கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>முகமது அலி...

 
சில மனிதர்களை பற்றி எழுதுகிற பொழுதே ஒரு சிலிர்ப்பு தோன்றும். அப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்தவர் முகமது அலி.

காசியஸ் க்ளே என்கிற பெயரோடு பிறந்த இவர். பிறப்பால் அமெரிக்க ஆப்ரிக்கர். அப்பா பில் போர்டுகளுக்கு படம் வரைந்தகொண்டு இருந்த எளிய மனிதர். க்ளேவாக குத்துச்சண்டை களத்துக்குள் புகுந்த இவர் அங்கே பெற்றதெல்லாம் வெற்றி வெற்றிதான். தொடர்ந்து பல்வேறு வெற்றிகளை குவித்த இவர் ஒரே பஞ்ச்சில் எதிராளிகளை வீழ்த்திய வரலாறெல்லாம் உண்டு.

இரண்டு முறை ஹெவி வெய்ட் சாம்பியனாக இருந்த மனிதருக்கு ஒரு சோதனை வந்தது -சரியாக சொல்வதென்றால் பற்பல சோதனைகளின் உச்சகட்டம் எனலாம். இவர் ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் பெற்று வந்தவுடன் இனவெறி காரணமாக வரவேற்ககூட ஆளில்லை; நிறவெறி -வெய்ட்டர்கூட மதிக்கவில்லை. கடுப்போடு அந்த பதக்கத்தை நதியில் வீசிவிட்டு நடந்தார்.

இஸ்லாமிய மதத்திற்கு மாறிய பின் கலந்துகொண்ட போட்டியில் அவரை முகமது அலி என அழைக்க எதிர் போட்டியாளர் மறுத்து விட்டார். கூட்டமும் ஏளனம் செய்தது. ஆனாலும், உலக சாம்பியன் ஆனார்.

வியட்நாம் போரில் இளைஞர்களை ஈடுபட வைக்க அமெரிக்கா கட்டாய ராணுவ சேவையை கொண்டு வந்து அதில் இவரையும் சேர சொன்னது. "அப்பாவி மக்களை கொல்லும் போரில் கலந்துகொள்ள மாட்டேன்!"என இவர் சொன்னது பெரிய அலையை உண்டு பண்ணியது. காத்திருந்த அமெரிக்க அரசு அவரை குத்துசண்டையில் கலந்து கொள்வதற்கான லைசன்சை நீக்கியது. மூன்று வருடம் வனவாசம். பின் பல்வேறு போராட்டத்துக்கு பின் மீண்டு வந்தால் தோல்வியே சந்திக்காத அவர் தோற்றுப்போனார். அவ்வளவுதான் என நாடே நகைத்தது.

அப்பொழுதுதான் உலக சாம்பியன்ஷிப் வந்தது. ஒரே ஒருவரை தவிர பதக்கம் இழந்து பலகாலம் கழித்து சாம்பியன்ஷிப்பை யாரும் வென்றது இல்லை. மூன்று வருட வனவாசம் வேறு. ஆனாலும் வென்று காண்பித்தார் முகமது அலி!

அவர் தலையில் வாங்கிய அடிகள் அவரை முடக்கிபோட்டது - பர்கின்சன் சிண்ட்ரோம் அவரை பாதித்து முடக்கிபோட்டது. ஆனாலும், அவர் பல்வேறு நிதி திரட்டல்கள் மூலம் எளியவர்களுக்கு உதவி வந்தார். அவருக்கு பண்ணிய அவமானங்களுக்கு பிரயசித்தமாக அவரை அட்லாண்டா ஒலிம்பிக் ஜோதியை ஏற்ற அனுமதித்தார்கள்.

"என் இடக்கை பார்கின்சன் சிண்ட்ரோமால் நடுங்குகிறது. வலது கை பயத்தால் நடுங்குகிறது. இதற்கு நடுவே நான் ஜோதியை ஏற்றி விட்டேன்!"என்ற வரிகளுக்கு பின்தான் எவ்வளவு நம்பிக்கை. அவரின் பிறந்தநாள் இன்று (ஜன.17).

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Standard 3 - Learning Outcomes / Competency Based Test - November 2024 - Answers

     வகுப்பு 3 - கற்றல் விளைவுகள் மதிப்பீட்டுத் தேர்வு LO CBT - நவம்பர் 2024 - விடைகள் Class 3 - Learning Outcomes / Competency Based Test -...