கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>> இன்றைய செய்திகள் தொகுப்பு - 26.09.2020(சனிக்கிழமை)

 

🌹காயப்படுத்திய உறவுகளை கண்ணெதிரே காணும் போது அவர்களை தவிர்க்க முடியாமல்

உதடு சிரிக்கிறது,

மனது வலிக்கிறது.!

🌹🌹எத்தனை முறை நீங்கள் ஏமாற்றப்பட்டாலும் ஒருபோதும் அடுத்தவரை ஏமாற்ற நினைக்காதீர்கள்.

ஏனெனில் அவரவர் பலன் அவரவர் அனுபவிப்பர்.

நேர்மைக்கு என்றுமே மரணமில்லை கவலையை விடுவோம்!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🍒🍒பொறியியல் தரவரிசைப் பட்டியல் தேதி மீண்டும் மாற்றம் :வருகிற 28-ம் தேதி பட்டியல் வெளியிடப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தகவல்

🍒🍒அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான காணொலிக் காட்சி (VIDEO CONFERENCE) ஆய்வுக் கூட்டம் 28.09.2020ம் தேதியிலிருந்து மாற்றம் செய்யப்பட்டு 01-10-2020 அன்று நடைபெறுதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.

🍒🍒தனியார் கல்லூரி எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான கல்வி உதவி தொகை கோரிய வழக்கில் 8 வாரத்தில் முடிவெடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

🍒🍒பள்ளிகளை திறப்பது எப்போது ? அனைத்து துறையினருடன் ஆலோசித்து முதல்வர் 1 ம் தேதிக்கு முன் அறிவிப்பார். அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

🍒🍒பெருந்தலைவர் காமராசர் விருதிற்கு தகுதியானவர்களின் பெயர்களைப் பரிந்துரைக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.

🍒🍒 ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் காலிப் பணியிடம் பதவி உயர்வு மூலம் நிரப்ப - தேர்ந்தோர் பெயர் பட்டியல் வெளியீடு

🍒🍒DSE PROCEEDINGS:தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப் பணி - அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்கள் பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய பணிகள் மற்றும் பராமரிக்கப் படவேண்டிய பதிவேடுகள் குறித்த வழிமுறைகள் வழங்கி பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு

🍒🍒மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீடு; 50% இட ஒதுக்கீடு கோரும் மனு: அக்.13-க்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைப்பு

🍒🍒முதலமைச்சர் தனிப்பிரிவில் பெறப்பட்ட மனுவிற்கு பதில் அளிக்க வேண்டி உள்ளதால், உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுத் தொகை 31.03.2020க்குப் பிறகு அனுமதிக்கப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை மற்றும் மொத்தத் தொகை குறித்து அறிக்கை அளிக்குமாறு கருவூலக் கணக்கு ஆணையர் கடிதம்.

🍒🍒பள்ளிக்கல்வி இயக்குனர் (DSE) Proceedings for NSIGSE (தேசிய பெண் குழந்தைகளுக்கான இடைநிலைக் கல்வி ஊக்குவிப்பு திட்டம்) Maturity Payment from 2012-2013 to 2016-2017 தகுதியான மாணவியரின் வங்கிக் கணக்கு விவரம் கோரி கடிதம் வெளியிடு

🍒🍒2020- ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பெருந்தலைவர் காமராசர் விருதிற்கு தகுதியானவர்களின் பெயர்களைப் பரிந்துரைக்கக் கோருதல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு

🍒🍒பீகார் மாநில சட்டப்பேரவைத் தொகுதிக்கான தேர்தல் அக்டோபர் 28-ஆம் தேதி தொடங்கி மூன்று கட்டங்களாக நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறியுள்ளார்.

🍒🍒கொரோனா நிவாரணம் தொடரும் கேரளாவில் டிசம்பர் வரை இலவச உணவுப்பொருட்கள்:முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு

🍒🍒அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை.

செப். 30-ம் தேதி வரை நீட்டித்து கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவு

🍒🍒எஸ் பி பி உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் 

-தமிழக முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு

🍒🍒பாடகர் எஸ்.பி.பி மறைவுக்கு அஞ்சலி : ஐபிஎல் போட்டியில் கறுப்பு நிற பட்டை அணிந்து நேற்று விளையாடினர் சென்னை அணி வீரர்கள்.                                                          🍒🍒தமிழகத்தில் சூடுபிடிக்கிறது கிசான் திட்ட மோசடி வழக்கு விசாரணை; போலி

விவசாயிகள் பட்டியலை சிபிசிஐடி-யிடம்

ஒப்படைத்தது வேளாண்துறை.

