கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>ஜனவரி 01 [January 01]....

நிகழ்வுகள்

  • கிமு 45 - ஜூலியன் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது.
  • 630 - முகமது நபி தனது படைகளுடன் மெக்கா நோக்கிப் பயணமானார்.
  • 1502 - போர்த்துக்கீச நாடுகாண் பயணி பெட்ரோ ஆல்வாரெஸ் கப்ரால் பிரேசில் நாட்டின் ரியோ டி ஜனெய்ரோ நகரை அடைந்தான்.
  • 1600 - ஸ்கொட்லாந்து ஜூலியன் நாட்காட்டியை பயன்படுத்த ஆரம்பித்தது.
  • 1700 - ரஷ்யா ஜூலியன் நாட்காட்டியை பயன்படுத்த ஆரம்பித்தது.
  • 1752 - கிரிகோரியன் நாட்காட்டியை பிரித்தானியா ஏற்றுக்கொண்டது.
  • 1772 - 90 ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தக்கூடியதான உலகின் முதலாவது பயணிகள் காசோலை லண்டனில் விற்பனைக்கு வந்தது.
  • 1800 - டச்சு கிழக்கிந்தியக் கம்பனி கலைக்கப்பட்டது.
  • 1801 - பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்துப் பேரரசு இணைந்து ஐக்கிய இராச்சியம் ஆனது.
  • 1804 - எயிட்டி பிரெஞ்சு ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றது.
  • 1806 - பிரெஞ்சு குடியரசு நாள்காட்டி பாவனையிலிருந்து விலக்கப்பட்டது.
  • 1808 - ஐக்கிய அமெரிக்காவில் அடிமைகளை இறக்குமதி செய்வது தடை செய்யப்பட்டது.
  • 1833 - ஐக்கிய இராச்சியம் போக்லாந்து தீவுகளின் மீது உரிமை கொண்டாடியது.
  • 1858 - இலங்கையில் முதலாவது தந்திச் சேவை கொழும்புக்கும் காலிக்கும் இடையில் ஆரம்பமானது.
  • 1861 - போர்ஃபீரியோ டயஸ் மெக்சிக்கோ நகரைக் கைப்பற்றினான்.
  • 1866 - யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக காவற்துறை (Police Force) அமைக்கப்பட்டது.
  • 1867 - ஐக்கிய அமெரிக்காவில் ஒஹாயோவின் "சின்சினாட்டி" நகருக்கும் கென்டக்கியின் "கொவிங்டன்" நகருக்கும் இடையில் ஜோன் ஏ. ரோப்லிங் தொங்கு பாலம் திறக்கப்பட்டது. இதுவே உலகின் அதி நீளமான தொங்கு பாலமாகும்.
  • 1872 - இலங்கையில் ரூபாய், மற்றும் சதம் ஆகிய நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
  • 1872 - முதலாவது இந்திய அஞ்சல் (தபால்) சேனீ மலைச் (Mount Cenis) சுரங்கம் ஊடாக சென்றது.
  • 1877 - இந்தியாவின் மகாராணியாக விக்டோரியா டில்லியில் அறிவிக்கப்பட்டார்.
  • 1883 - இலங்கையின் தமிழர் தாயகம் வடக்கு, கிழக்கு என இரண்டு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது.
  • 1886 - பர்மா விக்டோரியா மகாராணிக்கு அவரது பிறந்தநாள் பரிசாக வழங்கப்பட்டது.
  • 1890 - எரித்திரியா இத்தாலிய குடியேற்ற நாடாக ஆக்கப்பட்டது.
  • 1893 - ஜப்பானில் கிரெகோரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது.
  • 1896 - இலங்கையில் முன்னர் ரொபேர்ட்சன் கம்பனியின் பொறுப்பில் இருந்த தொலைபேசி சாதனத்தை இலங்கை அரசு கையேற்றது.
  • 1899 - கியூபாவில் ஸ்பானிய ஆளுகை முடிவுற்றது.
  • 1901 - பிரித்தானியக் குடியேற்ற நாடுகளான நியூ சவுத் வேல்ஸ், குயின்ஸ்லாந்து, விக்டோரியா, தாஸ்மானியா, மேற்கு ஆஸ்திரேலியா ஆகியன ஆஸ்திரேலிய பொதுநலவாயம் என்ற ஒரே நாடாக இணைந்தன. அதன் முதலாவது பிரதமராக எட்மண்ட் பார்ட்டன் தெரிவு செய்யப்பட்டார்.
  • 1905 - டிரான்ஸ்-சைபீரியன் தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.
  • 1906 - பிரித்தானிய இந்தியாவில் இந்திய சீர்தர நேரம் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  • 1911 - வட மண்டலம் தெற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து பிரிக்கப்பட்டு ஆஸ்திரேலிய நடுவண் அரசின் ஆட்சியின் கீழ்க் கொண்டுவரப்பட்டது.
