கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய செய்திகள் தொகுப்பு... 31.12.2020 (வியாழன்)...

 

🌹பல வருட பாசத்தையும் பந்தத்தையும் நொடியில் முறித்து விடும் பயங்கரமான ஆயுதம் தான் மனிதனின் நாக்கு.!

🌹🌹வார்த்தை எப்பொழுதெல்லாம்                                   எல்லை மீறுகிறதோ அப்போதெல்லாம் மெளனமாய் இருக்கவேண்டும்.

ஏனெனில் வார்த்தைகளால் வாழ்க்கையை இழந்தவர்கள் ஏராளம்.!!

🌹🌹🌹பணக்காரர்களுக்கு வருமான வரி சோதனை 

ஏழைகளுக்கு                                       வருமானமே ஒரு சோதனை.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🎀🎀TRB - அரசு மேல்நிலைப்பள்ளி கணினி பயிற்றுநருக்கான ஆன்லைன்  கலந்தாய்வு தேதி அறிவிப்பு : ஜனவரி 2 & 3 தேதிகளில் நடைபெறும்.

🎀🎀தொலைதூரப் படிப்புகளுக்கும் ஆன்லைனிலேயே தேர்வு நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு : தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

🎀🎀பிற்படுத்தப்பட்டோர் , மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் பகுதி நேர துப்புரவு பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்குதல் சார்ந்த அரசாணை வெளியீடு.

🎀🎀சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழகம் முழுவதும் மாவட்டம் தோறும் ஆலோசனை கூட்டம் , கருத்தரங்கம் உள்ளிட்டவை நடத்த நீதிபதி குலசேகரன் ஆணையம் முடிவு.

🎀🎀மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறக்கப்படுவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

🎀🎀10,11,12,-ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டம் குறைப்பது, எவ்வாறு பாடம் நடத்துவது என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். பாடத்திட்டம் குறைக்கப்பட்டு அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு இறுதித்தேர்வு நடத்தப்படும் எனவும் கல்வி கட்டணத்தை காரணம் காட்டி தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கையை தடுக்க கூடாது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

🎀🎀சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் குறித்து மிக முக்கியமான அறிவிப்பு  இன்று  மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

🎀🎀ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்புகள் படிக்க வாய்ப்பு: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஏற்பாடு 

🎀🎀ஜனவரியில் 8 மண்டலங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள்: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தகவல்.

🎀🎀கற்போம் எழுதுவோம் இயக்கம்” – TN EMIS கைபேசி வாயிலாக கற்போர் மற்றும் தன்னார்வல ஆசிரியர்கள் மைய வருகை விவரம் 31.12.2020 க்குள் முழுமையாக மேற்கொள்ள இயக்குநர் அறிவுறுத்துதல்

🎀🎀National Scholarship Portal மூலம் Onlineல் பதிவு செய்ய தலைமையாசிரியர்கள் ஆய்வு செய்து சான்றளிப்பு செய்யக் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு

🎀🎀GPF இறுதித் தொகை (Final Withdrawal) – 6 மாதங்கள் / ஓராண்டிற்கும் மேலாக நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கு தீர்வு காணுதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்கக நிதிக் கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகள் வெளியீடு

🎀🎀தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துவது குறித்து ஆலோசனை- கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்

🎀🎀தெலுங்கானா மாநில அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, ஓய்வூதிய வயது அதிகரிப்பு – மாநில அரசு அறிவிப்பு

🎀🎀மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை பெற ஆன்லைன் தளத்தில் போலியாக பெயர்கள் பதிவு- ஆய்வு செய்ய உத்தரவு

🎀🎀பழைய பயண அட்டையை கொண்டு அரசு கல்லூரி மாணவர்கள் இலவசமாக பயணிக்கலாம்: எம்டிசி அறிவிப்பு

🎀🎀இங்கிலாந்தில் இருந்து உத்ரகாண்ட் மாநிலத்திற்கு வந்த 25 பேரை தேடும் பணி தீவிரம்

🎀🎀திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளும் கிராமசபை கூட்டங்கள் அறிவிப்பு.🎀🎀உருமாற்றம் பெற்ற கோவிட்-19 தொற்றை கட்டுப்படுத்த தற்போது கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகள் உதவும் என்று மத்திய அரசின் தலைமை அறிவியல் ஆலோசகர்  உறுதியளித்துள்ளார்.

