கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு தேர்ந்தோர் பட்டியல் தயாரித்தலில் கடைபிடிக்கப்படுபவை...

 பள்ளியில் பணிபுரியும் ஒரு பட்டதாரி ஆசிரியர் எந்த பாடத்தில் பணிபுரிந்தாலும் இவர் முதுகலை ஆசிரியராக செல்ல விரும்பும் பாடத்தில் முதலில் இளங்கலையும் பிறகு முதுகலையும் முடித்திருந்தால் முதுகலை ஆசிரியராக பதவி உயர்வில் செல்ல தகுதியுடையவராகிறார். எனவே பணிபுரியும் பாடத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம். எந்த பாடத்திற்கு PGயாக செல்ல விரும்புகிறாரோ அந்த பாடத்தில் முதலில் UG முடித்துவிட்டு பிறகு PG முடித்திருக்க வேண்டும். மேலும் UG முதலில் முடிக்காமல் PG முடித்து, பிறகு UG முடித்திருந்தால் Same Majorக்கு தகுதியில்லை என பள்ளிக் கல்வித்துறை கூறுகிறது.மேலும் 10ம்  வகுப்பு, 11ம் வகுப்பு, 12 ம் வகுப்பு, பிறகு இளங்கலை, பி.எட் அல்லது முதுகலை பிறகு பி.எட் முடித்திருந்தாலும் முதுகலை ஆசிரியராக பதவி உயர்வில்  செல்லலாம். தற்போது Cross Major எந்த பாடத்திற்கும் கிடையாது என்று  பள்ளிக் கல்வித்துறை இறுதியாகவும், உறுதியாகவும் முடிவு செய்து உள்ளது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கல்லூரிக் கனவு கையேடு - மே 2025

கல்லூரிக் கனவு கையேடு - மே 2025 Kalloori Kanavu Guide - May 2025 - College Dream Guide கல்லூரிக் கனவு கையேடு - மே 2025 - தமிழ்நாடு அரசு வெளி...