🌹உரிமை இல்லாத உறவும்
உண்மை இல்லாத அன்பும்
நேர்மை இல்லாத நட்பும்
நம்பிக்கை இல்லாத வாழ்க்கையும்
என்றும் நிரந்தரம் இல்லை.!
🌹🌹சிலருக்கு வேசம் போடும் புது உறவுகள்
பல தேடி வருவதனால்
பாசமான பழைய உறவுகள் மறந்தே போய்விடுகிறது.!!
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🍒🍒7.5% இடஒதுக்கீட்டில், மருத்துவ இடங்களை அதிகரிப்பது தொடர்பாக, உச்சநீதிமன்றத்தைதான் அணுக வேண்டும்
தேசிய மருத்துவ ஆணையம்
🍒🍒அரசு பள்ளி மாணவர்களுக்கு JEE மற்றும் IIT பயிற்சி வழங்குவது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு
🍒🍒விளையாட்டு போட்டியில் சேர்க்கப்படுகிறது யோகா" - மத்திய அமைச்சகம் ஒப்புதல்
🍒🍒அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்து கோரிக்கை மனு அளிக்க ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பு கூட்டத்தில் முடிவு
🍒🍒மருத்துவ படிப்பு நிர்வாக இடத்திற்கு 19ல் கவுன்சிலிங்
🍒🍒ஐ.ஐ.டி.,யை அடுத்து அண்ணா பல்கலை 6 மாணவர்களுக்கு கொரோனா தொற்று
🍒🍒அனைத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு,
Safety and security training _ tntp portal வாயிலாக 16.12.2020 முதல் ஆன்லைன் வழியே தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயிற்சி எடுத்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரே விதமான பயிற்சியே வழங்கப்படுகிறது. எனவே 16.12.2020 முதல் (இரண்டு வாரங்களுக்குள்) தங்களுக்கு உகந்த ஏதேனும் ஒருநாளில்/ஒரு நேரத்தில் தலைமை ஆசிரியர்கள்/ஆசிரியர்கள் இப்பயிற்சியினை எடுத்துக் கொள்ளலாம் என தெரிவித்துக்கொள்கிறோம்.
- state team
🍒🍒தமிழகத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மேல்நிலைப்பிரிவு மாணவர்கள் தேசிய அளவில் நடைபெறும் ஐஐடி, ஜெஇஇ, போட்டி தேர்வுகளில் கலந்துக்கொண்டு இந்திய தொழில்நுட்ப கழக நிறுவனகளில் சேர்வதற்கு வசதியாக, டெல்லியில் உள்ள நிறுவனத்துடன் தமிழக பள்ளிக் கல்வித்துறை ஒப்பந்தம் செய்துள்ளது.
🍒🍒ஆல் பாஸ் வழங்கப்பட்ட மாணவர்கள் கூடுதல் மதிப்பெண்கள் பெற செமஸ்டர் தேர்வு எழுதலாம் : சென்னை பல்கலை அறிவிப்பு
🍒🍒கர்நாடகாவில் நடப்பு கல்வியாண்டு தொடங்கி இன்னும் பள்ளி, கல்லூரிகள் திறக்காமல் இருப்பதால் வரும் ஜனவரி முதல் ஜூலை வரை கல்வியாண்டை நிர்ணயம் செய்வதுடன் வரும் கோடைகால விடுமுறையை தவிர்க்க மாநில கல்வி இயக்குனரகம் முடிவு செய்துள்ளது
🍒🍒மதுரையில் நீட் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சியை அதிகரிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பயிற்சி மைய பொறுப்பாளர்களுடன் சி.இ.ஓ., சுவாமிநாதன் இணையவழியில் ஆலோசித்தார்.
🍒🍒சிதம்பரத்தில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் வாயில் கருப்புத் துணி கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அரசுக் கட்டணத்தை வசூலிக்கக் கோரி மாணவர்கள் நேற்று எட்டாம் நாளாக வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டம் நடத்தினர்.
🍒🍒குழந்தைகள் காப்பகங்களில் ஆன்லைன் வகுப்புகளுக்கான புத்தகம் உள்ளிட்டவற்றை 30 நாள்களுக்குள் வழங்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
🍒🍒டெல்லி சட்டமன்றத்தில் வேளாண் சட்ட நகலை கிழித்து எறிந்தார் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
🍒🍒நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க 27 லட்சம் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு.
🍒🍒வேலை வாங்கித் தரக்கோரி பணம் கொடுப்பவர்களும் குற்றவாளிகள்தான்
வேலை வாங்க பணம் தருபவர்களை அப்பாவி எனக் கூறக்கூடாது
-உயர்நீதிமன்ற நீதிபதி
🍒🍒வத்த குழம்பு, மோர் குழம்பு உள்ளிட்ட பாரம்பரிய உணவு வகைகள் நமக்கானது எனவும் பீட்சா, பர்கர் போன்றவை நம் கால நிலைக்கு ஏற்றதல்ல
விவசாயிகள் அவர்களின் சுயநலத்திற்காக உழைக்கவில்லை , நாட்டிற்காக உழைக்கின்றனர்
- துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு
🍒🍒814 கணிபொறி ஆசிரியர்கள் தேர்வில் மூன்று தேர்வு மையங்களில் முறைகேடுகள் நடந்ததாக புகார்.