🎀🎀தடுப்பூசி மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கான சர்வதேச கூட்டமைப்பின்  உறுப்பினராக டாக்டர் ஹர்ஷ்வர்த்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

🎀🎀தேவைப்பட்டால் எல்லை தாண்டி இந்தியா தாக்குதல் நடத்தும் - பாகிஸ்தானுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை.

🎀🎀பணியில் இருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டால் அதை விபத்தாக தான் கருத வேண்டும்: கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு.

🎀🎀இறப்பு என்னைத் தழுவும் இறுதி நாள் வரை நான் அரசியலில் மீண்டும் அடியெடுத்து வைக்கமாட்டேன்- தமிழருவி மணியன்

🎀🎀அமெரிக்காவில் பெருகி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் கண்டறியப்பட்ட தடுப்பூசியை கமலா ஹாரிஸ் போட்டுக் கொண்டார். அவருக்கு மாடர்னா தடுப்பூசி செலுத்தப்பட்டது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது.

🎀🎀தமிழகத்தில் நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு சீருடை வழங்கப்படும்; நியாய விலைக் கடை ஊழியர்கள் சீருடை அணியாமல் இருந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் 

-அமைச்சர் செல்லூர் ராஜூ

🎀🎀இனி நான் மட்டும் அல்ல நாம் தமிழர் கட்சியே ரஜினியை கொண்டாடும் 

அரசியலுக்கு வந்திருந்தால் ரஜினியால் இகழ்ச்சியை தாங்க முடியாது

 - சீமான்

🎀🎀தேர்தலுக்கு பிறகு பெரும்பான்மையை பொறுத்து முதல்வர் வேட்பாளர் பற்றி முடிவு செய்யப்படும்-சி.டி.ரவி பாஜக

🎀🎀ரஜினி மீது அரசியல் ரீதியாக வைத்த கடும் விமர்சனங்கள் அவரையோ, குடும்பத்தாரையோ, ரசிகர்களையோ காயப்படுத்தியிருந்தால் அதற்கு நான் வருந்துகிறேன் - சீமான்

🎀🎀பட்டாசு , தீ பெட்டி தயாரிப்பு தொழிலாளர்களுக்கு தனியே அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது

🎀🎀புதிய வகை கொரோனா பரவல்; ஃபைசரை தொடர்ந்து ஆக்ஸ்ஃபோர்டின் ஆஸ்ட்ராசென்கா தடுப்பு மருந்திற்கும் பிரிட்டன் அரசு அனுமதி

🎀🎀பதற்றமான பகுதியாக அறிவித்து நாகலாந்து மாநிலத்தை அடுத்த 6 மாதங்களுக்கு ஆயுதப் படைகளின் கட்டுப்பாட்டில் மத்திய அரசு ஒப்படைத்து உத்தரவு.

🎀🎀2020-21ம் ஆண்டுக்கான வருமானவரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் பிப்ரவரி 15ம் தேதி வரை நீட்டிப்பு

🎀🎀சர்வதேச விமானப்போக்குவரத்திற்கான தடை அடுத்தமாதம் இறுதிவரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு கூறியுள்ளது. இருப்பினும் சரக்கு விமானப்போக்குவரத்திற்கு இந்த தடை பொருந்தாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

🎀🎀சென்னை பெரும்பாக்கத்தில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1152 வீடுகள் கட்டும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் நாளை திறந்து வைக்கிறார்.இதில் தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து பங்கேற்கின்றனர்.

🎀🎀102 ஆண்டுகளை கடந்துள்ள உடுமலை நகராட்சியில் பல்வேறு திட்டப் பணிகள் செயல்படுத்த 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு

🎀🎀எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என்பது வேதவாக்கு.

