கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>லெனின்...

 
லெனின்... காரல் மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ் இருவரும் இணைந்து மூலதனம் நூலை எழுதி, உலகத்தொழிலாளர்கள் கிளர்ந்து எழுந்து புரட்சி செய்து ஆட்சியை கைப்பற்றுவார்கள் என்று சொன்னதை மெய்ப்பித்தது இவர்தான்.

இவர் காலத்தில் ரஷ்யாவை ஜார் மன்னர்கள் ஆண்டு வந்தார்கள். அவர்கள் மக்களின் நலனில் அக்கறை கொள்ளாமல் ஆடம்பரங்களில் மூழ்கினார்கள். எளிய தொழிலாளர்கள் பல இன்னல்களுக்கு உள்ளானார்கள். கோரிக்கைகளை அளிக்க உள்ளே அனுமதிக்கப்பட்ட அப்பாவி மக்களை மிகவும் சாவகாசமாக சுட்டுகொன்ற கொடுமைகள் எல்லாம் நடந்தன. இதை எதிர்த்து பல மக்கள் போராடினார்கள். மிகசிறிய நாடான ஜப்பானிடம் போரில் பரிதாபமாக தோற்கவும் செய்தது ரஷ்யா.

லெனின் அப்பா ரஷ்யாவில் கல்வி அதிகாரியாக இருந்தார். அவரிடம் இருந்து தீரத்தை சகோதரர்கள் கற்று இருந்தார்கள். அண்ணன் அரசரை கொல்லதிட்டமிட்டதாக தூக்கில் போடப்பட்டார். அன்றைக்கு இறுதி தேர்வு மனதை திடப்படுத்திக்கொண்டு தேர்வெழுதினார் லெனின். மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார். சட்டம் பயில முயன்றார். கல்லூரி இடம் தர மறுக்க நான்கு வருடம் படிக்க வேண்டிய சட்டத்தை ஒன்றரை வருடத்தில் முடித்தார்.

கார்ல் மார்க்ஸ், ஏங்கல்ஸ் வகுத்தளித்த மூலதனம் நூலை படித்தார். தொழிலாளர்களை ஊக்குவித்தார் லெனின். அதிக வேலை நேரத்தை எதிர்த்து போராடினார்கள். அவர்களை பின்னிருந்து இயக்குவது லெனின் எனத் தெரிந்தது. கொடிய சைபீரியாவில் சிறை வைக்கப்பட்டார். 1905-ல் தொழிலாளர் புரட்சி நடத்த முயன்று தோற்றுப்போனார். பின் இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி முதலிய நாடுகளில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். வெளியே இருந்து தன் எழுத்தின் மூலம் உத்வேகம் ஊட்டியவண்ணம் இருந்தார். முதல் உலகப்போரில் கலந்துகொண்ட ரஷ்யாவின் மக்கள் பசியால் வாடினார்கள்.

ராணுவ வீரர்கள் ஆயுதங்கள் இல்லாமலும், உணவில்லாமலும் நொந்து போனார்கள். ஜாரின் ஆட்சிக்கு எதிராக கிளர்ந்தெழுந்து பிப்ரவரியில் ஆட்சியை மக்கள் பிடித்தார்கள்; அதை நாடாளுமன்ற குழு ஒன்று நிர்வகித்தது. பின் லெனின் நாடு திரும்பினார். புகழ்பெற்ற அக்டோபர் புரட்சி நடந்து லெனினிடம் ஆட்சி ஒப்படைக்கப்பட்டது.

ஜெர்மனியுடன் அமைதி ஒப்பந்தம் செய்துகொண்டு போரை நிறுத்தினார் தொழிலாளர்கள், விவசாயிகள் ஆட்சி மலர்ந்தது. தேசத்தின் வளங்களை ஒரு சிலர் மட்டும் அனுபவிப்பது முடிவுக்கு வந்தது; அனைத்தும் அரசாங்கத்தின் கட்டுபாட்டுக்கு வந்தது. வயது வந்த அனைவருக்கும் திறமைக் கேற்ற வேலையும், வேலைக்கேற்ப ஊதியமும் வழங்கப்பட்டது.

அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி அளிக்கப்பட்டது. நிலங்கள் பிரித்து எளிய மக்களுக்கு தரப்பட்டன .லெனின் எந்த அளவுக்கு விமர்சனத்தை மதித்தார் என்பதற்கு ஒரு எடுத்துகாட்டு விளாடிமர் மாயகொவஸ்கி ஆட்சியில் அதிகாரிகள் கூட்டம் கூட்டம் எனச்சொல்லி மக்கள் நலன் பற்றி கவலைப்படாமல் இருப்பதாக கவிதை வடித்தார்; அதை வெளியிட பயந்தார்கள்.

லெனின் கேள்விப்பட்டு அவரை அழைத்து ஒரு கவிஞன் இதைத்தான் பாடவேண்டும்; என்னை பற்றி இனிமேல் புகழ்ந்து எழுத வேண்டாம் என்றார். ஓயாத உழைப்பால் உடல்நலம் பாதிக்கப்பட்டது; பக்கவாதம் வந்தது; வலது கை பாதிக்கப்பட இடது கையால் எழுத கற்றுக்கொண்டு தன் கருத்துக்களை அந்த நிலையிலும் சொன்னார். பேசவே முடியாத சூழலிலும் எளிய மக்களுக்காக யோசித்த அவர் 1924-ல் இதே தினத்தில் (ஜன.21) மறைந்து போனார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Student Threatens to Kill Headmaster - Full Details

  தலைமை ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த மாணவன் - முழு விவரம் Student Threatens to Kill Headmasters - Full Details கேரளாவில் பாலக்காடு அனக...