கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 மருத்துவ கலந்தாய்வு வரும் 18 அல்லது 19ம் தேதி தொடங்கும் - சுகாதாரத்துறை அமைச்சர்...

தமிழகத்தில் மருத்துவக் கலந்தாய்வுக்கு 34,424 பேர் விண்ணப்பித்துள்ளனர். மொத்தமாக 4,061 இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது. அரசுப்பள்ளி மாணவர்கள் 304 பேருக்கு குறையாமல் கிடைக்கும். பிடிஎஸ் படிப்பில் 91 பேருக்கு கிடைக்கும்.

எனவே, 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு மூலமாக மொத்தமாக 395 பேருக்கு மருத்துவப்படிப்புக்கான இடம் கிடைக்கும். வருகிற 16-ம்தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். 18 அல்லது 19-ம் தேதி கலந்தாய்வு நடைபெறும். அதிகாரப்பூர்வ மருத்துவ கலந்தாய்வு தேதி ஓரிரு நாளில் அறிவிக்கப்படும். முறையான கொரோனா விதிமுறைகளுடன் கலந்தாய்வு நேரடியாகவே நடைபெறும். முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் மருத்துவ கவுன்சிலிங் நேரடியாக நடைபெறும் என்று விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

உச்சநீதிமன்றத்தில் TET வழக்கு ஒத்திவைப்பு

 உச்சநீதிமன்றத்தில் பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு TET தேவை  வழக்கு 03.04.2025க்கு ஒத்திவைப்பு  Teacher Eligibility Test required f...