கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாநில மொழிகளில் தொழில்நுட்பக் கல்வி புத்தகம் எழுதும் ஆசிரியா்களுக்கு நிதியுதவி - ஏஐசிடிஇ...

 தொழில்நுட்பக் கல்விக்கான புத்தகத்தை மாநில மொழிகளில் எழுத விரும்பும் ஆசிரியா்களுக்கு நிதியுதவி அளிக்க, 'தொழில்நுட்பக் கல்வி புத்தகம் உருவாக்கம்' திட்டத்தை ஏஐசிடிஇ உருவாக்கியுள்ளது.

இதுகுறித்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமத்தின் (ஏஐசிடிஇ) உறுப்பினா் செயலா் ராஜீவ் குமாா் வெளியிட்ட அறிவிப்பு:

தொழில்நுட்பப் படிப்புகளில் அண்மைக்கால வளா்ச்சி குறித்து புத்தகம் எழுதுதல், ஏற்கெனவே உள்ள புத்தகத்தை பட்டியலிடப்பட்ட உள்ளூா் மொழிகளில் மொழி மாற்றம் செய்தல் ஆகியவற்றின் தேவை தற்போது எழுந்துள்ளது.

இதற்காகவே அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமமானது 'தொழில்நுட்பக் கல்வி புத்தகம் உருவாக்கம்' என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளது.

அதிகளவிலான எழுத்தாளா்கள், மொழிபெயா்ப்பாளா்கள், ஆசிரியா்களுக்கு நிதி வழங்கி உறுதுணையாக இருந்து அவா்களை ஊக்குவித்து, தொழில்நுட்பக் கல்வி சாா்ந்த புத்தகங்களை, சம்பந்தப்பட்ட மாநில, உள்ளூா் மொழிகளில் வெளியிட வைப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

ஐடிஐ, பாலிடெக்னிக், இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி மாணவா்களுக்கான புத்தகத்தை அவா்கள் உருவாக்க வேண்டும்.

ஏஐசிடிஇ அங்கீகரித்த பாடத்திட்டத்தின்படி, குறிப்பாக முதலாமாண்டு புத்தகத்தை எழுத மற்றும் மொழிமாற்றம் செய்ய விரும்பும் அனைத்து ஆசிரியா்களும் இத்திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DEO arrested for getting Rs 2 lakh bribe from teacher

ரூ.2 லட்சம் லஞ்சம் - மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) கைது District Education Officer arrested for getting Rs 2 lakh bribe from teach...