கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 ஆந்திராவில் நவம்பர் 2 முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு...

 ஆந்திராவில் வரும் நவம்பர் 2-ம் தேதி பள்ளிகள், ஜூனியர் கல்லூரிகள் திறக்கப்படவுள்ளன. இதற்கான அட்டவணையை மாநில அரசு வெளியிட்டுள்ளது.

கரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 20 -ம் தேதிமுதல் ஆந்திராவில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டன. இப்போது கரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பள்ளிகளை திறக்கலாம் என மத்திய அரசு அறிவித்தது. இதன்படி, வரும் நவம்பர் மாதம் 2-ம்தேதி பள்ளிகள், ஜூனியர் கல்லூரிகள் (பிளஸ் 1, 2) திறக்கப்படும் என ஆந்திர அரசு ஏற்கெனவே அறிவித்தது. இந்நிலையில், நேற்று இதற்கான அட்டவணையை மாநில முதன்மைச் செயலாளர் நீலம் சாஹ்னி வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:

நவம்பர் 2-ம் தேதி 9, 10-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதே தேதியில் இண்டர்மீடியட் ஜூனியர் கல்லூரிகளும் (முதலாம் ஆண்டு) திறக்கப்படவுள்ளன. 12-ம் தேதி 2-ம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்படுகின்றன.

23-ம் தேதி முதல் 6, 7, 8 ஆகிய வகுப்புகளுக்கும், டிசம்பர் 14-ம் தேதி 1 முதல் 5 வரையிலான வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கும் இதே அட்டவணை பொருந்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

23-12-2024 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2024 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம் : மருந்து க...