கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய செய்திகள் தொகுப்பு...11.01.2021 (திங்கள்)...

 


🌹தினமும் ஓய்வில்லாமல் உழைப்பதால் தான் எல்லா இடத்திலும் உயரத்தில் உள்ளது கடிகாரம்.!

🌹🌹மதிக்காதவர்களிடம் பணிவை காட்டிவிடாதீர்கள் ஏனெனில் அது உங்கள் அடிமைத்தனத்தை காட்டும்.

மதிப்பவர்களிடம் உங்கள் கோபத்தை காட்டிவிடாதீர்கள் ஏனெனில் அது உங்கள் அதிகாரத்தைக் காட்டும்.!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🎀🎀தமிழகத்தில் விரைவில் பள்ளிகள் திறக்கப்படலாம் என்ற சூழலில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தூய்மைப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன  

🎀🎀வட்டார வாரியாக, அரசு தொடக்கப்பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்கள், பணியில் உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை கணக்கிட்டு, கூடுதலாக தேவைப்படுவோர் பட்டியல் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது 

🎀🎀ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகளில் காலியாக உள்ள ஆரம்பப்பள்ளி தலைமையாசிரியர்கள் பணியிடத்திற்கு பதவி உயர்வு மூலம் நிரப்பிட கலந்தாய்வு.

🎀🎀புத்தகத்தைப் பார்த்துத் தேர்வெழுதியும் தோல்வி அடைந்ததால், தங்களது விடைத்தாளை மறு மதிப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி, காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் அரசு கல்வியியல் கல்லூரி மாணவிகள் 3 பேர், புதுச்சேரி கல்வி அமைச்சர் ஆர்.கமலக்கண்ணனிடம்  மனு அளித்தனர்.

🎀🎀மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், என்.ஐ.டி போன்றவற்றில் பயிலும் ராமநாதபுரத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் ரூபாய் 2 லட்சம் வரையிலான கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துளார்.

🎀🎀அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் சம்பளம் சார்ந்த முக்கிய செய்தி - IFHRMS - ESR பரிமாற்றத்தை நிறைவு செய்தல் மற்றும் செயல்பாட்டில் கொண்டு வருதல் - அனைத்து DDOவிற்கும் கொடுக்கப்பட்ட வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

🎀🎀CPS திட்டத்தை ரத்து செய்வது குறித்து வல்லுநர் குழு பரிந்துரைகள் படி பரிசீலனை செய்து நடவடிக்கை - CM CELL REPLY

🎀🎀அண்ணா பல்கலை.க்கு உயர் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் முயற்சியை கைவிடவில்லை- மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பேட்டி                                       

🎀🎀அரசு கல்லூரி மாணவர்களுக்கு 4 மாதங்களுக்கு இலவச டேட்டா கார்டு வழங்கப்படும்.

இணையவழி வகுப்புகளில் மாணவர்கள் கலந்துக்கொள்ள ஏதுவாக நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டா வழங்கப்படும்.

ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 மாதங்களுக்கு இலவச டேட்டா வழங்கப்படும்.

அரசு கல்லூரிகள், கல்வி உதவித் தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் 9 லட்சத்து 69 ஆயிரத்து 47 மாணவர்கள் பயன்பெறுவர்.

-தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

🎀🎀புலம்பெயர் குழந்தைகளை அடையாளம் காணுதல், பள்ளிகளில் சேர்த்தல் மற்றும் அவர்களது தொடர் கல்வி குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

🎀🎀01-01-2021 நிலவரப்படி பள்ளிக்கல்வி இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்களின் பெயர் மற்றும் பதவி பட்டியல் வெளியீடு

🎀🎀11 அரசு ஓட்டுநர் பணிகளுக்கான விளம்பர அறிவிக்கை -விண்ணப்பிக்க கடைசி நாள்: 25-01-2021

🎀🎀ஜம்மு காஷ்மீர் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே நவ்ஷேரா செக்டாரில், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு - இந்திய படைகள் பதிலடி

🎀🎀இந்த ஆட்சியை மாற்ற மக்கள் தயாராகிவிட்டனர் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு

🎀🎀தற்போது சமூக நீதிக்கு எப்படி ஆபத்து வந்துள்ளதோ, அதேபோல சட்ட நீதிக்கும் ஆபத்து வந்துள்ளது - திமுக சட்டத்துறை கருத்தரங்கில் கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு

🎀🎀கோவை மக்களின் வரவேற்பு வழக்கமான ஆர்ப்பாட்டத்தோடு இருக்க, அரசின் வரவேற்பு ஆபாசமானதாக உள்ளது. போலீஸை வைத்தே கொடிக்கம்பங்களை வெட்டி வீழ்த்துவது, பேனர்களைச் சிதைப்பது, போஸ்டர்களைக் கிழிப்பது தொடர்கிறது - ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்

🎀🎀பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வலியுறுத்தி, 

திமுக மகளிரணி மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம். ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு.

🎀🎀சட்டப்பேரவை கூட்டத்துக்கு முன்பே தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் 

-பாமக நிறுவனர் ராமதாஸ்

🎀🎀தமிழகம் வெற்றி நடை போட்டிருந்தால் நாங்கள் வந்திருக்க மாட்டோம் - கமல்ஹாசன்

🎀🎀தை பிறந்தவுடன் நல்ல நாளில் கட்சி அறிவிப்பை வெளியிடுகிறேன்.

- எஸ்.ஏ.சி பேட்டி.

🎀🎀இந்தோனேசியாவில் நடந்த விமான விபத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்.  

இந்தோனேசியாவுடன் இத்துயரமான சமயத்தில் இந்தியா துணை நிற்பதாக பிரதமர் மோடி ட்வீட்.

🎀🎀இந்தியாவின் தேசிய பேரிடர் மீட்பு படையை (NDRF) ஐநாவின் சர்வதேச பேரிடர் மீட்புப் படையின் ஒரு பகுதியாக விரைவில் அங்கீகரிக்கப்பட உள்ளதாக தகவல் உலகில் எங்கு பேரிடர்கள் ஏற்பட்டாலும் ஐ.நா சார்பாக NDRF செயல்படும் என கூறப்படுகிறது.

🎀🎀உலகில் அதிகம் பேர் ட்விட்டரில் பின்தொடரும் அரசு தலைவராக முதலிடத்தில் பிரதமர் மோடி.

அமெரிக்க அதிபர் டிரம்ப் கணக்கு முடக்கப்பட்டதால் முதல் இடத்திற்கு முன்னேறினார் மோடி

🎀🎀புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடியை திரும்பப்பெற வலியுறுத்தி பிப்ரவரி 1ம் தேதி உண்ணாவிரதம்.

ஜனவரி 22ம் தேதி கிரண்பேடிக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தப்படும். 

- புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிà

🎀🎀பிசிசிஐ தலைவர் கங்குலியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு ஐ.சி.சி -க்கான பிசிசிஐ யின் பிரதிநிதியாக ஜெய் ஷா நியமிக்கப்பட்டுள்ளார்.

🎀🎀ரிலையன்ஸ் சில்லறை வர்த்தக நிறுவனம் கர்நாடகாவின் 1,100 விவசாயிகளுடன் நெல் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது.

ஒரு குவிண்டாலுக்கு ₹1,950 வீதம், அரசின் குறைந்த பட்ச ஆதார விலையை விட 100 ரூபாய் உயர்த்தி வாங்க உள்ளதாக தகவல்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...