கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து ஆய்வு - 3 நகரங்களுக்கு ஒரே நாளில் பிரதமர் மோடி பயணம், ஒரு மணிநேரம் ஆய்வு - விஞ்ஞானிகளுக்கு பாராட்டு...

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து ஆய்வு - 3 நகரங்களுக்கு ஒரே நாளில் பிரதமர் மோடி பயணம், ஒரு மணிநேரம் ஆய்வு - விஞ்ஞானிகளுக்கு பாராட்டு...

நரேந்திர மோடி கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து குறித்து ஆய்வு நடத்த 3 நகரங்களுக்கு ஒரே நாளில் பயணம், ஒரு மணிநேரம் ஆய்வு மேற்கொண்டார் விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ய 7 நிறுவனங்களுக்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. அந்த நிறுவனங்களின் தடுப்பூசியை மனிதர்களிடம் பரிசோதித்து பார்ப்பது, 2 மற்றும் 3-வது கட்டங்களில் இருக்கிறது. இந்தநிலையில், கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் 3 நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி இன்று சென்றார் 

முதல் கட்டமாக குஜராத் மாநிலம் ஆமதாபாத் அருகே சாங்கோதர் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள ஜைடஸ் காடிலா நிறுவன ஆலைக்கு  இன்று காலை நேரில் சென்றார்.  அந்நிறுவனம் தயாரிக்கும் ‘ஜைகோவ்-டி’ தடுப்பூசியின் 2-வது கட்ட பரிசோதனை நடந்து வருகிறது. அதன் முன்னேற்றம் குறித்து மோடி கேட்டறிந்ததோடு  தடுப்பூசி உற்பத்தி பணிகளை பார்வையிட்டார்.          

டெல்லியிலிருந்து இன்று காலை புறப்பட்ட பிரதமர் மோடி காலை 9.00 மக்கு அகமதாபாத் சென்றடைந்தார். அங்கிருந்து சிறிது தொலைவில் உள்ள சாங்கோதர் தொழிற்பூங்காவில் இருக்கும் ஜைடல் கெடிலா நிறுவனத்துக்கு பிரதமர் மோடி சென்றார்.


ஜைடஸ் கெடிலா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, நிர்வாகிகள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோருடன் கொரோனா தடுப்பு மருந்து தயாரி்க்கும் பணி, பரிசோதனை நிலவரம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

பிபிஇ ஆடை அணிந்து, முகக்கவசம் அணிந்து நிறுவனத்துக்குள் சென்ற பிரதமர் மோடி, கொரோனோ தடுப்பு மருந்துப் பணிகளை நேரில் ஆய்வுசெய்தார். அப்போது பிரதமர் மோடியிடம் கொரோனா தடுப்பு பணிகள், பரிசோதனையின் கட்டம் ஆகியவற்றை ஆராய்ச்சியாளர்கள் விளக்கினர். அவர்களிடம் பிரதமர் மோடியும் பல்வேறு சந்தேதகங்களைக் கேட்டு விளக்கம் பெற்றார் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

2021-ம் ஆண்டு மார்ச் மாதம் கெடிலா நிறுவனத்தின் சார்பில் கொரோனா தடுப்பு மருந்து மக்களின் பயன்பாட்டுக்கு வரும் எனத் தெரிகிறது. ஏறக்குறைய ஒரு மணிநேரம் கெடிலா நிறுவனத்தில் இருந்த பிரதமர் மோடி காலை 11.30 மணிக்கு அங்கிருந்து ஐதராபாத்துக்குப் புறப்பட்டார். 

அதன்பின் பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்ட கருத்தில் “ அகமதாபாத்தில் உள்ள ஜைடஸ் கெடிலா பயோடெக் பார்க் நிறுவனத்துக்கு சென்றேன். அங்கு கொரோனா வைரஸுக்கு எதிராக உள்நாட்டிலேயே டிஏன்ஏ அடிப்படையாக வைத்து தயாரிக்கப்படும் தடுப்பு மருந்து குறித்த விவரங்களைக் கேட்டறிந்தேன்.

இந்த பணிக்கு பின்புலத்தில் இருக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கு என்னுடைய பாராட்டுகள். இந்த மருந்து தயாரிக்கும் குழுவின் பயணத்துக்கு அரசு தேவையான உதவிகளை அளித்து துணையாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக்கில் தயாரிக்கப்படும் உள்நாட்டு தடுப்பூசி குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

இது குறித்து அவரது டுவிட்டரில் ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக்கில் தயாரிக்கப்படும் உள்நாட்டு தடுப்பூசி குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

இதுவரை சோதனைகளில் வெற்றிகண்ட விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள். விரைவான முன்னேற்றத்தை எளிதாக்க அவர்களின் குழு இந்திய மருத்துவ ஆராய்சி கவுன்சிலுடன் நெருக்கமாக செயல்படுகிறார்கள் என கூறி உள்ளார்.

ஐதராபாத்தில், சுமார்  ஒரு மணி நேர ஆய்வுக்குப் பிறகு, பிரதமர், புனேவில் இருக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவுக்குச் சென்றார்.அகமதாபாத், ஐதராபாத்தை தொடர்ந்து புனே வந்தடைந்தார் பிரதமர் மோடி; அங்கு கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டார்.



சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா ஒரு தனியார் மருந்து உற்பத்தி நிறுவனம் ஆகும். இது ஆஸ்ட்ராசெனகா மருந்து உற்பத்தி நிறுவனம் மற்றும் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்துடன்  இணைந்து ஒரு கொரோனா தடுப்பு மருந்தை தயாரித்து வருகிறது.

சீரம் இன்ஸ்டிடியூட் பரிசோதனை செய்து கொண்டு இருக்கும் கொரோனா தடுப்பு மருந்தின் உற்பத்தி மற்றும் விநியோகம் குறித்தும், எப்போது முறையாக தடுப்பூசி வழங்கல் தொடங்கப்படும் எனவும் பிரதமர் அங்கு கேட்டறிந்தார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

National Girl Child Day on 24.01.2025 – DSE Proceedings on Awareness Activities – Attachment : Forms & Child Safety Manual at School

  தேசிய பெண் குழந்தைகள் தினம் 24.01.2025 அன்று அனுசரித்தல் - பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய விழிப்புணர்வு செயல்பாடுகள் குறித்து DSE செயல்முறைக...