கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>மக்கள் போற்றும் மாமனிதர் - பெஞ்சமின் ஃபிராங்க்ளின்...

 
பெஞ்சமின் ஃபிராங்க்ளின்... -ஆங்கிலேயரின் ஆளுகையில் அமெரிக்கா இருந்த காலத்தில் எளிமையான பதினேழு பிள்ளைகள்கொண்ட சோப்புத் தயாரிப்பவரின் வீட்டில் பத்தாவது பிள்ளையாக பிறந்தார். இவரின் அப்பா இவரை பாதிரியார் ஆக்க விரும்பினார். இவரின் குடும்பச்சூழல் இவரை ஓராண்டிற்கு மேல் பள்ளியில் படிக்க விடவில்லை. -அதனால் இவரின் அண்ணனின் அச்சுக்கூடத்தில் இணைந்து வேலை பார்த்து தானே படித்து கற்றுக்கொண்டார்.

அண்ணனின் பத்திரிகையில் பெண்களின் உரிமைகளை ஆதரித்து ஏகத்துக்கும் புனைப்பெயரில் எழுதினார். அண்ணன் பத்திரிகையில் பல பேரை விமர்சித்ததால் சிறை போய் மீண்டு வந்தார். இவர்தான் அதற்கு காரணம் என இவரை கொடுமைப்படுத்த இவர் வீட்டை விட்டு ஓடிப்போனார். எங்கெங்கோ அலைந்து, பல துன்பங்களுக்கு பிறகு தானே ஒரு பத்திரிகையைத் தொடங்கினார். முதன்முதலில் விளம்பரங்களை அறிமுகப்படுத்தியது இவர்தான். கேலிச் சித்திரங்களையும் சேர்த்துக்கொண்டார்.

முதன்முதலில் அமெரிக்காவில் தீ விபத்துகளில் இருந்து மக்களை காக்க ஒரு நிறுவனத்தை தொடக்கினார். காப்பீடு என்பதை செயல்படுத்தியவரும் இவரே. கொட்டுகிற மழையில் பட்டம் விட்டபொழுது , ஒரு அதிர்வை அவர் உடம்பில் உணர்ந்தார். பட்டம் விடுகிறபொழுது அதிலிருந்த உலோக கம்பி மழையில் நனையும்பொழுது மின்னலில் இருந்து வரும் மின்சாரத்தை கடத்துகிறது என்று உணர்ந்தார். அதை வைத்து கட்டடங்களை இடியில் இருந்து இடிதாங்கிகளின் மூலம் காக்கலாம் எனவும், கூர்மையான முனைகள் இருந்தால் இடியின்பொழுது கடத்தப்படும் மின்சாரத்தை அந்த கூர்மையான கம்பியே வாங்கிக்கொள்ளும் எனச் சொன்னார். அதனால் பல கட்டடங்கள் இடி தாக்குதலில் இருந்து தப்பித்தன.

முதன்முதலில் சந்தா கட்டி நூலகத்தில் சேரும் முறையை கொண்டு வந்ததும் இவரே. இவரின் கண்டுப்பிடிப்பை வைத்தே மால்துசின் பிரபலமான மக்கள் தொகை கொள்கை உருவானது. அமெரிக்காவின் விடுதலை பிரகடனத்தை ஜெபர்சன் உடன் இணைந்து தயாரித்தது இவரே. எத்தனையோ கண்டுப்பிடிப்புகளை அவர் கண்டறிந்திருந்தாலும் எதற்கும் காப்புரிமை பெற்றதில்லை -எல்லாமும் மக்களுக்கு போய் சேரவேண்டும் அதற்கு என் காப்புரிமைகள் தடையாக இருக்க கூடாது என பெருந்தன்மையாக சொன்னார். அத்தகு மாமனிதரின் பிறந்த நாள் இன்று (ஜன.17).

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNSED Administrators App New Version: 0.4.1 - Updated on 18-02-2025 - Health & Stem Module Changes. Bug Fixes & Performance Improvements

  *  TNSED Administrators App *  What's is new..? * 🎯 Health & Stem Module Changes... * 🎯  Bug Fixes & Performance Improvement...