கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>வில்லியம் ஷாக்லே....

 
ட்ரான்சிஸ்டரை கண்டுபிடித்தவர்களுள் ஒருவரான வில்லியம் ஷாக்லே பிறந்த தினம் இன்று (பிப்.13).

மின்னணுயுகம் தொடங்கியபோது, வெற்றிடக் குழாயால் ஆன மின்னணு கருவிகள் பயன்பாட்டில் இருந்தன. அவை வெகு சீக்கிரம் சூடவதாகவும், அளவில் பெரிதான கருவிகளை அமைக்க பயன்படுவதாகவும் மட்டுமே இருந்தது.

ஜான் பார்டீன் மற்றும் வால்டர் ப்ரட்டெயிட் எனும் இரு விஞ்ஞானிகள் தங்கத்தை கொண்டு இரண்டு தொடர்பு புள்ளிகளை ஜெர்மானியத்தில் உண்டு செய்கிறபொழுது உள்ளே செலுத்தப்படுகிற
மின்சமிக்கை வெளியே வருகிற பொழுது இன்னமும் பெரிதாக்கப்பட்டு வெளியேறுவதை கண்டறிந்தார்கள். அதை மேலும் செம்மைப்படுத்தி ட்ரான்ஸ்சிஸ்டரை ஷாக்லே தலைமையிலான குழு உருவாக்கியது.

எண்ணற்ற தவறுகள் செய்தாலும் பரவாயில்லை அதிலிருந்து பாடங்கள் கற்க வேண்டும் நாம் என்று தன் குழுவை ஊக்குவித்து, அதிலிருந்து சரியான முடிவுகளை கண்டறிய செய்தார். கச்சிதமான ட்ரான்ஸ்சிஸ்டர் பெல் ஆய்வகத்தில் உருவானது.

உலகின் போக்கையே மாற்றிப்போடுகிற சாதனையை இக்கண்டுபிடிப்பு செய்தது என்றால் அது மிகையில்லை. மிகப்பெரிய அளவில் இருந்த பல்வேறு கருவிகள் அளவில் குட்டியானது; துல்லியம் மற்றும் செயல்பாட்டு திறன் அதிகரித்தது. குறைக்கடத்திகள் எனப்படும் ஜெர்மானியம் சிலிகான்
முதலியவற்றை கொண்டு உருவாக்கப்பட்ட ட்ரான்சிஸ்டர்கள் டிவி, ரேடியோ, கால்குலேட்டர் ஆகியவற்றின் அளவை மிகப்பெரிய அளவில் குறைத்தது. மின்சார செலவும் குறைந்து. அவற்றின் பயன்பாடு அதிகரித்தது ட்ரான்ஸ்பர் ரெசிஸ்டர் என்பதே ட்ரான்சிஸ்டர் என ஆனது.

மின்தடையை தாண்டி மின்சார சிக்னல்களை கடத்தவும், பெருக்கவும் செய்வதால் இப்படி ஒரு பெயர் உண்டானது இதைக்கொண்டே வாக்மேன் கருவியை அகியோ மோரிடோ உருவாக்கினார். இந்த கண்டுபிடிப்புக்காக இயற்பியலுக்கான 1956இன் நோபல் பரிசு இம்மூவருக்கும் வழங்கப்பட்டது.
 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Reducing Data Entry Workload of HMs and Teachers in EMIS - SPD Proceedings

  EMIS பணிகளிலிருந்து 28.02.2025 க்குள் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விடுவிக்கப்படுவார்கள் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்...