கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>TET மூலம் 18ஆயிரம் புதிய ஆசிரியர்கள் தேர்வு... வரும் 13ம் தேதிக்குள் பணிநியமனம் வழங்க அரசு தீவிரம்....

கடந்த, ஜூலை மற்றும் அக்டோபரில் நடந்த, இரண்டு, டி.இ.டி., தேர்வுகளின், இறுதி தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி., நேற்று வெளியிட்டது. அதன்படி, இடைநிலை ஆசிரியர், 9,664 பேர்; பட்டதாரி ஆசிரியர், 8,718 பேர் என, 18 ஆயிரத்து, 382 பேர், இறுதிப் பட்டியலில் இடம் பெற்றனர். 13ம் தேதி, முதல்வர் இவர்களுக்கு, பணி நியமன உத்தரவு வழங்குவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.

டி.இ.டி., தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில், பட்டதாரி ஆசிரியர் தேர்வும், டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்று, மாநில பதிவு மூப்பு அடிப்படையில், இடைநிலை ஆசிரியரும் தேர்வு செய்யப்படுவர் என, முதலில் தமிழக அரசு அறிவித்திருந்தது. பின், சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட ஒரு வழக்கில், "டி.இ.டி., தேர்வு, ஒரு தகுதித் தேர்வே; அதில், தேர்ச்சி பெறுபவர்களை, பணி நியமனம் செய்வதற்கு, தனி வழிமுறைகளை உருவாக்கி, அமல்படுத்த வேண்டும்' என, உத்தரவிடப்பட்டது. இதனால், இறுதிப் பட்டியல் வெளியிடுவது தள்ளிப் போனது. அமைச்சர் தலைமையிலான குழு, புதிய விதிமுறைகளை உருவாக்கியதும், அதை அமல்படுத்த, அரசு உத்தரவிட்டது.

அதன்படி, பிளஸ் 2, பட்டப் படிப்பு, பி.எட்., - ஆசிரியர் பட்டயப் பயிற்சி என, ஒவ்வொன்றுக்கும் தனித்தனி, "வெயிட்டேஜ்' மதிப்பெண் நிர்ணயித்து, அதன் அடிப்படையில், இறுதி தேர்வுப் பட்டியல் தயாரிக்கும் பணி, நீண்ட நாட்களாக நடந்து வந்தது. பணிகள் முடிந்ததை அடுத்து, இறுதி தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி., நேற்று வெளியிட்டது. அதில், 18 ஆயிரத்து, 382 பேர், இடம் பிடித்தனர். இடைநிலை ஆசிரியர் பணிக்கு, 9,664 பேரும்; பட்டதாரி ஆசிரியர் பணிக்கு, 8,718 பேரும், தேர்வு பெற்றனர். 19 ஆயிரத்து 343 பேர், ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்ற போதிலும், குறிப்பிட்ட சில இன சுழற்சிப் பிரிவுகளில், தகுதியானவர்கள் கிடைக்காததால், 961 பேரை தேர்வு செய்ய முடியவில்லை என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.

பட்டியல் இன்று வெளியீடு :
இறுதி தேர்வுப் பட்டியலில் தேர்வு பெற்றவர்களின் பெயர் விவரங்கள், டி.ஆர்.பி.,யின் இணையதளத்தில், இன்று மாலைக்குள் வெளியிடப்பட உள்ளது. தேர்வு பெற்றவர்கள், பாடப்பிரிவை தேர்வு செய்து, பதிவு எண்களை பதிவு செய்தால், இறுதி தேர்வுப் பட்டியலில், இடம் பெற்றுள்ளோமா என்பதை அறியலாம்.


அதிக எண்ணிக்கையில் தேர்வு பெற்றிருக்கும் ஆசிரியர்களுக்கு, பணி நியமனம் வழங்கும் விழாவை, விமரிசையாக நடத்த, பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. 13ம் தேதி, விழா நடக்கும் எனவும், அதில், முதல்வர் ஜெயலலிதா பங்கேற்று, தேர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு, பணி நியமன உத்தரவுகளை வழங்குவார் எனவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இறுதிப் பட்டியல் வெளியான உடன், பாட வாரியாக உள்ள காலி இடங்கள் விவரங்களை சரிபார்த்து, "ஆன்-லைன்' வழியாக, கலந்தாய்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் மற்றும் பணி நியமன உத்தரவு வழங்கும் விழாற்கான ஏற்பாடுகள் ஆகியவற்றை செய்யுமாறு, பள்ளிக் கல்வித்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மிகக் குறுகிய காலத்தில், விழாவை நடத்தி, பணி நியமன உத்தரவை வழங்க வேண்டியிருப்பதால், அதிகாரிகள் மின்னல் வேகத்தில், அதற்கான வேலைகளில் இறங்கி உள்ளனர்.

10 ஆயிரம் இடங்களுக்கு தகுதியானவர்கள் இல்லை :
இடைநிலை ஆசிரியர்களை பொறுத்தவரை, 10 ஆயிரம் பேர், தேர்வு செய்யப்பட வேண்டும்; ஆனால், 9,664 பேர், தேர்வு பெற்றுள்ளனர். பட்டதாரி ஆசிரியர், 19 ஆயிரத்து 432 பேர் தேவை. ஆனால், 8,718 பேர் மட்டுமே, இறுதி தேர்வுப் பட்டியலில் தேர்வாகி உள்ளனர். இன்னும், 10 ஆயிரத்து, 714 இடங்களுக்கு, தகுதியானவர்கள் கிடைக்கவில்லை. பல லட்சம் பேர் தேர்வு எழுதிய போதிலும், டி.இ.டி., தேர்வில், 60 சதவீத மதிப்பெண்கள் எடுக்காததால், இதுபோன்ற நிலை உருவாகி இருப்பதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

டி.ஆர்.பி., சாதனை:
வெறும், 15 ஊழியர்களுடன் இயங்கி வரும், டி.ஆர்.பி., ஜூலை மற்றும் அக்டோபரில், 15 லட்சம் பேருக்கு, தேர்வை நடத்தி, பல்வேறு பணிகளுக்குப் பின், இறுதி தேர்வுப் பட்டியலை, எவ்வித சிக்கலும் இல்லாமல் வெளியிட்டு, சாதனை படைத்தது. இதற்காக, டி.ஆர்.பி., தலைவர் சவுத்ரி முதல், கடைநிலை ஊழியர் வரை, அனைவரும், அரசு விடுமுறை நாட்களிலும், இரவு, 12:00 மணி வரையிலும் வேலை பார்த்ததாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Did the Tamil Nadu decorative vehicle be rejected in the Republic Day parade procession? - Tamil Nadu Govt Information Checker explanation

குடியரசு தின அணிவகுப்பு ஊர்வலத்தில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி நிராகரிப்பா? - தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் Did the Tamil Nadu ...