🌹கேட்டால் மட்டுமே கொடுங்கள்
பணமோ அல்லது பாசமோ
இலவசமாக கொடுக்கப்படும் எதுவாயினும் ஒருநாள் உதாசீனம் செய்யப்படும்.!
🌹🌹அதிகாரம் செய்யும் இடத்தில் இருந்தாலும்,அன்பாய் பேசுங்கள்.
அதிகார போதையில் வாழ்ந்தவர்களை விட,
வீழ்ந்தவர்களே இங்கு அதிகம்.!!
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🌄🌄தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் சென்ற ஆண்டு கொடுத்த பஸ் பாஸை பயன்படுத்தலாம்.
🌄🌄அரசுத் தேர்வுகள் இயக்ககம் - கல்வி மாவட்டம் மாறியுள்ள பள்ளிகளின் விபரங்களை அனுப்பி வைக்கக் கோரி அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு
🌄🌄அனைத்து பல்கலைக்கழகங்களிலும் நடப்பு செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனிலேயே நடைபெறும் என அறிவிப்பு.
🌄🌄SPD - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி-2020-21 ஆம் ஆண்டிற்கான “பள்ளித் தரநிலை மற்றும் மதிப்பீடு ” (Shaala Siddhi) உட்கூறு சார்ந்த - சுயமதிப்பீடு மற்றும் புறமதிப்பீடு (Self and External Evaluation) - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
🌄🌄இன்று நடைபெற இருந்த CA தேர்வு ஒத்திவைப்பு
🌄🌄DGE - புதிதாக தயாரிக்கப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள் மற்றும் அதனை சார்ந்த மாவட்ட கல்வி அலுவலகங்களின் பட்டியல் - அரசு தேர்வு இயக்குநர் உத்தரவு
🌄🌄வரும் டிச.9ந்தேதி வரை பருவமழை இருப்பதால் பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்- கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.
🌄🌄கல்லூரி மாணவர்கள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 31ஆம் தேதி வரை கால நீட்டிப்பு
🌄🌄புதிய பள்ளிகள் தொடங்க மாவட்ட வாரியாக பட்டியல் தயாரிக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவு.
🌄🌄நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கும் உயர்நிலை மேல்நிலைப் பள்ளியில் பதவி உயர்வு வழங்க கோரிக்கை
🌄🌄வேளாண் பல்கலைக்கழகத்தில் வேளாண் பட்டதாரிகள் பெயரை பதிவு செய்துகொள்ள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
🌄🌄உண்டு உறைவிட பள்ளிகளில் இடைநிலை பட்டதாரி முதுகலை ஆசிரியர்கள் நியமனம் இயக்குனர் உத்தரவு
🌄🌄கொரோனா குறைகிறது என சாதாரணமாக எண்ணிவிடக் கூடாது : அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் - அமைச்சர் விஜயபாஸ்கர்
🌄🌄இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி கோரி ஃபைசர் நிறுவனம் விண்ணப்பம்
🌄🌄"விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்"
திமுக துணை பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி MLA பிரச்சார பயணம் பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தலைமையில் பிரச்சாரம் துவங்கியது
பழனி அடிவாரம் பாத விநாயகர் கோயிலில் ஐ. பெரியசாமி அவர்கள் சாமி தரிசனம் செய்தபின்பு பொதுமக்களை சந்தித்து உரையாடினார்.
🌄🌄திமுக ஆட்சிக்கு வரவேண்டும், மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்
திமுக எம்.பி. கனிமொழி
🌄🌄போராட்டம் நடத்திவரும் விவசாயிகளை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு
🌄🌄கொரோனா பாதிப்பு இல்லாத பக்தர்கள் மட்டுமே திருநள்ளாறு கோவிலில் சனிப்பெயர்ச்சிக்கு அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் சனிப்பெயர்ச்சிக்கு காரைக்கால் வரும் பக்தர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என கூறினார்.
🌄🌄நான் அறிக்கை நாயகன் என்றால், முதல்வர் பழனிசாமி ஊழல் நாயகன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
👉யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்; ரஜினி முதலில் கட்சி தொடங்கட்டும், பிறகு கருத்து தெரிவிக்கிறேன் என கூறினார்.
👉மேலும் விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டத்தை ஒடுக்க முயற்சி செய்த தமிழக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடாளுமன்றத்தில் திமுக குரல் கொடுத்து இருந்தது.வேளாண் சட்டத்துக்கு எதிராக திமுக வாக்களித்தது என கூறினார்
🌄🌄புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கான பூமி பூஜை நடத்தினாலும் கட்டுமான பணியை தொடங்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
👉முன்னதாக புதிய நாடாளுமன்ற கட்டிடம் அமைக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது. நாடாளுமன்ற கட்டடம் குறித்த வழக்கு நிலுவையில் இருக்கும் பொது கட்டுமானங்களை தொடங்குவது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளது. கட்டுமானங்கள் நடக்கவில்லை என்பதை உறுதிப்படுத்த சொலிசிட்டர் ஜெனரலுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல். டிசம்பர் 10 -ல் புதிய நாடாளுமன்ற கட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ள நிலையில் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
🌄🌄புதிய கட்சி தொடங்கவுள்ள நடிகர் ரஜினிகாந்த், தன்னுடைய சகோதரர் சத்யநாராயணாவிடம் ஆசி பெற்றார்
🌄🌄அரசுப் பணிகளை ஒழுங்குமுறை படுத்துவதில் உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியீடு
🌄🌄திமுகவோடு கூட்டணி வைத்துக்கொள்ள மாட்டேன் என ரஜினி சொன்னதாக எனக்கு தகவல் வரவில்லை
தமிழருவி மணியனை தவறாக அருகில் வைத்துக்கொண்டுவிட்டோமே என ரஜினி சொன்னதாகதான் எனக்கு தகவல் வந்துள்ளது.
