கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>நடிகவேள் எம்.ஆர்.ராதா

''கலைமாமணி விருதுகளைப் பார்க்கும்போது விருதுகளின் மீதுள்ள மரியாதையே போய்விடுகிறதே?''

''உண்மைதான். எந்தக் கட்சி ஆளும் கட்சியாக இருக்கிறதோ, அந்தக் கட்சிக்கு நெருக்கமானவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்போது, நமக்கு விருதுகள் மீது மரியாதை போய்விடத்தான் செய்கிறது. ஆனால், உங்களுக்காக ஒரு தகவல். 1966-ம் ஆண்டு தமிழகத்தில் சிறந்த நடிகருக்கான விருதுக்கு நடிகவேள் எம்.ஆர்.ராதா தேர்ந்தெடுக்கப்பட்டார். கவர்னர் பரிசு அளிப்பதாக இருந்தது.

ஆனால், 'மொழி தெரியாத கவர்னர் என் படத்தைப் பார்த்திருக்கும் வாய்ப்பு இல்லை. என் படத்தையே பார்க்காத கவர்னர் எனக்குச் சிறந்த நடிகர் விருது கொடுப்பதை நான் விரும்பவில்லை’ என்று எம்.ஆர்.ராதா அந்த விழாவுக்கே போகவில்லை. இத்தகைய சுயமரியாதை உள்ள கலைஞர்கள் இருந்தால், நீங்கள் சொல்லும் அந்த நிலை மாறும்!''

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NMMS 2025 - SAT Question Paper

    தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு 2025 - படிப்பறிவுத் திறன் தேர்வு வினாத்தாள் NMMS 2025 - SAT Question ...