கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய செய்திகள் தொகுப்பு... 27.01.2021(புதன்)...

 


🌹அறிவை விட புரிதல் தான் மிகவும் ஆழமானது.

நம்மை அறிந்தவர் பலர் இருப்பர்.

ஆனால்,நம்மை புரிந்தவர் ஒரு சிலரே இருப்பர்.!

🌹🌹இன்றைய காலத்தில் பொய் பேசியதால் உருவான பகைகள் குறைவு. ஆனால் உண்மை பேசியதால் உருவான எதிரிகள் தான் அதிகம்.!!

🌹🌹🌹எல்லோரும் நல்லவர்கள் என்று நினைப்பது தவறில்லை.

ஆனால் எல்லா நேரமும் நல்லவர்களாகவே இருப்பார்கள் என்று நினைப்பது தான் தவறு.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

⛑⛑அரசு கலை அறிவியல் கல்லூரி முதலாண்டு மாணவர்கள் 40% பேர் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கவில்லை

⛑⛑அழகப்பா பல்கலைக்கழகத்தில் Summer Sequential Programme மூலம் பயின்ற M.Phil., படிப்பானது பகுதிநேர M.Phil., படிப்புக்கு இணையானது - பல்கலைக்கழக பதிவாளர் அறிவிப்பு

⛑⛑அரசாணை 15- கௌரவ விரிவுரையாளர்களுக்கு நவம்பர் 2020 முதல் மார்ச் 2021 வரை ஐந்து மாதங்களுக்கான தொகுப்பூதியம் வழங்குதல் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது.

⛑⛑ஒன்பது, பிளஸ் 1 வகுப்புகளை பிப்ரவரி 1 முதல் துவங்கலாம் என அதிகாரிகள் தரப்பில் அரசுக்கு ஆலோசனை : முதல்வரின் ஒப்புதல் பெறப்பட்டு விரைவில பள்ளிகள் திறக்கப்படும்.

⛑⛑மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடல் வெப்பநிலையை தலைமையாசிரியர்கள் தொடர்ந்து கண்காணிக்க பள்ளிக்கல்வித் துறை  அறிவுறுத்தியுள்ளது. 

⛑⛑மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்விற்கு பெயர்ப்பட்டியல் தயாரிக்க அனுமதி : மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் 27.01.21 - 01.02.21 க்குள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சரிபார்த்து உறுதிப்படுத்த உத்தரவு. 

⛑⛑பிளஸ் 2 மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், ‘நீட்’ பயிற்சி வகுப்புகளையும் அடுத்த மாதம் நேரடியாக நடத்த பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

⛑⛑சென்னை பல்கலை.யில் தொலைதூர இளநிலை, முதுநிலை, எம்.பி.ஏ படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வு முடிவு வெளியீடு :  www.ideunom.ac.in-ல் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

⛑⛑நடப்பு கல்வியாண்டில் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது

⛑⛑அமைச்சர்கள், நீதிபதிகள், எம்எல்ஏக்கள் அரசுப் பள்ளிகளைத் தத்தெடுக்க வேண்டும்: ஒடிசா முதல்வர் வலியுறுத்தல்

⛑⛑CBSE தேர்வு அட்டவணையை விரைவாக வெளியிடுங்கள்: மாணவர்கள் வலியுறுத்தல்

⛑⛑டிக் டாக் யூசி பிரவுசர்,ஷேர் இட் உள்ளிட்ட  59 சீன செயலிகளுக்கு நிரந்தர தடை விதித்து மத்திய அரசு உத்தரவு

⛑⛑மத்திய அரசின் பொறுப்பற்ற அணுகுமுறை, விவசாயிகளிடம் காட்டிய பாரபட்சமே டெல்லி வன்முறைக்கு காரணம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாடியுள்ளார்.

டெல்லியில் விவசாயிகள் பேரணியின் போது ஏற்பட்ட வன்முறை மனவேதனை அளிக்கிறது. விவசாயிகளிடம் நம்பிக்கை ஏற்படுத்தாமல் கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்

⛑⛑விவசாயிகளை நேரடியாக அழைத்து பிரதமரே பேச வேண்டும் 

போராட்டத்தில் வன்முறை சூழுமானால், அரசின் திசைதிருப்பும் அரசியலுக்கு உதவியாக அமைந்துவிடும் என்பதை விவசாயிகள் உணர வேண்டும்.

2 மாதங்களுக்கும் மேலாக அமைதி வழியில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் மத்திய அரசு உதாசீனம் செய்து வருகின்றது.