  • 1912 - சீனக் குடியரசு அமைக்கப்பட்டது.
  • 1919 - ஸ்கொட்லாந்தில் அயோலயர் என்ற கப்பல் (HMS Iolaire) மூழ்கியதில் 205 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1926 - துருக்கி கிரிகோரியன் நாட்காட்டிக்கு மாறியது.
  • 1927 - மெக்சிக்கோவில் கத்தோலிக்க மதத் தடையை எதிர்த்து மதத் தீவிரவாதிகள் அரசுடன் போர் தொடுத்தனர்.
  • 1927 - துருக்கி கிரெகொரியின் நாட்காட்டியை அறிமுகப்படுத்தியது. இதன்படி 1926, டிசம்பர் 18இற்கு அடுத்த நாள் ஜனவரி 1, 1927ஆக மாற்றப்பட்டது.
  • 1935 - இத்தாலியக் குடியேற்ற நாடுகளான திரிப்பொலி, சிரெனாய்க்கா ஆகியன சேர்ந்து லிபியா ஆகியன.
  • 1945 - பெல்ஜியத்தின் செனோன் நகரில் 30 ஜேர்மனிய போர்க்கைதிகள் ஐக்கிய அமெரிக்கப் படைகளினால் படுகொலை செய்யப்பட்டனர்.
  • 1947 - இரண்டாம் உலகப் போரின் முடிவில் கைப்பற்றப்பட்ட ஜேர்மனியின் பிரித்தானிய மற்றும் ஐக்கிய அமெரிக்கப் பகுதிகள் ஒன்றாக்கப்பட்டன. இது பின்னர் ஜேர்மன் சமஷ்டிக் குடியரசு எனப் பெயர் பெற்றது.
  • 1948 - பிரித்தானிய தொடருந்து சேவைகள் நாட்டுடமை ஆக்கப்பட்டன.
  • 1948 - பிரிவினைக்குப் பின்னர் பாகிஸ்தானுக்கு வழங்குவதாக ஒப்புக்கொள்ளப்பட்ட 550 மில்லியன் ரூபாய் பணத்தை இந்தியா வழங்க முடியாதென அறிவித்தது.
  • 1949 - ஐநா அறிவுறுத்தலின் படி காஷ்மீரில் நள்ளிரவுக்கு ஒரு நிமிடத்துக்கு முன்னர் போர்நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி பாகிஸ்தானுடனான இந்தியப் போர் முடிவுக்கு வந்தது.
  • 1956 - சூடான் நாடு எகிப்து மற்றும் பிரித்தானியா ஆகியவற்றிடம் இருந்து விடுதலை பெற்றது.
  • 1958 - இலங்கையில் வாகன இலக்கத்தகடுகளில் சிங்கள மொழியில் ஸ்ரீ எழுத்து கட்டாயமாக்கப்பட்டது.
  • 1958 - ஐரோப்பிய சமுகம் அமைக்கப்பட்டது.
  • 1959 - கியூபாவின் அதிபர் ஃபுல்ஜென்சியோ பட்டீஸ்டா ஃபிடெல் காஸ்ட்ரோவின் படைகளினால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
  • 1960 - கமரூன் பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.
  • 1962 - மேற்கு சமோவா நியூசிலாந்திடம் இருந்து விடுதலை பெற்றது.
  • 1971 - ஐக்கிய அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் புகைத்தல் குறித்த விளம்பரங்கள் தடை செய்யப்பட்டன.
  • 1978 - ஏர் இந்தியா போயிங் 747 விமானம் வெடித்து பம்பாயில் கடலில் வீழ்ந்து மூழ்கியதில் 213 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1981 - பலாவுக் குடியரசு ஐக்கிய அமெரிக்காவின் அதிகாரத்துள் சுயாட்சி பெற்றது.
  • 1984 - புரூணை ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
  • 1993 - செக்கோசிலவாக்கியா நாடு செக் குடியரசு, சிலோவாக் குடியரசு என இரு நாடுகளாகப் பிளவடைந்தது.
  • 1995 - உலக வணிக அமைப்பு உருவாக்கம்.
  • 1999 - யூரோ நாணயம் அறிமுகம்.

சிறப்பு நாள்

  • விடுதலை நாள்:
    • கியூபா (1899)
    • ஹெயிட்டி (1804)
    • சூடான் (1956)
    • கமரூன் (1960)
    • செக் குடியரசு (1993)
    • சிலோவாக்கியா (1993)
    • தாய்வான் (1912)

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Donation of property can be canceled if children do not maintain parents - Supreme Court

பெற்றோரை பிள்ளைகள் கவனிக்காவிட்டால் சொத்துகளின் தான பத்திரத்தை ரத்து செய்யலாம் - உச்சநீதிமன்றம்  Donation of property can be canceled if chi...