நிகழ்வுகள்
- 41 - கலிகுலா படுகொலை செய்யப்பட்டான். அவனது மாமன் குளோடியஸ் முடி சூடினான்.
- 1679 - இங்கிலாந்தின் இரண்டாம் சார்ல்ஸ் நாடாளுமன்றத்தைக் கலைத்தான்.
- 1857 - தெற்காசியாவின் முதலாவது முழுமையான பல்கலைக்கழகம் கல்கத்தா பல்கலைக்கழகம் திறக்கப்பட்டது.
- 1887 - அபிசீனியப் படைகள் டொகாலி என்ற இடத்தில் இத்தாலியர்களைத் தோற்கடித்தனர்.
- 1897 - சுவாமி விவேகானந்தர் சிக்காகோவிலிருந்து நாடு திரும்பும் வழியில் யாழ்ப்பாணம் வருகை தந்தார். யாழ் இந்துக் கல்லூரியில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
- 1908 - பேடன் பவல் சாரணீய இயக்கத்தை ஆரம்பித்தார்.
- 1918 - கிரெகோரியின் நாட்காட்டி ரஷ்யாவில் பெப்ரவரி 14 முதல் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
- 1924 - ரஷ்யாவின் பெட்ரோகிராட் நகரம் லெனின்கிராட் எனப் பெயர் மாற்றப்பட்டது.
- 1927 - ஆல்பிரட் ஹிட்ச்கொக் தனது த பிளெஷர் கார்டன் என்ற தனது முதலாவது திரைப்படத்தை வெளியிட்டார்.
- 1939 - சிலியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 30000 பேர் கொல்லப்பட்டனர்
- 1943 - இரண்டாம் உலகப் போர்: பிராங்க்ளின் ரூஸ்வெல்ட், வின்ஸ்டன் சேர்ச்சில் ஆகியோர் தமது கசபிளாங்கா உச்சி மாநாட்டை முடித்துக் கொண்டனர்.
- 1966 - ஏர் இந்தியா விமானம் ஒன்று பிரான்சுக்கும் இத்தாலிக்கும் இடையில் வீழ்ந்ததில் 117 பேர் கொல்லப்பட்டனர்.
- 1972 - இரண்டாம் உலகப் போரில் காணாமல் போன ஜப்பானிய படைவீரனான சொயிச்சி யாக்கோய் என்பவன் குவாம் காடு ஒன்றில் இருக்கக் கண்டுபிடிக்கப்பட்டான்.
- 1978 - கொஸ்மொஸ் 954 என்ற சோவியத் செய்மதி பூமியின் வளிமண்டலத்துள் எரிந்து அதன் பகுதிகள் கனடாவின் வடமேற்குப் பிரதேசத்தில் வீழ்ந்தன.
- 1984 - முதலாவது ஆப்பிள் மாக்கின்டொஷ் கணினி விற்பனைக்கு வந்தது.
- 1986 - வொயேஜர் 2 விண்கலம் யுரேனசின் 81,500 கிமீ தூரத்துக்குள் வந்தது.
- 1993 - துருக்கிய ஊடகவியலாளரும்ம் எழுத்தாளருமான ஊகுர் மும்க்கு அங்காராவில் கார்க் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.
- 1996 - மாஸ்கோவுக்கு உளவு பார்த்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் போலந்துப் பிரதமர் ஜோசப் அலெக்ஸ்கி தனது பதவியைத் துறந்தார்.
- 2007 - சூடானிலிருந்து 103 பயணிகளுடன் சென்ற விமானம் நடு வானில் கடத்தப்பட்டது.
- 2009 - இலங்கை ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட அரசுத்தலைவர் தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் கொழும்பில் காணாமல் போனார்.
இறப்புகள்
- 1965 - வின்ஸ்டன் சர்ச்சில், பிரித்தானியப் பிரதமர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1874)
- 1966 - ஹோமி பாபா, இந்திய அணு ஆராய்ச்சி நிபுணர் (பி. 1909)