கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>பாக்சைட்டும் பழங்குடி மக்களும்....

பாக்சைட் என்னவென்றால் கனிமூலம் (ore) அல்லது தாது உலோகங்கள் உட்பட்ட முக்கியமான தனிமங்கள் அடங்கிய கனிமங்களைஉள்ளடக்கிய கற்களாகும்.கனிமூலங்கள் சுரங்கங்களிலிருந்து அகழ்ந்தெடுக்கப்படுகின்றன; இவை பின்னர் "சுத்திகரிக்கப்பட்டு" மதிப்புமிக்க தனிமங்கள்  வெளிக்கொணரப்படுகின்றன. அனைத்துக் கற்களிலும் தனிமங்கள் வெவ்வேறு அளவுகளில் உள்ளன என்றபோதும் பொருளியல் வரையறைப்படி இலாபகரமாக கனிமங்களை வெளிக்கொணரக்கூடியவையே கனிமூலங்களாகும். கற்களில் உள்ள கனிமம் அல்லது உலோகத்தின் அடர்த்தி, தரம் மற்றும் எந்த வடிவில் கிடைக்கிறது என்பன சுரங்கவியல் செலவுகளை நேரடியாக பாதிக்கக் கூடியவை. கிடைக்கக்கூடிய உலோகத்தின் மதிப்பு, அகழ்ந்தெடுத்து சுத்திகரிப்பதன் செலவினை ஈடு கட்டி இலாபம் காணக் கூடியதாக இருக்க வேண்டும்.இத்தகைய கனிமூலங்கள் பல்வேறு நிலவியல் செயற்பாடுகளால் உருவாகின்றன. இந்த செயற்பாடுகள் கனிமூல உருவாக்கம் என அறியப்படுகின்றன

பச்சை வேட்டை, காடுகள் வேட்டை, மாவோயிஸ்ட் வேட்டை என்ற பெயரில் ஒரிஸ்ஸா, சதீஸ்கர், ராஜஸ்தான், மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் தொடர்ந்து காடுகள் அழிக்கப்பட்டு அங்கு பல்லாண்டுகளாக வசித்து வரும் பழங்குடியினரை துரத்தி பாக்சைட், இரும்பு, அலுமினியம் போன்ற கனிம வளங்களை மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனமான வேதாந்தா ரிசோர்ஸ் என்ற நிறுவனத்திற்கு சுரங்கத் தொழில் நடத்திக்கொள்ள இந்திய அரசு சட்ட விரோதமாக அனுமதித்து வருகிறது என தொடர்ந்து வினவு தளத்திலும், புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் போன்ற இதழ்களிலும் எழுதப்பட்டு வருகிறது

என்னதான் நடக்கிறது மத்திய இந்தியாவில்? ஏன் அப்பகுதி பதற்றமாகவே இருக்கிறது? ஜார்கண்ட், சட்டீஸ்கர், ஒரிசா, மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் எல்லைகளைத் தொட்டுச் செல்லும் தண்டகாரன்யா காட்டுப் பகுதிதான் பிரச்னையின் மையம். அடர் காடுகளும், மலைகளும் சூழ்ந்துள்ள இந்தப் பிராந்தியத்தில் பாக்சைட், நிலக்கரி, தங்கம், வைரம், கிரானைட், இரும்புத் தாது என அற்புதமான தாதுப்பொருட்கள் நிறைந்திருக்கின்றன. பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த தாதுக்களை வெட்டி எடுப்பதற்காக பெரு நிறுவனங்கள் போட்டிப் போடுகின்றன. அந்த நிறுவனங்களுக்கு ஒட்டுமொத்த மலைப் பகுதியையும் கூறுபோட்டுக் குத்தகைக்கு விட அரசு துடித்துக் கொண்டிருக்கிறது. ‘வேதாந்தா’ என்ற பன்னாட்டு நிறுவனத்துக்கு ஒரிசா அரசு, 40 கி.மீ. நீளமுள்ள ஒரு மலையை குத்தகைக்கு விட்டிருக்கிறது. இந்த மலையில் உள்ள பாக்சைட் தாதுவின் இன்றைய மதிப்பு 200 லட்சம் கோடி ரூபாய். ஆனால் இதற்காக இந்திய அரசு பெற்றுக் கொள்ளவிருக்கும் ராயல்டி தொகை வெறும் 7 சதவிகிதம்.

இதற்கு முன்பே பழங்குடி மக்களின் போராட்டங்களை நசுக்க ‘சல்வா ஜூடும்’ என்ற பெயரிலான கூலிப்படையை உருவாக்கியது சட்டீஸ்கர் அரசு. அதிகாரப்பூர்வமற்ற முறையில் அரசிடம் இருந்து சம்பளம் வாங்கும் இவர்களும் பழங்குடி மக்கள்தான். ஆனால் அந்த மக்களுக்குள் இருக்கும் சாதி போன்ற இயல்பான பிரிவினைகளை அதிகப்படுத்தி அவர்களின் ஒரு பகுதியினரைப் பிரித்து 2004-ல் இந்த சல்வா ஜூடும் உருவாக்கப்பட்டது. மலையின் நுணுக்கங்களும், மக்களின் பழக்கங்களும் இவர்களுக்கு நன்றாகத் தெரியும் என்பதால் இவர்களை வைத்தே பழங்குடி மக்களை காடுகளை விட்டு விரட்டுகிறது ராணுவம். சல்வா ஜூடும் என்ற இந்த அரசக் கூலிப்படை நடத்தியத் தாக்குதலால் கடந்த 4 ஆண்டுகளில் 3 லட்சம் மக்கள் பூர்வீக கிராமங்களில் இருந்து காடுகளுக்குள் துரத்தப்பட்டிருக்கின்றனர்.வீடுகளும், வயல்களும் எரிக்கப்படுகின்றன

