கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஒரு வருடத்தில் 217 கோடி சம்பாதித்த 9 வயது சிறுவன்...

 


தற்போதைய காலத்தில் நேரத்தை போக்க வேண்டும் என்றால் ஏதோ ஒரு படமோ, வெப் சீரியசோ பார்ப்பது வழக்கம். குறிப்பாக கொரோனா பரவும் நேரத்தில் இதுபோன்ற வெப் சீரியஸை அதிகளவில் பார்க்க தொடங்கினார்கள். அதுவும் இல்லையெனில், யூ-டியூப்பில் விடியோக்களை பார்த்து நேரத்தை செலவழிப்பார்கள்.

அதுமட்டுமின்றி, பலரும் தங்களுக்கென ஒரு யூ-டியூப் சேனல் ஆரமித்து, அதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வந்தனர். இதன்மூலம் யூ-டியூப் கண்டன்ட் கிரேட்டர்களுக்கு பணம் சம்பாதிக்க வழியாகவும் இருந்தது. அந்தவகையில், யூ-டியூப் மூலம் இந்த ஆண்டில் அதிகளவில் பணம் சம்பாதித்தவர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

இதில் முதல் இடத்தில் 9 வயது சிறுவன் இருக்கின்றான்.



ஒன்பது வயதான ரியான் காஜி என்ற சிறுவன், தனது சேனலில் பொம்மைகளை வாங்கி, அதனை ரீவியூ செய்வார். அந்தவகையில் அவரின் சேனலில் இருந்து இந்தாண்டு மட்டும் 217 கோடி சம்பாதித்து, உலகின் அதிக சம்பளம் வாங்கும் யூ-டியூபர் என்ற பட்டத்தை பெற்றார். அவரின் சேனலில் 27.6 மில்லியன் பேர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். அவரைத் தொடர்ந்து மிஸ்டர் பீஸ்ட் எனும் சேனலின் உரிமையாளர் ஜிம்மி டொனால்ட்சன், 48 மில்லியன் சப்ஸ்கிரைபேர்ஸை கொண்டுள்ள அவர், இந்தாண்டு மட்டும் 177 கோடி ருபாய் சம்பாதித்துள்ளார்.

3 ஆம் இடத்தில் விளையாட்டு-பொழுதுபோக்கு குழு, டியூட் பெர்பெக்ட் (Dude perfect). 54.5 மில்லியன் சப்ஸ்கிரைபேர்ஸை கொண்டுள்ள அந்நிறுவனம், இந்தாண்டு மட்டும் 169 கோடி ருபாய் சம்பாதித்துள்ளது. 4 ஆம் இடத்தில் ரெட் மற்றும் லிங்க் (Rhed and link) இருக்கின்றனர். இவர்கள் இந்த ஆண்டில் மட்டும் 147 கோடி ருபாய் சம்பாதித்துள்ளனர். அதனையடுத்து மார்கிப்லியர் என்பவர், 144 கோடி ருபாய் சம்பாதித்து சம்பாதித்து 5 ஆம் இடத்தில் இருப்பதாக ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Kalanjiyam Mobile App New Version Update - Version 1.21.2 - Updated on 07-04-2025

   Kalanjiyam App Update செய்த பிறகு New / Old Regime தேர்வு செய்ய முடிகிறது  KALANJIYAM APP UPDATE NEW VERSION 1.21.2 *  IFHRMS   Kalanjiya...