- மு.க.ஸ்டாலின், திமுக தலைவர்
🌄🌄புயல் பாதிப்புகள் மற்றும் மீட்பு பணிகள் தொடர்பாக இன்று கடலூர் மாவட்டத்திலும், நாளை திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டத்திலும் முதலமைச்சர் நேரில் ஆய்வு மேற்கொள்கிறார்.
🌄🌄SC, ST & SCA பிரிவினருக்கான மருத்துவக் கலந்தாய்வு.
வரும் 11 முதல் 14-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும்.
பெரும்பாலான இடங்கள் ஒதுக்கப்பட்டு விட்டதால், கலந்தாய்வில் பங்கேற்றால் இடம் கிடைக்கும் என்று உறுதியளிக்க முடியாது.
- மருத்துவக் கல்வி இயக்ககம்.
🌄🌄அரசுப் பேருந்துகள், தனியார் பேருந்துகளில் 100% இருக்கைகளில் பயணிக்க தமிழக அரசு அனுமதி
-அரசாணை வெளியீடு
🌄🌄சுற்றுலாத் தளங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படும் என்று அறிவித்த நிலையில் அதற்கான நிலையான வழிக்காட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு.
🌄🌄மத்தியப்பிரதேச மாநிலத்தில் 2021 மார்ச் வரை 1 - 8 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்கவும், தேர்வுகளை நடத்தவும் தடை : 10 & 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்த அனுமதி.
🌄🌄அரசின் ஒதுக்கீட்டு பணியிடங்களில் தற்காலிக பணியாளர்களை பணியமர்த்தக் கூடாது . விதிகளை மீறி செயல்படும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை செயலாளர் சண்முகம் எச்சரிக்கை.
🌄🌄நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர் கல்வித்துறை முதன்மை செயலர் அபூர்வா, அண்ணா பல்கலைக் கழக பதிவாளர் நேரில் ஆஜராகினர்.
🌄🌄கல்வி உதவித் தொகை 2020-2021 – புதுப்பித்தல் ( Renewal ) விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் விரைந்து முடிக்க கல்வி நிலையங்களுக்கு அறிவுறுத்தல்.
🌄🌄TN EMIS New Version update Available - கற்போம் எழுதுவோம் இயக்கம் வருகைப் பதிவு முறை அறிமுகம்
🌄🌄தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு தமிழகத்தில் வாய்ப்பு வழங்க வேண்டும் - உயர் நீதிமன்றம்
🌄🌄பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு; கச்சா எண்ணெய் விலையை உயர்த்த சவுதி அரேபியா திட்டம்: இந்தியாவில் பெட்ரோல், டீசலின் விலை உயர வாய்ப்பு.
🌄🌄கரோனா நோய் நெருக்கடி காரணமாக உலகம் முழுவதும் வறுமையில் வாடுவோரின் எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டக்கூடும் என்று ஐ.நா. எச்சரித்துள்ளது.
🌄🌄பிரிட்டனில் Pfizer, BioNTech நிறுவனங்கள் தயாரித்துள்ள COVID-19 நோய்த்தொற்றுத் தடுப்பு மருந்து விநியோகம் இந்த வாரம் தொடங்கவுள்ளது. அந்தத் தடுப்பு மருந்தைப் பெரிய அளவில் பயன்படுத்தவிருக்கும் முதல் நாடு பிரிட்டன்.
🌄🌄ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கியது. முதல்கட்டமாக மருத்துவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட நோய்த்தொற்று அபாயம் அதிகம் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
🌄🌄ஓராண்டாக நடைபெற்று வந்த எவரெஸ்டின் உயரத்தை அளவிடும், பணியின் முடிவுகள் இன்று வெளியிடப்பட உள்ளன. 8,848 மீட்டர் உயரத்துடன், உலகின் உயரமான சிகரமாக எவரெஸ்ட் கருதப்படுகிறது.
🌄🌄அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் ஜோ பைடன், தன்னுடைய நிர்வாகம் அமைச்சரவையிலும், வெள்ளை மாளிகையிலும், இருந்ததைவிட மிகவும் மாறுபட்டதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
🌄🌄2021 ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது கூகுள் பே, போன்பே மூலம் பணம் அனுப்பவும் 30 சதவீதம் கட்டணம்.
🌄🌄 டெட் தேர்வு அறிவிப்பு எப்போது? - தேர்வாளர்கள் எதிர்பார்ப்பு.
🌄🌄இன்று டிசம்பர் 8 முழு கடை அடைப்பு போராட்டம்
இது கடை அடைப்புக்காக அல்ல விவசாயிகளின் வாழ்வு அனைந்து போய் விட கூடாது என்பதுக்காக
வியாபாரிகள் இன்று டிசம்பர் 8 கடை அடைத்தால் உங்கள் கடை வாசலில் எழுதி ஒட்டுங்கள் என் ஆதரவு விவசாயிகள்ளுக்காக
நாடு தழுவிய முழு அடைப்பு - பாதுகாப்பை பலப்படுத்தி அமைதியை நிலைநாட்டுமாறு அனைத்து மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்
சென்னையில் இன்று 7000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
🌄🌄பொதுமக்களே ஊழல் வாதியாக மாறிவிட்டனர்" - உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கருத்து
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என்றும் அன்புடன்
சு.வேலுமணி M.A.,B.Ed.,
தலைமையாசிரியர் & மாவட்டச் செயலாளர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
கரூர் மாவட்டம்.
அலைபேசி:9003599926