🍒🍒தன்னலமின்றி பிறருக்காக உழைத்தால் ஒரு போதும் சோர்வு வராது, தன்னலமற்ற உழைப்பால் தனி சக்தி பிறக்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு.

🍒🍒தேசிய சித்த மருத்துவ மையத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டும்

என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு கடிதம் மூலம் வலியுறுத்தல்.

🍒🍒ரயில்களில் பார்சல்களை அனுப்பவும் முன்பதிவு வசதி அறிமுகம்,

120 நாட்களுக்கு முன்பே பார்சல் முன்பதிவு செய்யலாம் என தெற்கு ரயில்வே அறிவிப்பு.

🍒🍒கொரோனா வைரஸ் மேலும் அதிக தொற்று தன்மை கொண்டதாக

மாறியுள்ளதாக அமெரிக்காவில் விஞ்ஞானிகள் மேற்கொண்ட

ஆய்வில் தகவல்.

🍒🍒அமெரிக்கத் தேர்தல் நேர்மையான முறையில் நடைபெறும் என்பதை உறுதியாக சொல்ல முடியவில்லை - அதிபர் டிரம்ப்.

🍒🍒இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கொரோனா தொடர்பு தடமறிதலுக்கான செயலி, பயன்பாட்டுக்கு வந்தது. புளூடூத் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு செயல்படும் இந்த செயலி மூலம் உணவகங்கள், கபேக்கள் உள்ளிட்ட இடங்களில் கியூஆர் குறியீடுகளை ஸ்கேன் செய்தும் கொரோனா தொடர்புகளை கண்டறியலாம் என்று இங்கிலாந்து சுகாதாரத்துறை அமைச்சர் மாட் ஹான்காக் தெரிவித்துள்ளார்.

🍒🍒 ''அக்., 1ல் பள்ளிகளை திறப்பது குறித்து, முதல்வர் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு மாவட்டம், கோபியில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழகத்தில், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு மட்டும், அக்., 1ல் பள்ளிகளை திறப்பது குறித்து, முதல்வர் முடிவு எடுப்பார்.

இது குறித்து, சுகாதாரம், வருவாய் மற்றும் பள்ளிக்கல்வித் துறை ஒருங்கிணைந்து, முதல்வர் தலைமையில் நடக்கும், உயர்மட்ட குழு கூட்டத்தில் தான் முடிவுகள் மேற்கொள்ள இயலும்.

பள்ளிக்கல்வித் துறை சார்பில், 14474 என்ற ஹெல்ப் லைன் உள்ளது. இந்த எண்ணில், பாடத்தில் சந்தேகம் உள்ள மாணவர்களுக்கு, காலை, 9:00 முதல், மாலை, 5:00 மணி வரை விளக்கம் அளிக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்

🍒🍒கரூர் பள்ளிக் கல்வித்துறை சுற்றுச்சூழல் மன்றம் & கரூர் சுற்றுலாத் துறை இணைந்து

உலக சுற்றுலா தினம் -2020.

நாள் - 28/09/2020. திங்கள், காலை - 10.30 மணி.

இடம் - கரூர் கோட்டைமேடு அரசு உயர் நிலை பள்ளி,கரூர்,

வரவேற்பு - திரு,கா.காமில் அன்சர்,

உதவி சுற்றுலா அலுவலர்,கரூர்.

தலைமை - திருமதி,செல்வமணி, அவர்கள்.

தலைமையாசிரியர்,

(கூட்ட ஐடி -226 140 5978

கடவுக்குறியீடு: 56knUZ)

ஜூம் இனைய வழியில் விழா தொடக்கம் & வாழ்த்துரை - திருமதி, கா.பெ,மகேஸ்வரி, அவர்கள்,

முதன்மைக் கல்வி அலுவலர்,கரூர்.

சிறப்புரை - சுற்றுலாவும்,கிராம முன்னேற்றம்.

செ,ஜெரால்டு,

மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர், கரூர்.

நிகழ்வு தொகுப்பு - திரு,முரளி, பட்டதாரி ஆசிரியர்.

நன்றி - மனோகர், இடைநிலை ஆசிரியர்.

🍒🍒ஐபிஎல் 2020 டி20: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

🍒🍒தமிழ்நாடு நகர்ப்புற ஊரமைப்பு சட்டத்திருத்தம் கொண்டு வந்ததற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

👉நில உரிமையாளருக்கு தெரியாமல் அவர்களுக்கு சொந்தமான பகுதியில் திட்டம் கொண்டுவர அனுமதிக்க சட்டம் வழிவகை செய்யும். திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு அனுமதி வழங்க சட்டத்திருத்தம் கொண்டு வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பொதுமக்களை பாதிக்கும் சட்டத்திருத்தத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                             

   என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...