கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>20 ஆண்டுகள்...!

ஒரு பெண்மணி நடு இரவில் தூக்கத்தில் எழுந்து தன் கணவர் அருகில் இல்லாததை உணர்ந்து அவரைத் தேடினார்..!

வீடு முழுவதும் தேடி, கடைசியில் அவர் சமையலையறையில் அமர்ந்திருந்ததை­க் கண்டார், அவருக்கு முன்னால் காபி இருந்தது.

அவர் ஆழ்ந்த சிந்தனையில் சுவரை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார்.

இடையிடையே கண்ணில் வழியும் கண்ணீரைத் துடைத்தபடி காபியை அருந்திக் கொண்டிருப்பதைக் ­ கண்டார்.

திருமணமானவர்கள் ­ கீழே படிக்கவேண்டாம் :

மனம் பதைபதைத்து அவர் அருகில் சென்று, இதமாகக் கையைப் பிடித்து, “என்ன ஆயிற்று? இந்த நடு இரவில் இங்கே வந்து தனியாக அமர்ந்திருக்கிறீர்களே?” என்று கேட்டார்.

கணவன்: உனக்கு நினைவிருக்கிறதா..?

20 வருடங்களுக்கு முன்னால் உனக்கு 18 வயதாகும் போது நாம் இருவரும் தனியாக பார்க்கில் சந்தித்தோமே..?

மனைவி: ஆமாம், நினைவிருக்கிறது.

கணவன் (தொண்டை அடைக்கக் கமறலுடன்): அன்று உன் அப்பாவிடம் இருவரும் மாட்டிக்கொண்டோமே..?

மனைவி: ஆமாம் (கணவரின் கண்களைத் துடைத்து விடுகிறார்)

கணவன்: என் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து “மரியாதையாக என் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறாயா..?

இல்லை, 20 ஆண்டுகள் உன்னை ஜெயிலுக்கு அனுப்பவா?” என்று உன் அப்பா என்னைக் கேட்டது உனக்கு நினைவிருக்கிறதா..?

மனைவி: அதுவும் நினைவில் இருக்கிறது. அதற்கென்ன..?

கணவன் கண்களைத் துடைத்தவாறு: அன்று என்னை ஜெயிலுக்கு அனுப்பியிருந்தால் இன்று எனக்கு விடுதலை நாள்...!

இதுக்கு அப்புறம் விழுந்த அடி, கேக்கவா வேணும்...!

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Powers given to Government Aided School Correspondents to pay Teachers

  அனைத்து வகை அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குகின்ற முழு அதிகாரமும் பள்ளி நிர்வாகிகளுக்கு வழங்கி உத்தரவு The order ...