய்செஸ்குவுக்கும் அவரது மனைவிக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர்.
  • 1990 - உலகளாவிய வலைத் திட்டம் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
  • 1991 - சோவியத் தலைவர் பதவியில் இருந்து மிக்கைல் கொர்பச்சோவ் விலகினார். அடுத்த நாள் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது.
  • 1991 - உக்ரேன் சோவியத் ஒன்றியத்தில் இருந்து விலகியது.
  • 2003 - மார்ஸ் எக்ஸ்பிரஸ் விண்கலத்தில் இருந்து டிசம்பர் 19 இல் ஏவப்பட்ட பீகில் 2 விண்கலம் தரையில் இறங்வதற்கு சற்று முன்னர் காணாமல் போனது.
  • 2004 - காசினி விண்கப்பலில் இருந்து சனிக் கோளின் சந்திரனான டைட்டானில் இறக்குவதற்காக ஹியுஜென்ஸ் என்ற சேய்க்கலம் விடுவிக்கப்பட்டது. இது ஜனவரி 14, 2005 இல் டைட்டானில் இறங்கியது.

பிறப்புகள்

  • 1642 - ஐசக் நியூட்டன், ஆங்கில இயற்பியலாளர் மற்றும் கணிதவியலாளர் (இ. 1727)
  • 1876 - முகமது அலி ஜின்னா, பாகிஸ்தானைத் தோற்றுவித்தவர் (இ. 1948)
  • 1906 - ஏர்ணஸ்ட் ருஸ்கா ஜெர்மானிய இயற்பியலாளர், நோபல் விருதாளர் (இ. 1988)
  • 1918 - அன்வர் சதாத், எகிப்திய தலைவர், நோபல் விருதாளர் (இ. 1981)
  • 1919 - நௌஷாத் அலி, இந்திய இசைக்கலைஞர் (இ. 2006)
  • 1924 - அடல் பிஹாரி வாஜ்பாய், முன்னாள் இந்தியப் பிரதமர்
  • 1927 - ராம் நாராயண், இந்துஸ்தானி இசைக்கலைஞர்
  • 1949 - நவாஸ் ஷெரீப், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர்

இறப்புகள்

  • 1796 - வேலு நாச்சியார், ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் போராளி (பி. 1730)
  • 1931 - பா. வே. மாணிக்க நாயக்கர், அறிவியல் தமிழ் வளர்த்த தமிழிஞர் (பி. 1871)
  • 1977 - சார்லி சாப்ளின், ஹாலிவுட் நடிகர் (பி. 1889)
  • 1994 - ஜெயில் சிங், முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர். (பி. 1916)
  • 2006 - தமிழோவியன், இலங்கையின் மலையகத்தின் மூத்த இலக்கியவாதியும் கவிஞரும்
  • 2006 - ஜேம்ஸ் ப்ரௌன், இசையறிஞர் (பி. 1933)

சிறப்பு நாள்

  • கிறிஸ்துமஸ் - கிறிஸ்து இயேசுவின் பிறப்பை குறிக்கும் முக்கிய பண்டிகை.
  • பாகிஸ்தான் - தேசிய விடுமுறை (முகமது அலி ஜின்னா பிறந்த நாளை முன்னிட்டு)

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Shield Ceremony for 114 Best Schools - DEE Proceedings, Dated : 08-11-2024

   மாவட்டத்திற்கு 3 பள்ளிகள் வீதம் 38 மாவட்டங்களில் 114 சிறந்த பள்ளிகளுக்கு 14-11-2024 அன்று கேடயம் வழங்கும் விழா - தொடக்கக்கல்வி இயக்குநரின...