கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய செய்திகள் தொகுப்பு... 15.01.2021 (வெள்ளி)...

 


🌹அறிவை விட புரிதல் தான் மிகவும் ஆழமானது.

நம்மை அறிந்தவர் பலர் இருப்பர் 

ஆனால் நம்மை புரிந்தவர் ஒரு சிலரே இருப்பர்.!

🌹🌹நாம் சிரிப்பு எனும் சாவியை தொலைத்து விட்டால் 

சந்தோசம் எனும் வீடு எப்போதும் பூட்டியே இருக்கும்.!!

🌹🌹🌹காயப்படுத்தியவர்கள் மறந்து விடலாம்,

ஆனால் காயப்பட்டவர்கள் என்றும் மறப்பதில்லை,

ஏற்பட்ட காயங்களையும் அதன் வலிகளையும்.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

📕📘TRUST தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை 18-01-2021 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

📕📘பள்ளிகளைத் திறப்பதில் அரசு அவசரம் காட்டக் கூடாது - அன்புமணி

📕📘இடைவெளியுடன் இருமுறை தடுப்பூசி - மத்திய அரசு.                                                       

📕📘மாணவர்களுக்கு Multivitamin Tablet மற்றும் Zinc Tablet வழங்குதல் - பள்ளிக்கல்வி இயக்குநரின் அறிவுரைகள்

&  மருத்துவ இயக்குநரின் கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.                                           📕📘அங்கன்வாடி மையங்களைத் திறப்பது குறித்து ஜனவரி 31ம் தேதிக்குள் முடிவெடுக்க மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.

📕📘அரசு உதவி பள்ளி நியமனங்கள் புதிய விதிகள் கொண்டு வர பள்ளிக்கல்வித் துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

📕📘மற்ற வகுப்புகளும் படிப்படியாக திறக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

📕📘அரை நாள் மட்டுமே பள்ளிகள் இயங்கும் - புதுச்சேரி அரசு

📕📘6 நாட்கள் வேலை, சிறப்பு வகுப்புகள் கூடாது - திறக்கும் பள்ளிகளுக்கு வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு.

📕📘அனைத்து பள்ளிகளும், பள்ளி வளாகத்தை தூய்மை செய்து, ரூ.500/-க்கான பயனீட்டுச் சான்றை ஜனவரி 20 க்குள் சமர்ப்பிக்க SPD உத்தரவு.

📕📘சைனிக் பள்ளி நுழைவுத் தேர்வுக்கு ஹால்டிக்கெட் வெளியீடு.

📕📘தகவல்களை பரிமாற மாட்டோம்: வாட்ஸ் ஆப் நிறுவனம் விளக்கம்.

📕📘SAFETY AND SECURITY பயிற்சியை முடிக்க இன்று கடைசி நாள்.                                                    

📕📘DSE PROCEEDINGS- பள்ளிக் கல்வி – 19.01.2021 முதல் பள்ளிகள் திறந்து 10 மற்றும் 12ஆம் வகுப்புகள் செயல்பட ஆணை – மாணவர்களுக்கு Multivitamin Tablet மற்றும் Zinc Tablet வழங்குதல் குறித்த பள்ளிக் கல்வி இயக்குநரின் அறிவுரைகள் வெளியீடு 

📕📘பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்கள் வருகையை கட்டாயப்படுத்தக் கூடாது

📕📘ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி மாணவர்கள் பேருந்தில் பயணிக்கலாம் – அமைச்சர் செங்கோட்டையன்

📕📘நீட் தோ்வு விடைத்தாள் முறைகேடு விவகாரத்தில் தனி விசாரணை அமைப்பு: ஜன.21-இல் முடிவு                                                         

 📕📘புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜனவரி- 29 ல் CPS ஒழிப்பு இயக்கத்தின் சார்பாக உண்ணாவிரதம் போராட்டம் அறிவிப்பு.

📕📘இந்த ஆண்டு பொதுத்தேர்வு கண்டிப்பாக நடைபெறும்-  பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

📕📘“பெற்றோரின் இசைவுக் கடிதத்துடன் மாணவர்கள் பள்ளிக்கு வரலாம்” – வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட தமிழக அரசு

📕📘அகில இந்திய துப்பாக்கிச் சுடும் போட்டியில் மதுரை மருத்துவ மாணவி முதலிடம்

📕📘அரசின் விலையில்லா டேட்டா சேவை பேராசிரியர்களுக்கு வழங்க கோரிக்கை

📕📘தமிழ் மக்களுக்கு வணக்கம், தமிழக மக்களுடன் நின்று அவர்களின் வரலாற்றை பாரம்பரியத்தை காக்கவேண்டியது எனது கடமை என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

உங்களது உணர்ச்சிகளையும், கலாச்சாரத்தையும் ரசித்து பாராட்டவே வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

📕📘ஜல்லிக்கட்டில் காளைகள் எதுவும் துன்புறுத்தப்படவில்லை அதை நானே பார்த்தேன். 

