EER பதிவேட்டில் ஒரு மாணவன், 18+ வயது வரை கல்வி பயில்வதை உறுதி செய்யும் வகையில் தகவல்கள் சேகரிக்கப் படுவது ஏன்?
CBSE பள்ளிகளில், 31.03. அன்று 5 வயது நிறைவடைந்த மாணவர்கள் மட்டுமே, முதல் வகுப்பில் சேர தகுதி படைத்தவர்கள்.
உதாரணமாக 31.03.2015 ஆம் தேதிக்கு முன்பு பிறந்த மாணவர்கள் மட்டுமே CBSE பள்ளிகளில், 2020-21 ஆம் கல்வி ஆண்டில் முதல் வகுப்பு சேர தகுதி படைத்தவர்கள்.
01.04.2015 அன்று பிறந்திருந்திருந்தால் கூட, 2020-21 ஆம் கல்வி ஆண்டில், முதல் வகுப்பில் சேர இயலாது.
இதற்கு எந்த அலுவலரும் தவிர்ப்பு வழங்க இயலாது.
ஆனால், தமிழகத்தில் 31.07. அன்று 5 வயது பூர்த்தி செய்திருந்தால் முதல் வகுப்பில் சேர தகுதி பெற்றவராகிறார்.
அதாவது 31.07.2015 அன்று 5 வயது பூர்த்தி செய்திருந்தால், 2020-21 ஆம் கல்வி ஆண்டில் முதல் வகுப்பு சேர தகுதி பெற்றவராகிறார்.
தேவைப்பட்டால், பெற்றோர் விருப்பத்தின் அடிப்படையில் 30.08.2015 அன்று 5 வயது நிறைவு பெறும் குழந்தைக்கு (30 நாட்களுக்கு மட்டும்) , உரிய அலுவலரிடம் தவிர்ப்பு பெற்று முதல் வகுப்பில் சேர்க்கலாம்.
CBSE பள்ளிகளில், எந்த வயது முதல் எந்த வயது வரை உள்ள குழந்தைகள், முதல் வகுப்பு சேர்க்கைக்கு தகுதி பெற்றவர்களாகின்றனர்?
மார்ச் 31 அன்று 5 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். மேலும் 7 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
அதாவது 2020-21 ஆம் கல்வி ஆண்டில் ஒரு குழந்தையை முதல் வகுப்பில் சேர்க்க வேண்டுமாயின், அக்குழந்தை 01.04.2013 முதல் 31.03.2015 தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்.
அதாவது 5 வயது முதல் 7 வயதுக்குள் உள்ள குழந்தைகள் முதல் வகுப்பில் சேர்க்க தகுதி படைத்தவர்கள்.
ஒரு குழந்தை 6 வயது முடிந்து 7 வயது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், முதல் வகுப்பு சேர்ந்திருந்தால், அக்குழந்தை 12 ஆம் வகுப்பு முடிக்க 18+ வயதாகி விடும்.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ், ஒரு குழந்தை 12 ஆம் வகுப்பு வரை (அதாவது 18 வயது வரை) கட்டாயம் கல்வி நிறுவனங்களில் பயில வேண்டும்.
எனவே பள்ளி செல்லாதோர் கணக்கெடுப்பு 18 வயது என்பதை இலக்காகக் கொண்டு நடத்தப் படுகிறது.
இதை பின்பற்றியே EER பதிவேட்டில் 5+ வயது முதல் 18+ வயது வரை உள்ள மாணவர்கள், கல்வி நிறுவனங்களில் பயிலும் விவரம் சேகரித்து, பதிவு செய்யப் படுகிறது.