கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>தமிழக அரசின் இலவச லேப்-டாப் கேரளாவில் ரூ.6,000க்கு விற்பனை

 
பிளஸ் 2 மாணவர்களுக்கு, தமிழக அரசு வழங்கிய, இலவச லேப்-டாப்கள், கேரளாவின் பல இடங்களிலும், 6,000 ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளன. அதே போல், இலவச கிரைண்டர், தொலைக்காட்சி பெட்டிகளும், பலரது வீடுகளில் பயன்பாட்டில் உள்ளன.

கடந்த ஆண்டு, தமிழகத்தில், சட்டசபை தேர்தல் நடந்த போது, அ.தி.மு.க., சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், பிளஸ் 2 மாணவர்களுக்கு, லேப் - டாப்களும், வீடுகளுக்கு மிக்சி, மின் விசிறி, கிரைண்டர் போன்றவையும் இலவசமாக வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.தேர்தலில் வெற்றி பெற்ற பின், அ.தி.மு.க., அரசு சார்பில், அறிவித்தபடி, பிளஸ் 2 மாணவர்களுக்கு, இலவச லேப் - டாப்களும், வீடுகளுக்கு மிக்சி, மின் விசிறி, கிரைண்டர் போன்றவையும், வழங்கப்பட்டு வருகின்றன.தற்போதைய தமிழக அரசால், வழங்கப்பட்ட இவையும்; முந்தைய, தி.மு.க., அரசால் வழங்கப்பட்ட, இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகளும், கேரளாவின் பல பகுதிகளிலும் விற்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழக அரசால் வழங்கப்பட்ட இவை எல்லாம், அடுத்த சில நாட்களிலேயே, கேரளாவில் விற்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

லேப்-டாப், கிரைண்டர், மிக்சி, மின்விசிறி போன்றவற்றில் முதல்வர் ஜெயலலிதா படமும், தமிழக அரசின் சின்னமும், வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகளில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படமும் இடம் பெற்றிருக்கும். இவைதான், கேரளாவில் விற்கப்பட்டுள்ளன. கேரளா, இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த பலனின் வீடுகளில், இவை புழக்கத்தில் உள்ளன. பிளஸ் 2 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட, லேப்-டாப்களில் பல, பயன்படுத்தப்படாமலேயே, 6,000 ரூபாய் முதல், 10 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்பட்டுள்ளன. ஏற்கனவே, தமிழக அரசால் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட ஆடுகள், கசாப்பு கடைகளுக்கு விற்கப்பட்டது தொடர்பாக, சமீபத்தில் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Aadhaar Correction - தேவையான ஆவணங்கள், விதிமுறைகள் மற்றும் வரம்புகள்

ஆதார் திருத்தம் - தேவையான ஆவணங்கள், விதிமுறைகள் மற்றும் வரம்புகள் Aadhaar Correction - Required Documents, Terms and Limitations UIDAI (Uniq...