கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>மருத்துவ படிப்புக்கு நுழைவுத்தேர்வு: உச்ச நீதிமன்றம் அனுமதி

மருத்துவப் படிப்புக்கு, பொது நுழைவுத் தேர்வை நடத்த, இந்திய மருத்துவக் கவுன்சிலான, எம்.சி.ஐ.,க்கு, உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதே நேரத்தில், அடுத்த உத்தரவு வரும் வரை, தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது என, தடை விதித்துள்ளது.எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளில் சேருவதற்கு, நாடு முழுவதும் ஒரே மாதிரியான, பொது நுழைவுத் தேர்வை நடத்தும் திட்டத்தை, எம்.சி.ஐ., அறிவித்தது. இதற்கு, பல மாநிலங்களிலும் எதிர்ப்பு கிளம்பியது.எம்.சி.ஐ.,யின் அறிவிப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்திலும், மற்ற பல உயர் நீதிமன்றங்களிலும் வழக்குகள் தொடரப்பட்டன. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், சமீபத்தில், தலைமை நீதிபதி, அல்தாமஸ் கபீர் தலைமையிலான, பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தன.அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: எம்.சி.ஐ., நிர்வாகம், தாங்கள் அறிவித்தபடி, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான, அகில இந்திய அளவிலான, பொது நுழைவுத் தேர்வை நடத்தலாம்.அதேபோல், பல்வேறு மாநிலங்களும், பல்கலைக்கழகங்களும், மற்ற மருத்துவ கல்வி நிறுவனங்களும், அவரவர் நடத்தும் தேர்வுகளை, தொடர்ந்து நடத்தலாம்.ஆனால், இரு தரப்புமே, தாங்கள் நடத்தும் தேர்வு முடிவுகளை, சுப்ரீம் கோர்ட்டிலிருந்து, இது தொடர்பாக அடுத்த உத்தரவு வரும் வரை, வெளியிடக் கூடாது.பொது நுழைவுத் தேர்வு விவகாரம் குறித்து, நாங்கள் விரிவான விசாரணை நடத்த வேண்டியுள்ளது. அதிலுள்ள அம்சங்கள் குறித்து, ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. இதற்கு, போதிய கால அவகாசம் தேவைப்படுகிறது. எனவே, அதுவரை, வழக்கமான நடைமுறை தொடரும் வகையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மருத்துவக் கல்விக்கான பொது நுழைவுத் தேர்வை எதிர்த்து, பல்வேறு கோர்ட்டுகளில், தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும், அடுத்த ஆண்டு, ஜனவரி, 15ம் தேதிக்குள், உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றவும் உத்தரவிடுகிறோம்.அதே நேரத்தில், பொது நுழைவுத் தேர்வை எதிர்த்து, மனுக்கள் தாக்கல் செய்துள்ளவர்களும், இந்த வழக்குடன் தொடர்புடைய மற்ற தரப்பினரும், தங்களின் விளக்கத்தை, அடுத்த மாதம், 7ம் தேதிக்குள், கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

IFHRMS - March-2025 Bills submission- certain Instructions - communicated

மார்ச் 2025 மாத ஊதியப் பட்டியல் சமர்ப்பித்தல் தொடர்பாக சில அறிவுரைகள் IFHRMS - March-2025 Bills submission- certain Instructions - communica...