கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழக ரேஷன் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் எடையாளர்களுக்கு சம்பளம் உயர்வு - தமிழக அரசு திட்டம் (நாளிதழ் செய்தி)...

 


தமிழக ரேஷன் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் எடையாளர்களுக்கு அவர்களின் கோரிக்கையை ஏற்று சம்பளத்தை ரூ. 6,000 வரை உயர்த்தி தமிழக அரசு அறிவிக்க திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் அரசு மக்களுக்கு வழங்கும் முக்கிய நலத்திட்டங்கள் மற்றும் விலையில்லா பொருட்கள் அனைத்தும் ரேஷன் கடைகளின் மூலமாகவே மக்களுக்கு சேருகிறது. இதனை சிறப்பாக செய்வது ரேஷன் கடைகளில்

பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் எடையாளர்கள் தான். இவர்களின் உதவி இல்லாமல் அரசின் திட்டங்கள் எதுவும் மக்களை சென்று சேர முடியாது.


ஊழியர்களின் கோரிக்கை:

பல வருடங்களாக ரேஷன் கடைகளில் பணியாற்றி வரும் பணியாளர்கள் தங்கள் சம்பளத்தை உயர்த்தக்கோரி அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். சம வேலைக்கு சம ஊதியம் என்பதே இவர்களின் கோரிக்கையாக உள்ளது. ஆனால் அரசிடம் இருந்து இதற்கு எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது.

பொங்கல் பண்டிகைக்கு அரசு சார்பாக மக்களுக்கு பரிசுத்தொகுப்பு வழங்குவது வழக்கம். இந்த வருடம் பரிசுத்தொகுப்புடன் ரூ.2,500 ரொக்கமும் வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. இதை மக்களுக்கு வழங்கும் பொறுப்பு வழக்கம் போல் ரேஷன் கடை பணியாளர்களிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த நினைத்த ரேஷன் கடை பணியாளர்கள் அரசு தங்களின் ஊதிய உயர்வை அறிவித்தால் மட்டுமே இந்த வருட பொங்கல் பரிசு தொகுப்பை மக்களுக்கு வழங்கும் பணியில் ஈடுபடுவோம் இல்லையென்றால் பணியை புறக்கணிப்போம் என்று அறிவித்தனர்.

இதனால் அரசு 33,000 ரேஷன் கடைகளில் பணியாற்றி வரும் ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆலோசனை நடத்தி ஊதிய உயர்வை பற்றிய அறிவிப்பை வெளியிட்டது. இதன்படி, புதிதாக ரேஷன் கடைக்கு பணியில் சேருபவர்களுக்கு ரூ.12,000 சம்பளம் வழங்கப்படும். அனுபவத்தை பொறுத்து ரூ.2,500 முதல் ரூ. 6,000 வரை வரை ஊதியம் உயர்த்தப்படும் என்று அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அரசு தரப்பில் இருந்து இன்னும் அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

₹ 1.1 lakh compensation for insect bite while traveling in bus - Court orders

 பேருந்தில் பயணித்தபோது பூச்சி கடித்ததால் ₹ 1.1 லட்சம் இழப்பீடு - நீதிமன்றம் உத்தரவு ₹ 1.1 lakh compensation for insect bite while traveling...