கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>தாமஸ் ஆல்வா எடிசன்

  
அமெரிக்கா பாடசாலை ஒன்றில் எட்டு வயது சிறுவனை "இவன் அடிமுட்டாள் பாடசாலையில் இருந்தால் மற்ற மாணவர்களையும் கெடுத்து விடுவான்". இனி இவனுக்கு பாட சாலையின் அனுமதி இல்லை என்று ஒரு கடிதம் எழுதி அந்த சிறுவனின் சட்டைப்பையில் வைத்து ஆசிரியர்களால் விரட்டப்பட்டவன்.

தாயார் கவலை கொண்டாலும், தைரியமாக வீட்டில் வைத்து பாடங்களை கற்று கொடுத்தார். தாயின் கல்வியிலே வளர்ந்த சிறுவன்....பின்னாளில் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டான். இன்றும் அக்.,21ம் தேதி இரவு 9.59க்கு வீதி பயண விளக்குகளை தவிர, இதர மின்சார விளக்குகள் அனைத்தையும் அணைத்தும் ஒரு நிமிடம் அமெரிக்காவை இருளாக்கி விட்டு, பின்னர் மீண்டும் ஒளிர விட்டு தொலைக்காட்சி, வானொலியில் அறிவிப்பார்கள் இப்படி.., எடிசன் பிறந்திருக்கா விட்டால் உலகம் இப்படிதான் இருளாக இருந்து இருக்கும் என்று...!

மேலே கூறிய அந்த முட்டாள் சிறுவன் தான் பின்னாளில் விஞ்ஞானிகளின் தந்தை என போற்றப்படும் தாமஸ் ஆல்வா எடிசன் ஆவார். ஆகவே யாரும் முட்டாள் இல்லை. நீங்களும் அடுத்தவர் சொல்வதை கேட்டு வாழ்வதை விட்டு விடுங்கள். உங்களை நீங்களே நிர்ணயப்படுத்துங்கள். உங்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு வைரம் இருக்கிறது. அதை பட்டைதீட்டுங்கள்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Budget 2025-2026 - Full Speech by Finance Minister

 நிதிநிலை அறிக்கை 2025-2026 - நிதியமைச்சரின் முழுமையான உரை Budget 2025-2026 - Full Speech by Finance Minister Union Budget 2025-2026  Budget...