கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 கல்லூரி பருவத் தேர்வுகளை மார்ச் மாதத்துக்குள் நடத்தி முடிக்க திட்டம்...

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு கல்லூரி பருவ தேர்வுகளை மார்ச் மாதத்துக்குள் நடத்தி முடிக்க உயர் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

 தமிழகத்தில் கொரோனா  காரணமாக பள்ளி கல்லூரிகள் கடந்த 8 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. அனைத்து மாணவர்களுக்கும் இணைய வழியில் தற்போது பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கல்லூரிகள் திறக்க நவம்பர் 16ஆம் தேதி முதல் அரசு அனுமதி அளித்துள்ளது. எனினும் கொரானா இரண்டாவது அலை மற்றும் வடகிழக்கு பருவமழை தீவிரம் காரணமாக கல்லூரிகள் திறப்பை ஒத்திவைக்க பெற்றோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக துறை அமைச்சர் மற்றும் நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி வியாழக்கிழமை ஆலோசனை நடத்த உள்ளார். அதன் பின்பு பள்ளி கல்லூரிகள் திறப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருகிறது. இதையடுத்து கல்லூரி மாணவர்களுக்கான பருவத்தேர்வு ஜூலை விரைந்து மார்ச் மாதத்திற்குள் முடிக்க உயர்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Magizh Mutram 2025-2026 - House Activities - Guidelines by DSE

 அரசு பள்ளிகளில் மகிழ் முற்றம் மற்றும் மாணவர் குழு செயல்பாடுகள் - வழிகாட்டு நெறிமுறைகள் - தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ,...