கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய செய்திகள் தொகுப்பு... 18.01.2021(திங்கள்)...

🌹எதிர்பார்ப்பு இல்லாத வாழ்க்கையும் இல்லை.

எதிர்பார்ப்பதெல்லாம் வாழ்க்கையில் கிடைப்பதுமில்லை.!

🌹🌹அன்பை மட்டும் அல்ல, கோபத்தையும் கூட அதற்கான தகுதி இல்லாதவர்களிடம் காட்டி வீணடிக்காதீர்கள்.!!

🌹🌹🌹பேசி முடித்துவிட்டாலும் சரி,

பேசுவதற்கு எதுவும் இல்லை என்றாலும் சரி.

பேசிக் கொண்டே இருக்க வேண்டும் என்று சிலரிடம் பேசும்போது மட்டும் தான் தோன்றுகிறது.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🍒🍒10 & 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 40% அளவிற்கு பாடத்திட்டங்கள் குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

🍒🍒குறைக்கப்பட்ட (முன்னுரிமை அளிக்கப்பட்ட - Prioritized Syllabus) பாடத்திட்டத்தை முதலில் முடிக்கவும் நேரமிருப்பின் எஞ்சிய பாடங்களையும் முடிக்கலாம் - போட்டித் தேர்வுக்கு தயார் செய்யும் மாணவர்கள் அந்தந்த தேர்வுக்கு ஏற்ப பாடத்திட்டங்களை தயார் செய்து கொள்ள வேண்டும் - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு TNSCERT இயக்குநர் கடிதம் அனுப்பியுள்ளார்.

🍒🍒இக்னோ தொலைதூரக் கல்வி மாணவர் சேர்க்கை அவகாசம் மீண்டும் நீட்டிப்பு

🍒🍒01-06-2009 க்கு முன் தேர்வு செய்யப்பட்டு 01-06-2009க்கு பின்னர் பணியில் சேர்ந்த 70 அலுவலர்களுக்கு மட்டும் 1.86காரணியால் பெருக்க நீதிமன்ற ஆணையின் படி செயல்முறைகள் வெளியீடு.                                    🍒🍒ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - 2020-21ஆம் ஆண்டிற்கான பள்ளித் தரநிலை மற்றும் மதிப்பீடு (Shaala Siddhi)உட்கூறு சார்ந்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.

🍒🍒Safety and Security பயிற்சி 15.01.2021 உடன் நிறைவு - இனி நாம் மேற்கொள்ளும் பயிற்சி Update ஆகாது. 31.01.2021 வரை  நீட்டிக்கப்படும் என்று கூறப்பட்ட Safety and Security பயிற்சி   15.01.2021 உடன் நிறைவு - இனி நாம் மேற்கொள்ளும் பயிற்சி    Update ஆகாது.                                        

🍒🍒தமிழகத்தில் ஜனவரி 19-ம் தேதி பள்ளிகள் திறப்பு : மாணவர்களின் பாதுகாப்பிற்காக தமிழக அரசு 30.86 லட்சம் நிதி ஒதுக்கீடு 

🍒🍒பள்ளிகளைத் திறக்கும் முன் கரோனா தடுப்பூசியை வழங்குங்கள் என்று கேந்திரிய வித்யாலயா மாணவர்கள் மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தி வருகின்றனர் 

🍒🍒பொதுத்தேர்வில் இடம்பெறும் வினாக்கள் அடங்கிய கேள்வித்தொகுப்பு வழங்கலாம் - நாடாளுமன்ற நிலைக்குழு                                               

🍒🍒கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு கடுமையான பக்க விளைவுகள் ஏற்பட்டால் இழப்பீடு வழங்கப்படும் : பாரத் பயோடெக் நிறுவனம்

🍒🍒தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல் பெற திடீர் நிபந்தனை

தகவல்களை கேட்பவர்கள் அதற்கான காரணத்தையும் குறிப்பிட உத்தரவு

🍒🍒தட்கல் சிலிண்டர் புக்கிங்:

30 நிமிடத்தில் வீட்டுக்கே வரும் :இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அமலாகிறது

🍒🍒தமிழகத்தில் விரைவில் மாற்றம் வர உள்ளது: தவறாக பிரசாரம் செய்தாலும் அதிமுக எதிர் கட்சியாகக் கூட வராது. திமுக கூட்டணி 234 தொகுதிகளிலும் வெல்லும் 

சென்னையில் ஸ்டாலின் பேச்சு

🍒⛑ஜனவரி 20ம் தேதி காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி                                                

🍒🍒எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ராமாவரம் தோட்டத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார் கமல்ஹாசன்