ஆட்சியில் உள்ளவர்கள் தமிழ் மொழி மற்றும் கலச்சாரத்தை ஒடிக்கி விடலாம் என நினைக்கிறார்கள் 

மதுரையில் ராகுல் காந்தி பேட்டி

📕📘தமிழகத்தில் வரும் 16ம் தேதி 166 மையங்களில் கொரோனா தடுப்பூசி, முன்களப்பணியாளர்களுக்கு செலுத்தப்படும் - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

📕📘நாட்டுக்கே வழிகாட்டியாக திகழ்கிறார்கள் தமிழக மக்கள்

விவசாயிகளுக்கு துணை நிற்பதை பெருமையாக கருதுகிறேன்

மத்திய ஆட்சியாளர்கள் தமிழ் கலாச்சாரத்தை அழிக்க முயற்சிக்கிறார்கள்

மதுரையில் ராகுல்காந்தி

📕📘கொரோனா தடுப்பு ஊசி போட்டுக்கொள்வது பற்றி சமூக வலைத்தளங்களில் வரும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம்

விழுப்புரத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

📕📘அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - சிறந்த வீரர்கள் திருநாவுக்கரசு, மற்றும் விஜய்

சிறந்த காளை - G.R. கார்த்திக் காளை

8 சுற்றுகள் நிறைவு - 520 காளைகள் 420 மாடு பிடி வீரர்கள் பங்கேற்பு

📕📘அதானி குழுமத்துக்காக தமிழகத்தின் பொருளாதார நலன், சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பை தாரைவார்ப்பது வேதனை அளிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.       அதானி குழுமத்துக்காக அதிமுக அரசும், மத்திய அரசும் போட்டி போட்டுக்கொண்டு தமிழக நலனை தரை வார்க்கின்றனர்.                                              

📕📘அவனியாபுரம் ஜல்லிக்கட்டு மேடையில் ராகுல் காந்தி - உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு

📕📘20 லட்சம் கொரானா தடுப்பூசிகளை எடுத்து செல்ல பிரேசிலில் இருந்து 2 சிறப்பு விமானம் மும்பை வர உள்ளது.

பிரேசில் அதிபரின் வேண்டுகோளை ஏற்று தடுப்பு மருந்துகளை அனுப்பி வைக்க இந்தியா இசைவு.

📕📘மதுரை தென்பலஞ்சி பகுதியில் நடைபெறும் பொங்கல் விழாவில் ராகுல்காந்தி பங்கேற்பு

பொங்கல் விழாவில் மக்களோடு அமர்ந்து உணவருந்தினார் ராகுல்காந்தி

📕📘கரோனா வைரஸ் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வுக் குழு சீனாவின் வூஹான் நகரத்தை அடைந்தது.

10 பேர் கொண்ட ஆய்வுக் குழு 14 நாள்கள் தனிமைப்படுத்துதலுக்குப் பின் ஆய்வுக்குழு ஆராய்ச்சி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் தொற்று தொடங்கிய பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

📕📘பறவை காய்ச்சலை கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

📕📘கோவிட்_19 க்கான தடுப்பூசி போடும் பணிகள் நாளை தொடங்க உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் நாடு முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

📕📘புதுச்சேரியில் அனைவருக்குமான மருத்துவக் காப்பீடு திட்டத்திற்கு ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் 

மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் 3.5 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவர்.

📕📘கொரனா தடுப்பூசி திட்டத்தை ஜனவரி 16 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு பிரதமர் மோடி தொடங்கவுள்ளார்

📕📘நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இம்மாதம் 29ம் தேதி தொடங்குகிறது.

நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் தொடக்க உரையாற்றுகிறார்.

நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.

📕📘பறவைக் காய்ச்சல் எதிரொலி காரணமாக பச்சை முட்டை மற்றும் ஆஃப் பாயில் போன்றவற்றை சாப்பிட வேண்டாம் என தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கால்நடை சுகாதார ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

📕📘மாணவர்களின் வருகை நேரம் மற்றும் வெளியேறும் நேரம் : பெற்றோருக்கு SMS மூலம் தகவல் தெரிவிக்க உத்தரவு

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

23-12-2024 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2024 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம் : மருந்து க...