கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>சென்னை பல்கலை தொலைதூர கல்வி முதுகலை தேர்வுகள் 29ல் துவக்கம்

சென்னை பல்கலைக்கழக, முதுகலை மற்றும் தொழில் கல்வி தொலைதூர படிப்பிற்கான தேர்வுகள், இம்மாதம் 29ம் தேதி துவங்குகிறது. சென்னை பல்கலை, தொலைதூர கல்வி நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும், எம்.ஏ., - எம்.எஸ்சி., - எம்.காம்., - எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., - எம்.எஸ்சி., (ஐ.டி.,) பி.எல்.ஐ.எஸ்., - எம்.எல்.ஐ.எஸ்., உள்ளிட முதுகலை மற்றும் தொழில் கல்வி படிப்புகளுக்கான தேர்வுகள், 29ம் தேதி துவங்கி, 2013 பிப்ரவரி 17ம் தேதி வரை நடக்கிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் தேர்வுகள் நடக்க உள்ளன. தேர்வு அட்டணையும், தேர்வு நடைபெறும் மையங்கள் குறித்த முழு தகவல்களும், தபால் மூலம், மாணவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட்டுகளை, தேர்வு நடைபெறுவதற்கு மூன்று நாள்களுக்கு முன், தேர்வு மையத்தில் பெற்று கொள்ளலாம். தேர்வு அட்டவணை, தேர்வு மைய தகவல்கள், மாதிரி வினாத்தாள் உள்ளிட்ட தகவல்கள் மற்றும் ஹால் டிக்கெட்டை சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி நிறுவன இணையதளத்தில், www.ideunom.ac.in என்ற முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, தொலைதூர கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

12-03-2025 - School Morning Prayer Activities

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 12-03-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால்: பொருட்பால் அதிகாரம்: சான்றாண்மை...