கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>பொறியியல் மாணவர்களுக்கு கணினி வழி கற்றல் : பி.எஸ்.என்.எல்., அறிமுகம்

 
"கணினி வழி கற்றல் முறை (elearning), கிராமப்புற பொறியியல் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்,'' என, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி பேசினார்.
"போதி அக்சஸ் சொலுயூசன்ஸ்' (Bothi Access Solutions) நிறுவனம், பி.எஸ்.என்.எல்., உடன் இணைந்து, பொறியியல் மாணவர்கள், தங்கள் பாடங்களை, கணினி வழி கற்கும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், இவ்வசதியை துவக்கி வைத்து, அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி பேசியதாவது:
பொறியியல் கல்லூரிகளில், நல்ல ஆசிரியர்கள், நூலகங்கள் மற்றும் புத்தகங்கள் பற்றாக்குறையால், பொறியியல் கல்வியின் தரம் குறைந்து வருகிறது. இந்நிலையில், பொறியியல் பாடங்களை, மாணவர்கள், கணினி வழி கற்றல் முறையில், எளிதாக பயிலும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது."இ-லேர்னிங்' எனப்படும் இந்த கற்றல் முறை, நகர்ப்புற மாணவர்களுக்கு மட்டுமின்றி, கிராமப்புற பொறியியல் மாணவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.இவ்வாறு பாலகுருசாமி பேசினார்.
"போதி அக்சஸ் சொலுயூசன்ஸ்' நிறுவன தலைவர் ரமேஷ் கூறியதாவது:
கம்ப்யூட்டர் சயின்ஸ், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட ஏழு பொறியியல் பட்டப்படிப்புகளுக்கான, 231 பாடங்களை, "இ-லேர்னிங்' முறையில் கொண்டு வந்துள்ளோம்.
"செமஸ்டர்' வாரியாக, மாணவர்கள், தங்களுக்கு தேவைப்படும் பாடங்களை தேர்ந்தெடுத்து படிக்கலாம். இம்முறையில் உள்ள சிறப்பம்சங்கள், கட்டண விவரம் உள்ளிட்ட விவரங்களை, www.bodhiaccess.com என்ற இணையதளத்தில் பெறலாம்.
இவ்வாறு ரமேஷ் கூறினார்.நிகழ்ச்சியில், மின்வாரிய விஜிலென்ஸ் ஐ.ஜி., சீமா அகர்வால், பி.எஸ்.என்.எல்., தலைமை பொது மேலாளர் பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

School students staged road blockade in support of suspended teacher

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள் School students staged road blockade in support of sus...