கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கோவிட் 19 பொருட்கள் வாங்க அரசு பள்ளிகளுக்கு நிர்பந்தம்...

 


தமிழகத்தில் பள்ளிகள் திறக்காத நிலையில் பள்ளி மானிய நிதியில் இருந்து தனியார் நிறுவனங்களின் கோவிட் 19 தடுப்பு பொருட்கள் கொள்முதல் செய்ய அரசு தலைமையாசிரியர்கள் கட்டாயப்படுத்தப் படுகின்றனர். 

ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்டம் மூலம்நடப்பு கல்வியாண்டில் பள்ளிகளை பராமரிக்க மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ரூ. 25,000, ரூ.50,000, ரூ.75,000 மற்றும் ரூ.1 லட்சம் என நான்கு பிரிவுகளில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் இருந்துபள்ளி மேலாண்மை மற்றும் வளர்ச்சி குழு தீர்மானம் நிறைவேற்றி பள்ளிக்கு தேவையான பொருட்கள் மற்றும் பராமரிப்புக்காக செலவிட வேண்டும்.ஆனால் தற்போது ஒதுக்கப்பட்ட நிதியில் 50 சதவீதம் கோவிட் 19 தடுப்புக்கான சானிடைசர்ஸ், மாஸ்க், பிங்கர் புல்ஸ் ஆக்ஸிமீட்டர், தெர்மா மீட்டர் உள்ளிட்டவை கொள்முதல் செய்ய வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளது.

இப்பொருட்களை பள்ளிகளில் நேரடியாக சப்ளை செய்ய சில தனியார் நிறுவனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இந்நிதி ஒதுக்கப்பட்ட மறுநாளே அந்நிறுவனத்தினர் பள்ளிகளுக்கு சென்று 'தங்களிடம் தான் கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது' என கூறி கோவிட் 19 பொருட்களை இறக்கி மொத்த நிதியில் 50 சதவீத்திற்குகாசோலை கேட்பதால் தலைமையாசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சில மாவட்டங்களில் அப்பொருட்களை தலைமையாசிரியர்கள் கொள்முதல் செய்ய அதிகாரிகள் வாய்மொழி உத்தரவிடுகின்றனர். 

தலைமையாசிரியர்கள் கூறியதாவது: பள்ளி ஆய்வகங்களுக்கு அறிவியல் உபகரணங்கள் கொள்முதல் செய்யும் போதும் இதே பிரச்னை எழுகிறது. நாங்கள் ஆர்டர் கொடுக்காமல், பள்ளி மேலாண்மை மற்றும் வளர்ச்சி குழு தீர்மானமின்றி தனியாரிடம் எவ்வாறு பொருட்கள் கொள்முதல் செய்ய முடியும்.'இது அமைச்சர் அலுவலக உத்தரவு கொள்முதல் செய்யுங்கள்' என கல்வி அதிகாரிகள் வாய்மொழியாக கூறி கட்டாயப்படுத்துகின்றனர். பிரச்னை என வந்துவிட்டால் நாங்கள் தானே மாட்டிக்கொள்வோம். பொருட்கள் வாங்கிக் கொள்ளும் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு கவரில் ரூ.1000 வைத்து அந்நிறுவனம் லஞ்சம் தருகிறது. 

நேர்மையானவர்கள் நிறுவனத்தினரை எச்சரித்து அனுப்பி வைக்கிறோம். மாவட்டம் வாரியாக முறையான டெண்டர் விடுத்து குறைந்த விலைப் பட்டியல் அளிக்கும் நிறுவனங்களில் பொருட்கள் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Live Webinar Link for Head Masters and English Teachers

தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கான Live Webinar Link  (THOOTHUKKUDI, VILLUPURAM, SALEM, DHARMAPURI, ERODE, TANJAVUR Dt only) ...