ஓய்வு பெற்ற நீதிபதி ஆதிநாதன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
🍒🍒எதை குறித்தும் கவலைப்படாமல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ரத்து கண்டனத்திற்குரியது என்று திமுக எம்.பி. டி.ஆர்.பாலு குற்றம்சாட்டியுள்ளார். 👉நாட்டில் நிலவும் அசாதாரண சூழலை உச்சநீதிமன்றமே உணர்ந்து தீர்வு காண முன் வருகிறது. கருத்தொற்றுமை, ஜனநாயகம் என்ற உன்னதமான பாதைக்கு மத்திய பாஜக அரசு திரும்ப வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
🍒🍒திட்டமிட்டபடி செயற்கைகோள் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது
திட்டமிட்டபடி செயற்கைகோள் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது
அடுத்த ராக்கெட் தனியார் பங்களிப்புடன் விண்ணில் ஏவப்படும்
இஸ்ரோ தலைவர் சிவன் 🍒🍒'பி.எஸ்.எல்.வி. சி-50' ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது*
நவீன வசதியுடன் உருவாக்கப்பட்ட 'பி.எஸ்.எல்.வி. சி-50' ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவண் ஆராய்ச்சி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து, நேற்று(டிச.,17) மாலை 3.41 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.
இதற்கான 25 மணி நேர கவுண்டவுன்,புதன் மதியம் 2.41 மணிக்கு துவங்கியது. தொடர்ந்து ராக்கெட்டின் 4ம் நிலையில், எரிபொருள் நிரப்பும் பணிகள் துவக்கப்பட்டு, குறித்த நேரத்துக்குள் முடிவடைந்தது.
இந்த ராக்கெட்டில் செலுத்தப்பட்ட 'சி.எம்.எஸ்-01' செய்கைக்கோள், தகவல் தொடர்பு வசதிக்கான 'சி பேண்ட்' அலைக்கற்றை பயன்பாட்டுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெறப்படும் அலைவரிசை, இந்தியாவிலும், அந்தமான் - நிகோபர், லட்சத் தீவுகளில் பயன்படுத்த முடியும். சி.எம்.எஸ்.01 செயற்கைகோள், 1.400 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் 7 ஆண்டுகள் ஆகும். தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்த இஸ்ரோ விண்ணில் ஏவிய 42வது செயற்கைகோள் இதுவாகும்.
இணையவழிக்கல்வி, பேரிடர் கண்காணிப்பு மற்றும் செல்போன் சேவையை சிஎம்எஸ்-01 செயற்கைகோள் எளிதாக்கும்.
🍒🍒தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவக்கல்லூரியில் மருத்துவப்படிப்பிற்கான இடங்களை உயர்த்த வேண்டும்
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்
🍒🍒நீலகிரியில் வாழ்கின்ற படுகர் இன மக்களை மீண்டும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
பழங்குடியின பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்
கே.எஸ்.அழகிரி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்
🍒🍒விவசாயிகளின் போராடும் உரிமையில் தலையிட முடியாது - உச்சநீதிமன்றம்:
இருப்பினும், போராடும் முறையை மாற்றி, பிற குடிமக்களின் உரிமைகளை பாதுகாக்க நினைக்கிறோம் - தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே.
போராடுவதற்கான அடிப்படை உரிமைகள் அங்கீகரிக்கும்போது, போராட்டங்களால் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டுவிட கூடாது - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி 🍒🍒ஆசிரியர்களுக்கு கரோனா தடுப்பு மருந்தைச் செலுத்துவதில் முன்னுரிமை - யுனிசெஃப் வலியுறுத்தல்.
🍒🍒சென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிய தலைமை நீதிபதி ஆகிறார், சஞ்ஜீப் பானர்ஜி.
🍒🍒ஜேஇஇ மெயின் தேர்வு இனி தமிழ், மலையாளம் உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படும் -மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்.
🍒🍒தேசிய பசுமை தீர்ப்பாய நிபுணர் உறுப்பினர்களாக தமிழக முன்னாள் ஐ.ஏ.எஸ். அலுவலர்கள் நியமனம்.
🍒🍒காவல்துறையினர் போராட முடியாது என்பதால் கோரிக்கைகளை காலதாமதம் செய்யலாமா?
- உயர்நீதிமன்றம்
🍒🍒TNPSC - தடய அறிவியல் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு.
🍒🍒ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ரூ.962 கோடி பணப்பலன்கள் வழங்க முடிவு- ஓரிரு நாளில் அரசாணை வெளியாகிறது.
🍒🍒நகர்ப்புற பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கும் அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டிருக்கும் பெண்களுக்கும் இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் வகையில் திட்டத்தை விரிவாக்கம் செய்து அரசாணை வெளியீடு.
🍒🍒வெவ்வேறு டிகிரியில் பட்டம் பெற்றவரின் ஆசிரியர் பணி நியமனமத்துக்கு தடை.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என்றும் அன்புடன்
சு.வேலுமணி M.A.,B.Ed.,
தலைமையாசிரியர் & மாவட்டச் செயலாளர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
கரூர் மாவட்டம்.
அலைபேசி:9003599926