இதற்கு இடையில் யார் வந்தாலும் வீணாய் போய்விடுவார்கள். ஒதுக்கி வைத்து விடுவோம்

- அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி.

🎀🎀ஆகாஷ் ரக ஏவுகணைகளை விற்பனை செய்ய அனுமதி.

வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்படும் ஆகாஷ் ஏவுகணை, இந்திய படைகளில் பயன்பாட்டில் உள்ளதில் இருந்து மாறுபட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

🎀🎀இஸ்ரோ தலைவர் சிவனின் பதவிக்காலம் நீட்டிப்பு.

🎀🎀கமல்ஹாசன் கூறும் மய்யம் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்று எல்லோருக்கும் தெரியும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்முத்தரசன் கூறியுள்ளார்.

தனது கட்சிக்கான கொள்கை என்னவென்று கமல்ஹாசன் இதுவரை அறிவிக்கவில்லை  என தெரிவித்துள்ளார். தான் ஒரு விவசாயி என கூறும் முதல்வர், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக இருக்கவேண்டும் என முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்

🎀🎀வேளாண் சட்டங்களை எக்காரணம் கொண்டும் திரும்ப பெற முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

🎀🎀வேளாண் சட்டங்களுக்கு எதிராக 35 நாளாக போராடி வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 6-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. குறைந்தபட்ச ஆதார விலை பேச்சுவார்த்தைக்கு முன் போராட்டத்தை திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

🎀🎀பாஜக-வுடன் கூட்டணி வைத்தால் அ.தி.மு.க-வுக்கு படுதோல்விதான்': 

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்

🎀🎀அரசு வழங்கும் அதிகாரப்பூர்வ டோக்கன்களுக்கு மட்டும் பொங்கல் பரிசு வழங்கப்படும் -சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உத்தரவாதம்.

👉அரசு வழங்கும் அதிகாரப்பூர்வ டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு என இன்று மாலை 5 மணிக்குள் சுற்றறிக்கை வெளியிட வேண்டும் - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.

👉கூட்டுறவு மற்றும் உணவு வழங்கல் துறை வழங்கும் அதிகாரப்பூர்வ டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என சுற்றறிக்கை வெளியிடப்படும் எனவும் தமிழக அரசு உறுதி.

🎀🎀இந்தியா - பிரிட்டன் இடையிலான விமான சேவைக்கு விதிக்கப்பட்ட தடை ஜனவரி 7ந் தேதி வரை நீட்டிப்பு

டிசம்பர் 31ந் தேதி வரை இந்தியா - பிரிட்டன் இடையிலான விமான சேவைக்கு விதிக்கப்பட்ட தடை ஜனவரி 7ந் தேதி வரை நீட்டிப்பு.                                           ஜனவரி 7ந் தேதிக்கு பிறகு கடுமையான வழிமுறைகளை பின்பற்றி பிரிட்டன் - இந்தியா விமானப்போக்குவரத்து அனுமதிக்கப்படும்.

🎀🎀தமிழகத்தில் நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு சீருடை வழங்கப்படும்

நியாய விலைக் கடை ஊழியர்கள் சீருடை அணியாமல் இருந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் -அமைச்சர் செல்லூர் ராஜூ

🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀

🌹🌹National Scholarship Portal மூலம் Onlineல் பதிவு செய்ய தலைமையாசிரியர்கள் ஆய்வு செய்து சான்றளிப்பு செய்யக் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!..

👉பள்ளிக் கல்வி - National Scholarship Portal மூலம் Onlineல் பதிவு செய்தல் - தனியார் Browsing Centre மூலம் அதிக மாணவர்களை தவறாகச் சேர்த்தல் - மறு ஆய்வு செய்து தலைமையாசிரியர்கள் சான்றளிப்பு செய்யக் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு...

