கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>ரகசியம் பேசலாமா?

கடைவீதியில் நடந்து வந்துகொண்டிருந்தார் சாக்ரடீஸ். எதிரில் தென்பட்ட ஒருவர், ''உங்கள் நண்பனைப் பற்றி ஒரு ரகசியம் சொல்லட்டுமா?'' என்றார்.

உடனே சாக்ரடீஸ், ''நீங்கள், என்னிடம் சொல்லப் போவது உண்மைதானா!'' என்றார் சாக்ரடீஸ்.

''தெரியவில்லை... கேள்விப்பட்ட தகவல்!'' என்றார் அவர்.

''அது நல்ல விஷயமா?''

''இல்லை. எதிர்மறையானதுதான்''

''அந்த ரகசியத்தை கேட்பதால் ஏதேனும் பலன் உண்டா?''

''கிடையாது''

இதைக்கேட்ட சாக்ரடீஸ், ''நீ சொல்லும் ரகசியம் உண்மையல்ல; நல்ல விஷயமும் அல்ல; அதனால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. எனவே, நீ அதை என்னிடத்தில் சொல்ல வேண்டியதே இல்லை'' என்று கூறிவிட்டு நடக்க ஆரம்பித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

SGT Appointment Order Ceremony - DEE Proceedings

  இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா 24.07.2025 அன்று சென்னையில் நடைபெறுதல் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் Appoin...