🍒🍒"கமல்ஹாசன் எம்.ஜி.ஆர் பெயரை பயன்படுத்தினாலும் அவரால் ஒரு வார்டு கவுன்சிலராகக் கூட ஆக முடியாது!" -அமைச்சர் கே.சி.கருப்பணன்

🍒🍒கொரோனா தடுப்பூசி தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளுக்கு எதிராக மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி தொடர்பான மறு ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அவர், நேற்றைய தினம் நாட்டுக்கு மிகவும் முக்கியமான நாள் என்றார்.  விஞ்ஞானிகள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பரிசோதனைக்கு முன்வந்த அனைத்து குடிமக்களின் ஒத்துழைப்பும் 10 மாத காலத்திற்குள் நிர்வாகத்திற்கு இரண்டு தடுப்பூசிகள் தயாராக இருப்பதை உறுதி செய்துள்ளன என்றும் மத்திய அமைச்சர் கூறினார்.

🍒🍒கொரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்கியது வரலாற்று சாதனை: விஞ்ஞானிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டு

🍒🍒தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம்.

தடுப்பூசி தயார் செய்யும் இடத்திற்கு நான் நேரில் சென்று பார்த்துள்ளேன் - தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்.

🍒🍒நான் தடுப்பூசி எடுத்துக்கொண்டால் முன்களப் பணியாளர் ஒருவருக்கு தடுப்பூசி குறையும் என்பதால் தான், நான் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை 

- ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்.

🍒🍒இன்று 12 மணி விமானத்தில் டெல்லி செல்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 

பிரதமரை சந்தித்து காவிரி குண்டாறு இணைப்பு திட்டம், ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கிறார்.

🍒🍒துக்ளக் விழாவில் நீதிபதிகள் நியமனம் குறித்து பேசியதற்கு ஆடிட்டர் குருமூர்த்தி வருத்தம் தெரிவித்தார்.

உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் பதவிகளுக்காக அரசியல்வாதிகள் ஆதரவை தேடுகிறார்கள் என துக்ளக் விழாவில் பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார்

நீதிபதி பதவிக்கு விண்ணப்பித்தோர் என கூறுவதற்கு பதில், நீதிபதிகள் என்று குறிப்பிட்டு விட்டேன் என குருமூர்த்தி விளக்கம்

🍒🍒ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை அன்று கண்டெய்னர் லாரி யானை மீது  மோதிய விபத்தில் படுகாயமடைந்த யானை சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழப்பு.

🍒🍒என்னதான் செய்தாலும் தமிழகத்தில் அதிமுக எதிர்க்கட்சியாக கூட வர முடியாது

தற்போது கிராம சபை கூட்டங்கள் போன்றவையில் கிடைக்கும் மக்கள் ஆதரவைப் பார்த்தால் 234 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெறும் நிலை உள்ளது

- மு.க. ஸ்டாலின்

🍒🍒சசிகலா வருகை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. 

சசிகலா வருகை தொடர்பாக செயற்கையான மாயை ஏற்படுத்துகின்றனர். 

- அமைச்சர் ஜெயகுமார்

🍒🍒மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக கொரனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்.

🍒🍒விஸ்வரூபம் படத்தின்போது அதிமுக அரசு என்னை நடுத்தெருவில் நிறுத்த முயற்சி செய்தது

எம்.ஜி.ஆர் இருந்திருந்தால் எனக்கு அந்தநிலை ஏற்பட்டிருக்காது  

- கமல்ஹாசன், ம.நீ.ம. தலைவர்

🍒🍒ரஜினி மக்கள் மன்ற மாவட்டச்செயலாளர்கள் 4 பேர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்

ரஜினி கட்சி தொடங்காதது ஏமாற்றம் தான் 

ரஜினியிடம் தெரிவித்துவிட்டே திமுகவில் இணைந்தேன்

- ரஜினிக்காக தனது பெயரில் கட்சி தொடங்கிய ஜோசப் ஸ்டாலின்

🍒🍒ஜனவரி 26 குடியரசு தினம் அன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் ஒரு லட்சம் டிராக்டர்களில் பேரணி செல்ல இருப்பதாக விவசாயிகள் அறிவிப்பு.

