கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வு எப்போது வழங்கப்படும்?




மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் நிறுத்தி வைக்கப் பட்டுள்ள அகவிலைப்படி உயர்வை, அடுத்த ஆண்டு மீண்டும் அமல்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் வழங்கப்பட்டு வரும் அகவிலைப் படியை, 17 சதவீதத்தில் இருந்து, 21 சதவீதமாக உயர்த்த, மத்திய அரசு, கடந்த ஜனவரி மாதம் திட்டமிட்டது. அதற்கு, மத்திய அமைச்சரவை, கடந்த மார்ச் மாதம் ஒப்புதல் அளித்தது. இதற்கிடையே, கொரோனா வைரஸ் காரணமாக, நாட்டின் பொருளாதாரம் மோசமாக பாதிக்கப்பட்டது. 

நிதி நெருக்கடிகளை சமாளிக்க, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்தது. அதன்படி, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்காக அறிவிக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வு, கடந்த ஏப்ரல் மாதம் நிறுத்தி வைக்கப்பட்டது. அடுத்த ஆண்டு ஜூலை வரை, அந்த அகவிலைப்படி, 21 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படாது என, தெரிவிக்கப்பட்டது.எனவே, பழையபடி, 17 சதவீத அகவிலைப்படி தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இதனால், 50 லட்சம் அரசு ஊழியர்களும், 60 லட்சம் ஓய்வூதியதாரர்களும், பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில், அடுத்த ஆண்டு முதல், அகவிலைப்படியை, 17 சதவீதத்தில் இருந்து, 21 சதவீதமாக உயர்த்தி வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், அரசு ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களும் நிம்மதி அடைந்து உள்ளனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...