கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய செய்திகள் தொகுப்பு... 05.12.2020 (சனி)...

🌹நிறைய பேசிக் கொண்டிந்தவர் திடீரென்று அமைதியாகி விட்டார் என்றால் 

அவர் ஊமையாகி விட்டார் என்று அர்த்தம் இல்லை

இனி உங்களிடம் பேசக் கூடாது என்கிற அளவுக்கு நீங்கள் அவரை காயப்படுத்தி இருக்கின்றீர்கள்.!

🌹🌹ஒரே வார்த்தையில் எந்த உறவும் முறியலாம்.

ஆனால் ஓராயிரம் முறை மன்னிப்பு கேட்டாலும் மீண்டும் பழைய நிலைமைக்கு வராது.!!

🌹🌹🌹யாரையும் பார்த்து இவருக்கென்ன குறை என்று எடை போட்டு விடாதீர்கள்

இங்கு பல வலிகளோடு தான் வாழ்கிறார்கள் பலர்.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🍒🍒தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணி 01-01-2021  நிலவரப்படி அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு / பணி மாறுதல் மூலம் நியமனம் செய்ய- தகுதி வாய்ந்தோர் பட்டியலை தயார் செய்தல்- விவரங்களை கோருதல் சார்பு-  பள்ளிக்கல்வித்துறை இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு. DATE 04.12.2020

🍒🍒பட்டதாரி ஆசிரியர் பதவிக்குத் தகுதியானவர்களின் விவரங்களை அனுப்ப- பள்ளிக் கல்வி இயக்குநரகம் உத்தரவு

🍒🍒ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற உள்ள ஊரகத்  திறனாய்வுத் தேர்வு (TRUST Exam) குறித்த அறிவிக்கை  வெளியீடு

🍒🍒Specific Concept Oriented programme ( SCOPE ) மாவட்ட அளவில் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி நடத்துதல் சார்பு- மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள் வெளியீடு.

🍒🍒 ஜனவரி முதல் பள்ளிகளைத் திறக்க அனுமதியுங்கள்: அனைத்து மாநில முதல்வர்களுக்கும் சிஐஎஸ்சிஇ கடிதம்

🍒🍒DGE - NTSE Exam - தேசிய திறனாய்வுத் தேர்வு டிசம்பர் 2020 - பள்ளிகளிடமிருந்து Summary Report - ஐ பெறுதல் - தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்கக செய்தி வெளியீடு

தேசிய திறனாய்வு தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செலுத்த முடியாத பள்ளிகள் வங்கி வரைவோலையாக செலுத்தலாம் என அரசுத் தேர்வுகள் இணை இயக்குநர் உத்தரவு

🍒🍒மாணவர்களுக்கு  "போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப்" -கல்வி உதவித் தொகையை நிறுத்தக் கூடாது, முதலமைச்சர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.           

🍒🍒10,11,12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அடுத்த ஆண்டு "சட்டசபை தேர்தல்" முடிந்த பிறகு நடத்த திட்டம்

🍒🍒சிதம்பரம் நடராஜர் கோவில் உட்புறம் தண்ணீரில் மூழ்கியது

கோயிலில் ஆயிரங்கால் மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. வடிகால் வசதிகளை சரியான முறையில் தூர்வாராதால் தண்ணீர் வடிய வழியில்லை என  குற்றம்சாட்டு. 

🍒🍒மழை காரணமாக சென்னை உயர்நீதிமன்ற கம்யூட்டர் ஆப்ரேட்டர்,டைப்பிஸ்ட் பணிகளுக்கான

திறனாய்வு தேர்வு மீண்டும் ஒத்திவைப்பு.

நிவர் புயல் காரணமாக ஒத்திவைக்கபட்டு இன்று டிசம்பர் 5ல் நடைபெற இருந்த நிலையில் மீண்டும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.

🍒🍒நேற்று நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஹிந்தியில் பேசியதற்கு திமுக சார்பில் கலந்துகொண்ட திருச்சி சிவா எதிர்ப்பு.

அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் இருக்கும் போது ஹிந்தியில் பேசினால் ஒன்றுமே புரியவில்லை என பிரதமரிடம் கோரிக்கை.

🍒🍒இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி ஒத்திவைப்பு 

தென் ஆப்பிரிக்க வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து ஐசிசி அறிவிப்பு.                                                 

  🍒🍒ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி : 11 ரன்கள் வித்யாசத்தில் இந்திய அணி வெற்றி. 

தனது முதல் சர்வதேச டி20 போட்டியில் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தி தமிழக வீரர் நடராஜன் அபார பந்துவீச்சு

🍒🍒சர்வதேச கிரிக்கெட்டில் ஆட்ட நாயகன் விருதை வென்ற முதல் Concussion Substitute என்ற சிறப்பினை பெற்றார் இந்திய வீரர் சாஹல்.

🍒🍒வேளாண் சட்ட எதிர்ப்பு: 

டிச. 8ம் தேதி அகில இந்திய முழு அடைப்பு போராட்டத்துக்கு டெல்லியில் போராட விவசாயிகள் சங்கங்கள் அழைப்பு

🍒🍒கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள், முறையாக அமல்படுத்தப்படுகிறதா என்பது பற்றி பதிலளிக்க மத்திய, மாநில அரசுகள் வருகிற 7ந்தேதிக்குள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

🍒🍒விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும் என்று மத்திய வேளாண் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் உறுதி அளித்துள்ளார்.

🍒🍒அடுத்த நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில் இந்தியாவை வலுப்படுத்தும் விதமாக அடுத்த ஆண்டில் பட்ஜெட் அமையும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

🍒🍒கொரோனா தடுப்பூசி நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக போடப்படும் என்று பிரான்ஸ் பிரதமர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

🍒🍒ஓபிசி வகுப்பினருக்கான வருமான உச்சவரம்பை ரூ.25 லட்சமாக உயர்த்திட வேண்டும் - மத்திய அமைச்சருக்கு டி.ஆர்.பாலு கடிதம்.

🍒🍒முகக்கவசம் அணியாதவர்கள் கரோனா சிகிச்சை மையத்தில் கட்டாயம் பணி செய்ய வேண்டும் - உயர்நீதிமன்றம் உத்தரவு.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...