கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>ஜூல்ஸ் வெர்னே....

 
உலகின் இணையற்ற அறிவியல் புனைக்கதை எழுத்தாளர் ஜூல்ஸ் வெர்னேவைத் தெரியுமா உங்களுக்கு?

ஜூல்ஸ் வெர்னே... பிரான்ஸ் தேசத்தில் பிறந்த இவர் குட்டி பையனாக இருக்கும்பொழுது படகில் ஏறி தன் ஊரின் ஊடாக ஓடிய நதியில் பயணம் போய் எண்ணற்ற நாட்டு படகுகளை, பயணிகளை கண்டு வியந்தார். சாகச எண்ணம் மனதில் எரிய ஆரம்பித்தது. வீட்டை விட்டு கிளம்பி மேற்கிந்திய தீவுகள் போக கப்பலேறி விட்டார். அவரை சிவப்பிந்தியர்கள் வரவேற்கவில்லை. அடுத்த துறைமுகத்தில் அவரின் அப்பா தான் இரண்டு அடி விட்டு இழுத்து போனார்.

வக்கீல் தொழிலுக்கு படிக்க பாரிஸ் அனுப்பினால் மனிதர் புகழ் பெற்ற விக்டர் ஹுகோ, அலெக்சாண்டர் டுமாஸ் ஆகியோரிடம் நட்பு கொண்டு எழுத்தாளர் ஆக முயற்சி செய்தார். அப்பா விஷயம் தெரிந்து பணம் அனுப்புவதை நிறுத்தி விட்டார். மனிதர் அசரவில்லை. அறிவியல் சங்கதிகளோடு சுவாரசியமான கதைகளை வடித்தார்; ஆனால்,அவற்றில் ஏகத்துக்கும் அறிவியல் விஷயங்கள் இருப்பதாக புறக்கணித்தார்கள்.

சிக்கலான விஷயத்தை எளிய மொழியில் சொல்லும் கலையை ஹெட்செல் எனும் பதிப்பாளர் சொல்லித்தந்தார். சந்தோஷமான முடிவுகளையும் வைக்க அவர் அறிவுரை தந்தார். அப்படியே செய்தார் இவர். நிலவுக்கு பூமியில் இருந்து போவதாக அப்பொழுதே கதை எழுதினார்.

வசதிகள் குறைவாக இருந்த அக்காலத்தில் எண்பது நாட்களில் உலகை சுற்றி பயணம் வரும் கதையை படைத்தார். ஹெலிகாப்டர், விமானங்கள், நீர் மூழ்கி கப்பல்கள், நிலவுக்கு விண்கலம் எல்லாமும் இல்லாத 19 ஆம் நூற்றாண்டிலேயே அவற்றை தன் எழுத்தில் கொண்டு வந்தார். அதைப் படித்து எண்ணற்ற இளைஞர்கள் அவற்றை உருவாக்க ஆர்வம் கொண்டார்கள்.
அறிவியல் புனைகதையின் தந்தைகளில் ஒருவராக போற்றப்படுகிறார் இவர். ஒரு மனநலம் குன்றியவர் சுட்டு ஒரு காலை விந்தி விந்தி நடந்தும், நீரிழிவு நோயோடு போராடிக்கொண்டும் இருந்தாலும் தன் கதைகளில் அத்தனை சாகசத்தை இவர் வாசகனுக்கு பரிசளித்தார்.

அவரின் நூல்கள் உலக அளவில் அகதா கிறிஸ்டிக்கு அடுத்தபடியாக அதிக மொழிகளில் மொழிபெயர்க்கபட்டுள்ளது. பூமியில் இருந்து வான்நோக்கி ஒரு மனிதன் எழுகிற சிலை அவரின் நினைவிடத்தில் இருக்க நீங்காத்துயில் கொண்டிருக்கிறார் அவர்.

முடிவில்லா அற்புதங்களை நோக்கிய தேடல்கள் என்றைக்கும் மனித குலத்தை முன்னணியில் வைத்திருக்கும் என்றார் அவர். "தங்க எரிமலை" எனும் அவரின் நூலின் தலைப்பை போலவே சாகசத்தை பொற்குழம்பு போல உமிழ்ந்த அவரின் பிறந்தநாள் இன்று (பிப்.8).

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அதிசயத்தின் விலை - இன்றைய சிறுகதை

  அதிசயத்தின் விலை - இன்று ஒரு சிறு கதை The Price of Miracle - Today's short story அதிசயங்கள் எந்த வடிவில் வேண்டுமானாலும் நடக்கலாம் 🍁🍁...