மத்திய அரசின் பின்னடைவான அணுகுமுறையின் விளைவுதான், குடியரசு தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் நடந்த போராட்டக் காட்சிகள்.

வன்முறை தவிர்க்கப்பட வேண்டும், ஜனநாயக நெறிக்கு உட்பட்டு அமைதி வழியில் தீர்வு காண இருதரப்பினரும் முயற்சி செய்ய வேண்டும் 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

⛑⛑தடுப்பூசி ஒன்றே கொரோனாவுக்கு தீர்வு 

உலக சுகாதார அமைப்பு

⛑⛑பாப்பம்மாள் பாட்டிக்கு பொன்னாடை போர்த்தி திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து.

பத்மஸ்ரீ விருது பெற்ற கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 105 வயதான பாப்பம்மாள் பாட்டி,நேற்று கோவை வந்த  திமுக தலைவர் ஸ்டாலினை தனியார் ஹோட்டலில் நேரில் சந்தித்தார்.

பாப்பம்மாள் பாட்டிக்கு பொன்னாடை போர்த்தி திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து.

⛑⛑விவசாயிகள் மீது ஒடுக்குமுறையை ஏவியது வன்மையாக கண்டிக்கத்தக்கது 

தொல்.திருமாவளவன்

⛑⛑மத்திய அரசின் தோல்வியே டெல்லியில் நடந்த சம்பவத்துக்கு காரணம் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடந்த சம்பவத்தை யாரும் ஆதரிக்க மாட்டார்கள். மத்திய அரசு தனது பொறுப்பை நிறைவேற்றவில்லை. இனிமேலாவது மத்திய அரசு முதிர்ச்சியுடன் செயல்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்

⛑⛑ஜல்லிக்கட்டு, ஸ்டர்லைட் போராட்டங்களை எப்படி வன்முறையாக்கினார்களோ, அதேபோல வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்திய ட்ராக்டர் பேரணியையும் அங்குள்ள காவல்துறையினர் வன்முறைக் களமாக்கியுள்ளனர்

உதயநிதி ஸ்டாலின்

⛑⛑ஜனநாயகத்தை போற்றுகிற குடியரசு தினத்தில் சர்வாதிகாரத்தை கட்டவிழ்த்துவிடுவதை ஒரு போதும் ஏற்க முடியாது

உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

⛑⛑டெல்லி வன்முறைக்கு அமித்ஷாதான் பொறுப்பேற்க வேண்டும்

கே.எஸ். அழகிரி

⛑⛑ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் அத்தனை பேரும் மத்திய அரசின் அராஜக செயலை கண்டிக்க முன்வர வேண்டும்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கோரிக்கை

⛑⛑திமுக- காங் கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை

பாஜகவை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்

நாடாளுமன்ற தேர்தல் வெற்றி சட்டப்பேரவையிலும் எதிரொலிக்கும்

மு.க. ஸ்டாலின்

⛑⛑குடியரசு தினமான நேற்று விவசாயிகள் மீது தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சை மத்திய அரசு நடத்தி இருக்கிறது

இந்த அடக்குமுறைக்கு கண்டனம் தெரிவிக்கின்றேன்

வைகோ

⛑⛑கார்ப்பரேட் முதலாளிகளை குளிர்விக்க விவசாயிகளை உயிர்பலி கொடுக்க துணிந்துவிட்டார் பிரதமர் மோடி

கருணாஸ் எம்எல்ஏ

⛑⛑இந்தியாவின் குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள ஆவலாக இருந்தேன்.

ஆனால் கொரோனா என்னை தடுத்துவிட்டது  :  

இங்கிலாந்து பிரதமர்

⛑⛑4 ஆண்டு சிறைத் தண்டனைக்குப் பிறகு இன்று காலை 10.30 மணிக்கு சசிகலா விடுதலை

⛑⛑நிலைமை இவ்வளவு மோசமாக மோசமடைய மத்திய அரசு அனுமதித்தது வருந்தத்தக்கது

ஆம் ஆத்மி கட்சி

⛑⛑சசிகலா உடல்நிலை சீராக உள்ளது

சசிகலா உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது

சசிகலா உடலில் சர்க்கரை அளவு 178-ஆகவும், ஆக்சிஜன் அளவு 97-ஆகவும் குறைந்துள்ளது

கொரோனா தொற்றுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவமனை நிர்வாகம்

⛑⛑கொரோனா காரணமாக இந்தாண்டு நடைபெறும் பொதுத்தேர்வில் மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

மாணவர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்ப்பது போல எளிய வகையில் தேர்வுகள் இருக்கும். மேலும் பொதுத்தேர்வில் கொண்டுவரப்படும் மாற்றங்கள் பற்றி முதல்வரின் அனுமதி பெற்று அறிவிப்பு வெளியாகும் என அவர் தெரிவித்துள்ளார்

⛑⛑மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவில்லை என்றால் பொதுவாழ்க்கையிலிருந்து விலகத் தயார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

⛑⛑முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைக்கும் இடத்துக்கு வந்து, அவருடன் நேரடியாக விவாதிக்கத் தயார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.

