கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் செயல்முறை பாடங்களுக்கு புத்தகங்கள் அரசு வழங்க பெற்றோர்கள் வலியுறுத்தல்...

 தமிழ்நாடு அரசு அரசு மற்றும் அரசு  உதவி பெறும்  பள்ளிகளுக்கு  14 இலவச பொருட்கள் ஆண்டுதோறும்  கல்விகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறது ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அனைத்து பள்ளிகளுக்கும்  கல்வித் துறையின் சார்பாகஇலவசமாக புத்தகங்களை வழங்கப்படுகிறது.

 இதனைத் தொடர்ந்தும் பள்ளிகளுக்கு செயல்முறை பாடத்திற்கான புத்தகங்களை வழங்க வேண்டும் என அரசுக்கு பெற்றோர்கள்  வலியுறுத்தல்.

 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், செயல்முறை பாடங்களுக்கான புத்தகங்களையும், நலத்திட்ட பொருட்களில் ஒன்றாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், மாணவர்களின் கல்வி தடைப்படாமல் இருக்க, அரசின் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. 

மாணவர்களுக்கு புத்தகப்பை, வண்ண பென்சில்கள், பாடப்புத்தகங்கள் முதல் லேப்டாப் வரை, கல்விக்கு தேவையான 14 வகையான நலத்திட்டப்பொருட்களை, கல்வியாண்டுதோறும் அரசு இலவசமாக வழங்கி வருகிறது.இதனால் அடிப்படை கல்வி பெறுவதற்கான இடையூறு மாணவர்களுக்கு இல்லை. பிளஸ் 2 வகுப்பு வரை மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள், கல்வித்துறையின் சார்பில் பள்ளிகளில் வழங்கப்படுகிறது.

ஆனால், செயல்முறை பாடங்களுக்கு மட்டும், புத்தகம் மற்றும் அதற்கான நோட்டுகள், அரசின் சார்பில் வழங்கப்படுவதில்லை. மாற்றாக, மாணவர்களிடம் தொகை சேகரித்து அதன்பின்பு, செயல்முறை பயிற்சிக்கான புத்தகங்கள் மற்றும் நோட்டுகளை பள்ளி நிர்வாகத்தினர் பெற்று வழங்குகின்றனர்.உயர்நிலையில் ஒரு பாடப்பிரிவு, மேல்நிலையில் கலை, அறிவியல் என எந்த பிரிவிலும் தலா ஆறு செயல்முறைப்பாடப்பிரிவுகள் உள்ளன. ஒரு பாடப்பிரிவுக்கான செயல்முறை புத்தகம், 15 ரூபாய் முதல் 20 வரை உள்ளது. 

இதற்கான புத்தகங்களை, கட்டணம் செலுத்தி பெற முடியாத நிலையில் உள்ள மாணவர்களும், அரசுப்பள்ளியில் படிக்கின்றனர். அம்மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தான் உதவுகின்றனர். இந்நிலை மாறவும், அனைத்து மாணவர்களும் பொருளாதார சிக்கல் ஏற்படாமல் கல்வி கற்கவும், நோட்டுப்புத்தகங்களை முழுமையாகவே இலவசமாக அரசு வழங்க வேண்டுமென, பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns