கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பணியாளர்களின் பணிக்கொடையில் அபராதப் பிடித்தம் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு...

 பணியாளர்களின் பணிக்கொடையை நிறுத்தி வைக்க, தேவைப்பட்டால் அந்தத் தொகையை எடுத்துக்கொள்ளும் அதிகாரத்தையும் நிறுவனங்கள் எடுத்துக்கொள்ள முடியும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

ஒரு நிறுவனத்தில் குறைந்தபட்சம் ஐந்தாண்டுகள் பணியில் இருக்கும் பணியாளர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும் என்பது விதிமுறையாகும். பணியில் இருக்கும் ஒவ்வோர் ஆண்டுக்கும் தலா 15 நாள்கள் சம்பளத்தை பணிக்கொடையாக நிறுவனங்கள் வழங்க வேண்டும்.

கிராஜூவிட்டி நிறுத்தம்..

ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா (செயில்) நிறுவனத்தின் பணியாளர் ஒருவர் ஓய்வு பெற்ற பிறகும் நிறுவனத்தின் குடியிருப்பை காலி செய்யாமல் இருந்திருக்கிறார். அதற்கு வாடகையும் கொடுக்கவில்லை, வாடகை செலுத்தாதற்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால், எந்தத் தொகையையும் செலுத்தவில்லை என்பதால் நிறுவனம் கொடுக்க வேண்டிய பணிக்கொடையை (Gratuity) நிறுத்தி வைத்தது.

இது தொடர்பான வழக்கு ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தில் நடந்தது. ஓய்வுக் காலத்துக்குப் பிறகு, குடியிருந்த காலத்துக்கு வழக்கமான வாடகை மட்டுமே வசூலிக்க முடியும். இதற்கு அபதாரம் விதிக்கக் கூடாது. மேலும் பணிக்கொடையை உடனடியாக வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்தநிலையில் இந்த வழக்கு மேல்முறையிட்டுக்குச் சென்றது. உச்ச நீதிமன்ற நீதிபதி கவுல் தலைமையில் விசாரணை நடந்தது. இதன் தீர்ப்பில் 2017-ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள முடியாது. மேலும், செலுத்த வேண்டிய அபராத்தை பணிக்கொடையில் இருந்து நிறுவனம் எடுத்துக்கொள்ள எந்தத் தடையும் இல்லை எனத் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

பணி ஓய்வு பெற்ற பிறகும், நிறுவனத்தின் குடியிருப்பில் தங்கி இருந்தால் அபராதம் என்பது இயல்பானதுதான். அதனால் அந்த அபராதத்தை நிறுவனம் கொடுக்க வேண்டிய தொகையில் இருந்தும் எடுத்துகொள்ளலாம், பணிக்கொடையிலிருந்தும் எடுத்துக்கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்திருக்கிறது...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

₹ 1.1 lakh compensation for insect bite while traveling in bus - Court orders

 பேருந்தில் பயணித்தபோது பூச்சி கடித்ததால் ₹ 1.1 லட்சம் இழப்பீடு - நீதிமன்றம் உத்தரவு ₹ 1.1 lakh compensation for insect bite while traveling...