🍒🍒நடைபெற்ற குரூப் - 1 தேர்வில் வினா - விடை தவறுகள் தொடர்பாக தேர்வர்களிடம் இருந்து 1,021 புகார்கள் வந்துள்ளன.அது குறித்து நிபுணர்குழு ஆய்வு செய்து வருகிறது. பிப்ரவரி முதல் வாரத்திற்குள் முடிவுகள் வெளியிடப்படும் - TNPSC தலைவர் பாலச்சந்திரன்

🍒🍒எத்தனை % பாடம் குறைப்பு?

SCERT விளக்கம்.

முக்கியமான பாடங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

முன்னுரிமை வழங்கப்பட்ட பாடங்களை முதலில் நடத்த வேண்டும்.

பிறகு நேரம் இருந்தால் எஞ்சிய பாடங்களை நடத்திக் கொள்ளலாம்.

போட்டித் தேர்வுக்கு தயாராகுவோர் முழுப் பாடத்தையும் படிக்கவேண்டும்.

🍒🍒நாளை உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் நாளை காலை பிரதமர் மோடியையும் சந்திக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

🍒🍒கர்நாடகத்தில் பசுவதை தடை அவசர சட்டம் திங்கட்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.

இந்த சட்டத்தின்படி மாடுகளை கொல்ல முடியாது.

வயதான மாடுகளை வளர்க்க முடியாவிட்டால் அதை கோசாலைகளில் விட்டுவிட வேண்டும்.13 வயதுக்கு மேற்பட்ட எருமை மாடுகளை கொல்ல உரிய முன் அனுமதி பெறவேண்டும்.சட்டத்தை மீறுபவர்களுக்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

🍒🍒கமல்ஹாசனுக்கு காலில் அறுவை சிகிச்சை

சில நாட்களுக்கு பிரச்சாத்திற்கு ஓய்வு                                                                   

🍒🍒நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில்,நேற்று 2-வது நாளாக தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.

🍒🍒தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு எந்தவித உடல் உபாதைகளும் ஏற்படவில்லை: அமைச்சர் விஜயபாஸ்கர்.

🍒🍒குஜராத்தில் உள்ள வல்லபாய் படேல் சிலை பகுதிக்கு சென்னையிலிருந்து சிறப்பு ரயில் சேவை நேற்று முதல் தொடக்கம்.

🍒🍒காவிரி டெல்டாவை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்குமாறு விவசாயிகள் கோரிக்கை; பருவம் தவறி பெய்த மழையால் லட்சக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் அழிந்துவிட்டதாக வேதனை.

🍒🍒தேர்தல் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கத் தடை;

மாநில அரசுகளுக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் திடீர் உத்தரவு.

🍒🍒ரஷியாவில் உருவாக்கப்பட்டுள்ள ஸ்புட்னிக்-வி கரோனா தடுப்பூசியின் 3-ஆம் கட்ட சோதனையை மேற்கொள்ள டாக்டா் ரெட்டீஸ் நிறுவனத்துக்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) அனுமதி அளித்துள்ளது.

🍒🍒அமெரிக்காவின் அடுத்த அதிபர் ஜோ பைடன் வரும் 20 ஆம் தேதி பதவியேற்கவிருக்கும் நிலையில், நாடு முழுவதும் வன்முறை நிகழலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

🍒🍒தொற்றை தடுப்பதற்காக ஜப்பான் அரசு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இந்த கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு தண்டனை வழங்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

🌹🌹பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் முன் இதை கவனியுங்க.

இந்தியாவில் கடந்த மார்ச் முதலாக கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வந்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து அரசு முடிவெடுத்துள்ளது.

அந்தவகையில் நாளை ஜன.19 முதல் 10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

👉1. பள்ளிக்கு வரும் மாணவர்கள் பெற்றோரிடம் கடிதம் பெற்று வரவேண்டும்.

👉2. தனியார் பள்ளிகள் திறப்பதற்கு முன் அனுமதி பெற வேண்டும்.

👉3. பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள், மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

👉4. வாரத்தின் ஆறு நாட்கள் பள்ளிகள் செயல்படும்.

👉5. ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும்.

👉6. 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் விரும்பினால் பள்ளிக்கு வரலாம்.

👉7. பெற்றோரின் சம்மதத்துடன் மாணவர்கள் வீட்டிலிருந்தே படிக்கலாம்.

👉8. மாணவர்களை பள்ளிக்கு வருமாறு பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்தக் கூடாது.

👉9. வகுப்பறையில் 25 மாணவர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

👉10. உடற்கல்வி விளையாட்டு பாட வேளைகள், என்சிசி, என்எஸ்எஸ் நடவடிக்கைகள் அனுமதிக்கப்படாது.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...