சென்னை திருவொற்றியூரில் திமுக சார்பில் மொழிப் போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், கொரோனா காலத்திலும் கொள்ளையடித்த ஆட்சிதான் அ.தி.மு.க ஆட்சி எனவும், பிளீச்சிங் பவுடர் வாங்குவதில் கூட அ.தி.மு.க அரசு ஊழல் செய்துள்ளதாகவும் விமர்சித்தார்.

இதற்கெல்லாம் நான்கு மாதங்களில் தண்டனை வாங்கித் தரும் பொறுப்பு தமக்கு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை திரும்ப பெற்றுவிட்டு வந்தால், எடப்பாடி பழனிசாமியுடன் விவாதிக்க தயார் எனவும் மு.க.ஸ்டாலின் கூறினார். கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தப்படவில்லை எனவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

⛑⛑சட்டமன்ற வாரியாக தமிழக சட்டமன்ற தேர்தல் நடத்தும் தேர்தல் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அரசிதழில் வெளியீடு

⛑⛑லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்

⛑⛑மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குவருக்கு தமிழக அரசு சார்பில் வழங்கும் கோட்டை அமீர் விருது கோயமுத்தூரைச் சேர்ந்த அப்துல் ஜபாருக்கு வழங்கப்படுகிறது.

⛑⛑தமிழகத்தில் சிறந்த காவல் நிலையங்களுக்கான முதலமைச்சர் விருதுகள்:

👉1. சேலம் நகர காவல் நிலையம் 

👉2. திருவண்ணாமலை நகர காவல் நிலையம் 

👉3. சென்னை கோட்டூர்புரம் காவல்நிலையம்

⛑⛑கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு பொதுத்தேர்வு எளிமையாகவே இருக்கும் - அமைச்சர் செங்கோட்டையன்.

⛑⛑105 வயது விவசாயி பாப்பம்மாள் அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளதற்கு திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

⛑⛑அனைத்து முருகன் கோவில்களிலும் தமிழில் மந்திரம் ஓதினால்,கந்த சஷ்டி கவசம் பாடினால் வேல் ஏந்தி அலகு குத்தி முருகா முருகா என்று வலம் வருகிறேன்.

தமிழ் கடவுளுக்கு சமஸ்கிருத மந்திரம் ‌எதற்கு?

-திமுக  நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா.

⛑⛑சசிகலாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி வழக்கறிஞர் ராஜராஜன் மத்திய உள்துறை செயலாளருக்கு மனு.

⛑⛑டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறையை ஏற்றுக்கொள்ள முடியாது; விவசாயிகள் உடனே டெல்லி எல்லைக்கு திரும்ப வேண்டும் - பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் கோரிக்கை.

⛑⛑தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் தேர்தலை நடத்த 234 தொகுதிகளுக்கும் அதிகாரிகளை நியமித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு உத்தரவு.

⛑⛑29ஆம் தேதி முதல் புதிய கோணத்தில் பரப்புரை; "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" என்னும் சந்திப்பை தொடங்குகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

⛑⛑கொரோனா தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வை குடிமக்களுக்கு ஏற்படுத்த 15 கோடி அமெரிக்க டாலர் நிதியினை கூகுள் நிறுவனம் ஒதுக்க உள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சுந்தர்பிச்சை தெரிவித்துள்ளார்.

⛑⛑அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் ஆட்சி நிர்வாகத்தில் மேலும் சில இந்திய அமெரிக்கர்கள் முக்கியமான பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

⛑⛑CPS ஒழிப்பு இயக்கம் : மதுரை மாவட்டம் : பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்யக்கோரி கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் : நாள்: ஜனவரி 29

⛑⛑26 குழந்தைகளைக் காப்பாற்றிய ஆசிரியை முல்லைக்கு வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கம்: முதல்வர் பழனிசாமி வழங்கினார்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...