கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>விலையில்லா லேப்-டாப் விற்பனை? கல்வித்துறை அதிர்ச்சி

தமிழக அரசால் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா லேப்-டாப்கள் மறைமுகமாக விற்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை விற்கும் மாணவர்கள் தங்களுக்கு கிடைக்கும் பணத்தில் விலை உயர்ந்த செல்போன்களை வாங்க பயன்படுத்தியுள்ளனர் என்கிற தகவல் கல்வி துறையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழக அரசு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கல்வி மேம்பாட்டிற்காக விலையில்லா லேப்டாப் வழங்கி வருகிறது. இதற்காக, கடந்த 2011-12ம் ஆண்டில் ரூ.912 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. நடப்பு ஆண்டில் வழங்கப்பட வேண்டிய மாணவர்களின் பெயர் பட்டியல் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட லேப்-டாப்கள் மறைமுகமாக 5 முதல் 14 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெரும்பாலும், பிற மாநிலத்தை சேர்ந்த மாணவர்களுக்கும் , சுயநிதி கல்லூரி மாணவர்களுக்கும் விற்கப்பட்டு வருகிறது. அந்த பணத்தில் சில மாணவர்கள் விலை உயர்ந்த செல்போன்களை வாங்க பயன்படுத்தியுள்ளனர் என்கிற தகவல் கல்வி துறையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், குடும்ப வறுமைக்காக விற்பனை செய்யும் மாணவர்களும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். கோவை கல்லூரி கல்வி இணை இயக்குனர் கதிரேசன் கூறுகையில், "விலையில்லா லேப்டாப் என்பது மாணவர்களின் நலனுக்காக வழங்கப்படுகிறது; இதை விற்பது என்பது சட்டப்படி குற்றம். அரசின் சலுகைகளை தவறாக பயன்படுத்துவது என்பது தவறு; விலையில்லா லேப்டாப் விற்பதும், வாங்குவதும் தெரிந்தால் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்,' என்றார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Tree and parents - need love and warmth - today's short story

மரமும் பெற்றோரும் - தேவை அன்பும் அரவணைப்பும் - இன்றைய சிறுகதை  Tree and parents - need love and warmth - today's short story இன்று ஒரு ச...