காஷ்மீர் மற்றும் வட கிழக்கு மக்களின் மனங்களில் கடந்த பல ஆண்டுகளாக அச்ச உளவியல் விதைக்கப்பட்டிருகிறது. அங்கு எப்போதும் பதற்றம் குடி கொண்டிருக்கிறது. அவற்றில் இருந்து எந்தவித பாடத்தையும் கற்றுக் கொள்ளாத இந்தியா இப்போது மறுபடியும் மத்திய இந்தியாவை பதற்றப் பகுதியாக மாற்றிக் கொண்டிருக்கிறது. ஒரு பிராந்தியத்தில் ஒரு முறை துப்பாக்கி ஏந்திய மனிதர்கள் புகுத்தப்பட்டால் அதை எளிதில் நீக்கிக்கொள்ள முடியாது. நமது முந்தைய வரலாறுகள் இதையே நமக்குக் காட்டுகின்றன. ஆனாலும் அரசு அமைதியான ‘முதலீட்டுச் சூழலை’ உருவாக்கித் தருவதற்காக தம் சொந்த மக்களுக்கு எதிராகவே இந்த யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கிறது.

அதேநேரம் மாவோயிஸ்ட்டுகளின் மனித உரிமை மீறல்களை நாடு முழுவதும் உள்ள மனித உரிமை ஆர்வலர்களே கடுமையாக எதிர்க்கிறார்கள். லால்கர் பகுதியில் சுமார் 1000 சதுர கி.மீ. நிலப் பகுதியைக் கைப்பற்றிய மாவோயிஸ்ட்டுகள் அதை ‘விடுவிக்கப்பட்டப் பகுதி’ என்று அறிவித்த பிறகு மக்கள் மீதான ராணுவத்தின் தாக்குதல் பன்மடங்கு அதிகரித்தது.

‘‘இது தவறு. அந்த மக்களின் குரலாக மாவோயிஸ்ட்டுகள் இருக்க விரும்பினால் முதலில் அவர்களின் அரசியல் அஜண்டா என்ன என்பதை வெளிப்படையாக மக்களிடம் அறிவிக்க வேண்டும். அப்படி செய்யாமல் மக்களின் பிரதிநிதிகளாக தங்களை அறிவித்துக்கொள்வதால் அரசப் படைகளின் தாக்குதலையும், அச்சுறுத்தலையும் சந்திக்கப்போவது சாதாரண மக்கள்தான். மாவோயிஸ்டுகள் வரையறுக்கும் வளம் மிக்க கற்பனையான எதிர்காலத்துக்காக சட்டீஸ்கரின் சாதாரண பழங்குடி மக்கள் தங்கள் வாழ்க்கையை இழக்க முடியாது’’ என்று அப்போது கருத்துச் சொன்னார் மறைந்த மனித உரிமைப் போராளி பாலகோபால்.

சரி, தவறுகளைத் தாண்டி தங்களுடன் களத்தில் நின்பவர்கள் என்ற அடிப்படையில் மக்களுக்கு மாவோயிஸ்ட்டுகளின் மீதான பிடிப்பு அதிகரித்திருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு பசுமை ஆனால் இப்போது காடுகளுக்குள் மறைந்து வாழும் மக்கள் தாங்களாகவே முன்வந்து ‘மக்கள் வேட்டை தொடங்கும்போது மாவோயிஸ்ட்டுகளின் எண்ணிக்கை வெறும் 20 ஆயிரம் பேர்தான். போர்ப்படை’ என்றும், ‘மாவோயிஸ்ட்டுகள்’ என்றும் தங்களை அறிவித்துக்கொள்வதால் போராளிகளின் எண்ணிக்கை 70 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

காஷ்மீரிலும், வடகிழக்கிலும் நடப்பவை தனிநாடு கேட்கும் போராட்டங்கள். ஆனால் மத்திய இந்தியாவின் பழங்குடி மக்கள் தங்களின் இயற்கை வளங்களை பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையடிக்க அனுமதிக்க மாட்டோம் என்று எதிர்த்து நிற்கிறார்கள். வெள்ளையர்களை எதிர்த்து நடத்தப்பட்டதற்கு பெயர் சுதந்திரப்போர் என்றால் இந்த கொள்ளையர்களை எதிர்த்து நடைபெறும் போருக்கும் சுதந்திரப் போர் என்றே பெயரிடலாம்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

09-01-2025 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-01-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம்:மருந்து கு...