கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>ரோமைன் ரோலண்ட்

 
ரோமைன் ரோலண்ட்... பிரான்ஸ் தேசத்தில் 1844-ல் பிறந்த இவர் தத்துவத்தில் பட்டம் பெற்றார். ஆசிரியராக தன் வாழ்க்கையை தொடங்கினார். எனினும் காலப்போக்கில் ஆசிரியர் தொழில் மீது வெறுப்பு உண்டானது; மாணவர்களை அரட்டி, உருட்டி மிரட்டும் அது அவரின் கனிவான சுபாவத்துக்கு ஒத்துவராத பண்பாக இருந்தது. வேலையை உதறிவிட்டு முழுநேர எழுத்தாளர் ஆனார்.

அவரின் ஆரம்பகால நாடகங்கள் பெரிய வரவேற்பை பெறவில்லை; அவரை டால்ஸ்டாயின் எழுத்து ஈர்த்தது. பீத்தோவனின் இசைக் கோர்வை அவரை ஈர்த்தது. ஓயாத உழைப்புக்காரர் ஆன மைக்கேலாஞ்சேலோவும்தான். மூவரின் வாழ்க்கை வரலாற்றை அற்புதமான நூல்கள் ஆக்கினார். அவருக்கு இந்தியாவின் ஆன்மிகத்தின் மீது காதல் வந்தது. இந்தியாவை பற்றி தெரிந்து கொள்ள ஆவல் கொண்டார்.

தாகூரை அவர் அவர் தேசத்தில் சந்தித்த பொழுது, "நீங்கள் விவேகானந்தரை படித்தால் இந்தியாவை புரிந்துகொள்ளலாம்" என சொல்லப்படவே இவர் அவரின் நூல்களை வாசிக்க ஆவல் கொண்டார். இவருக்கு ஆங்கிலம் தெரியாது; பெரும்பாலான நூல்கள் ஆங்கிலத்தில் இருந்தன. இவரின் சகோதரியின் உதவியோடு அவற்றை படித்து நெகிழ்ந்து போனார். The Life of Ramakrishna and Vivekananda’s Life and Gospels என்கிற அற்புதமான நூலை எழுதினார்.

ரோலண்ட் குறுகிய மனப்பான்மை கொண்டு நாடுகள் சண்டைப்போடுவதை கண்டு மனம் நொந்தார். இரண்டு வெவ்வேறு துருவங்கள் எனக் கருதப்படும் மனிதர்கள் அன்பால் இணைய முடியாதா என கேள்வி எழுப்பிக்கொண்டார். அதை JEAN-CHRISTOPHE என்கிற தன் நாவலுக்கு கருப்பொருள் ஆக்கினார்; கதையின் நாயகன் ஒரு ஜெர்மன் இசைக்கலைஞன் அவன் இக்கட்டான சூழல்களிலும் பிரான்ஸ் தேசத்து இளைஞன் ஒருவன் மீது நட்பு பாராட்டுகிறான் - நாடுகளை கடந்து அன்பால் மனிதர்கள் இணைய முடியும் என அடித்து சொன்ன ரோலண்டுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

காந்தியை மிகவும் நேசித்தார்; அவரை சந்தித்தபொழுது காந்தி தன்னை முத்தமிட்ட தருணத்தை புனித பிரான்சிஸ் மற்றும் டொமினிக் ஆகியோரின் முத்தத்தோடு ஒப்பிட்டு சிலாகித்தார். காந்தியை பெரும்பாலும் நம் இந்திய விடுதலைக்காக பாடுபட்ட ஒரு ஜீவனாக மட்டுமே பார்க்கிறோம்; ஆனால்,ரோலண்ட் அப்படி பார்க்கவில்லை, உலகம் முழுக்க உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுக்கிற ஒரு மனிதராக தான் அவரை அவர் பதிவு செய்கிறார்.

ஜெர்மனியும், பிரான்சும் பகை நாடுகள் என்று எல்லாருக்கும் தெரியும்; காந்தியை பற்றிய இவரின் நூல் அனைவரும் வாசிக்க வேண்டிய ஒன்று; உலகமே பாசிசம் கண்டு அஞ்சிக்கொண்டு இருந்தபொழுது இவர் வன்முறையின்மையை (PACIFISM) காந்தியின் வழியில் வலியுறுத்தினார். இவரின் பிறந்தநாள் இன்று (ஜன.29).

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

திருவாரூர் மாவட்டத்தில் ஏப்ரல் 7ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - தேர்வு தேதி மாற்றம்

திருவாரூர் மாவட்டத்தில் ஏப்ரல் 7ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - தேர்வு தேதி மாற்றம் திருவாரூர் மாவட்டத்தில் வரும் 7ம் தேதி உலகப் பிரசி...