சிறுபான்மையினர் நலத்துறையின் கடிதங்களில் ஒரு சில மாநிலங்களில் சிறுபான்மையினர் உதவித்தொகைக்காக விண்ணப்பிக்கும் மாணவர்களின் சார்பாக அப்பள்ளித் தலைமையாசிரியர்கள் அருகாமையிலுள்ள தனியார் இணையவழிச்சேவை மையங்களின் மூலம் பதிவு செய்வதாகவும் அதற்காக , தங்களுக்கென பிரத்யேகமாகக் கொடுக்கப்பட்ட User Name மற்றும் Password அம்மைய நிர்வாகிகளுக்கு கொடுப்பதாகவும் , அத்தனியார் மைய நிர்வாகிகளில் ஒரு சிலர் அதைத் தவறாகப் பிரயோகித்து மிக அதிக எண்ணிக்கையிலான மாணவர்களை online மூலம் National Scholarship Portal - ல் சேர்த்து சந்தேகிக்கப்படும்படியான ஒரே வங்கிக்கணக்கு எண்களைக் கொடுத்து பதிவு செய்திருப்பதைக் கண்டறிந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே , இதுகுறித்து , அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு காணொலிக்காட்சி மூலமாக நடந்த கூட்டத்தில் அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்திடுமாறு வலியுறுத்தப்பட்டது. எனவே , பார்வையிற்காண் கடிதங்களில் குறிப்பிட்டுள்ளவாறு அனைத்து தலைமையாசிரியர்களும் தங்கள் User Name மற்றும் Password பயன்படுத்தி பதிவு செய்யப்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்தம் தகவல்களுக்கு தாமே பொறுப்பு என்பதால் அவற்றை மறு ஆய்வு செய்து சான்றளிப்பு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. மேலும் , அனைத்து தலைமையாசிரியர்களும் அடுத்த இரு தினங்களுக்குள் ( 31.12.2020 ) இப்பணியை விரைந்து முடிக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀                               

 🌹🌹முறைகேடுகளைத் தடுக்கப் போட்டித் தேர்வுகளில் புதிய கட்டுப்பாடுகள்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.

👉தேர்வர்களின் நலனுக்காகவும், எவ்விதத் தவறுகள் நேராமல் இருப்பதற்காகவும் புதிய கட்டுப்பாடுகளை விதிப்பதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

👉இதுதொடர்பாகத் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தேர்வர்கள் காலை 9.15 மணிக்குள் தேர்வுக் கூடத்துக்குச் செல்ல வேண்டும். இதற்கு முன் நடத்தப்பட்ட தேர்வுகளுக்கு, தேர்வு தொடங்கப்படும் வரை தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், தற்போது அந்த நடைமுறை கைவிடப்பட்டுள்ளது.

விடைத்தாளில் விவரங்களைப் பூர்த்தி செய்யவும், விடைகளைக் குறிக்கவும் கருப்பு நிற மை கொண்ட பந்து முனைப் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

விடைத்தாளில் உரிய இரு இடங்களில் கையொப்பமிட்டு, இடது கை பெருவிரல் ரேகையைப் பதிக்க வேண்டும். அப்போது பிற இடங்களில் மை படாமலும், விடைத்தாள் சேதமடையாமல் இருப்பதையும் உறுதி செய்யவேண்டும்.

வினாத்தாள் கேள்விகளுக்கு விடை தெரியவில்லை என்றால் (E) என்ற வட்டத்தைக் கருமையாக்க வேண்டும்.

விடைத்தாளில் (A), (B), (C), (D) மற்றும் (E) என ஒவ்வொரு விடைக்கும் எத்தனை வட்டங்கள் கருமையாக்கப்பட்டுள்ளன என்பதை எண்ணி, மொத்த எண்ணிக்கையை உரிய கட்டங்களில் நிரப்பிக் கருமையாக்க வேண்டும். தவறினால் 5 மதிப்பெண்கள் குறைக்கப்படும். இந்தச் செயலை மேற்கொள்ளத் தேர்வு முடிந்த பிறகு கூடுதலாக 15 நிமிடங்கள் வழங்கப்படும்.

தேர்வர்களின் நலனுக்காகவும், எவ்விதத் தவறுகளும் நேராமல் இருப்பதற்காகவும் தேர்வாணையம் மேற்குறிப்பிட்ட அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது’’.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns