கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>ஜிம் லேக்கர்....

 
ஜிம் லேக்கர் எனும் இங்கிலாந்தை சேர்ந்த கிரிக்கெட் வீரரை தெரியுமா உங்களுக்கு?

கும்ப்ளேவின் ஒரே இன்னிங்ஸ்சில் பத்து விக்கெட் என்கிற சாதனை உங்களுக்கு தெரிந்திருக்குமாயின் இவரையும் தெரிந்துகொள்ளத்தான் வேண்டும்.

இளம் வயதில் வேகப்பந்து வீச்சை விரும்பித்தான் வந்தார். கூடவே மட்டையை சுழற்றி ரன்களை அள்ளவும் ஆசை இருந்தது அவருக்கு. ஆனால், வில்சன் என்பவரின் அறிவுரையை கேட்டு சுழற்பந்து வீச்சுக்கு மாறினார். ஒரு கட்டத்தில் போட்டு ஆஸ்திரலியா வீரர்கள் இவரின் பந்துவீச்சை பின்னி எடுத்தார்கள். ஒரே இன்னிங்க்சில் ஒன்பது சிக்ஸர்கூட பறக்க விட்டார்கள்.

மனிதர் மனம் தளரவில்லை; போராடி மீண்டார். எட்டு வருடம் கழித்து வந்த ஆஸ்திரேலிய அணியிடம் 1956-ல் பழி தீர்த்து கொண்டார். ஓல்ட் ட்ராஃபோர்ட் மைதானத்தில் நடந்த ஆஷஸ் தொடரின் நான்காவது போட்டியில் முதல் இன்னிங்ஸ்சில் ஆஸ்திரேலியா அணியின் ஒன்பது விக்கெட் கழட்டி இருந்த மனிதர் இரண்டாவது இன்னிங்ஸ்சில் பத்து விக்கெட்டை ஐம்பத்தி மூன்று ரன்களுக்கு எடுத்து மாயஜாலம் பண்ணி இருந்தார்.

முதல்தர போட்டிகளிலேயே இன்று வரை மொத்தம் 17 விக்கெட்கள் தான் எடுக்கப்பட்டுள்ளன என்பது இவருடையது எத்தகு சாதனை என்பதை விளக்கும்.

மனிதர் போட்டி முடிந்து வீட்டுக்கு போனார்; கிரிக்கெட்டை பற்றி அவ்வளவாக தெரியாத அவரின் மனைவி வாசலில் நின்று கொண்டிருந்தார். "என்னங்க அப்டி பண்ணினீங்க? நூறு காலுக்கு மேல வந்துடுச்சு!" என்றாரே பார்க்கலாம்.

இவரின் வர்ணனையின் பொழுது ing எனும் உச்சரிப்பு வருமிடத்தில் g-ஐ ஜாலியாக விட்டுவிட்டு உச்சரிக்கும் இவரின் பாணி பிரபலமானது. அவர் மறைந்தபொழுது ஒரு பெரும் ஜி கிரிக்கெட்டை விட்டு தவறிதான் போயிருந்தது. அவரின் பிறந்தநாள் இன்று (பிப்.9)

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNSED Administrators App New Version: 0.4.1 - Updated on 18-02-2025 - Health & Stem Module Changes. Bug Fixes & Performance Improvements

  *  TNSED Administrators App *  What's is new..? * 🎯 Health & Stem Module Changes... * 🎯  Bug Fixes & Performance Improvement...